விஜய் படத்தில் நடித்தற்காக வருத்தப்படும் அஜித் பட நடிகை

akshara gowda in thuppaki movieநடிகர் விஜய் படத்தில் நாம் நடிக்க மாட்டோமா? என பல கலைஞர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அவரின் சமீபத்திய பேட்டியில்… துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் நட்பு கிடைத்தது.

அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை.

அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் அழைத்தாலும் நடிக்க நான் ரெடி” என கூறியுள்ளார்.

உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post