‘தல 57’ படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தகவல்கள்

‘தல 57’ படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithஅஜித் நடிப்பில் உருவாகும் தல 57 பட பூஜையையொட்டி இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தினர்.

அதன்பின்னர் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்தி வந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்ப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு செல்லவிருக்கிறார்களாம்.

நவ. 12ஆம் தேதி முதல் கிட்டதட்ட 2 மாதங்களுக்கு இதன் சூட்டிங் நடைபெறுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விகேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம்

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Achcham Yenbadhu Madamaiyada stillsவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து, மீண்டும் சிம்பு-கௌதம் மேனன்-ஏஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

நீண்ட நாட்களாக தயாரிபில் இருந்த இப்படம் நாளை நவம்பர் 11ஆம் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்…

  • சிம்புவின் நண்பராக டான்ஸர் மாஸ்டர் சதீஷ் இதில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார்.
  • சிம்புவின் சிஸ்டரின் தோழியாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.
  • முதலில் நட்பாக பழகும் இவர்கள் பின்னர் காதலர்களாக மாறுகின்றனர்.
  • இப்படத்தின் முதல் பாதியிலேயே படத்தின் 5 பாடல்களும் இடம்பெறுகிறதாம்.
  • காரணம் இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க ஆக்ஷன் இருப்பதால், பாடல்கள் அதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.
  • இதில் பைக் பிரியராக சிம்பு நடித்துள்ளார். எனவே படுவேகத்தில் பைக்கை ஓட்டும் காட்சிகள் இருக்கிறதாம்.
  • மேலும் இது ரோடு ஜர்னி டைப் படமாக உருவாகியுள்ளது-
  • பிரச்சினை என்று வரும்போது நாம் ஓடி ஒளியக் கூடாது என்பதால்தான் அச்சம் என்பது மடமையடா என படத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார்களாம்.
  • இப்படத்தில் நாயகியாக முதலில் கமிட் ஆனவர் பல்லவி சுபாஷ்.
  • ஆனால் இந்த படம் தாமதம் ஆக, அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாகிவிட்டாராம். எனவேதான் மஞ்சிமா மோகனை தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கொண்டு வந்துள்ளார் இயக்குனர்.
  • இதில் இடம் பெற்றுள்ள தள்ளிப்போகாதே என்ற டியூனை பல முறை கேட்டும் கவிஞர் தாமரைக்கு புரியவில்லையாம்.
  • இருந்தாலும், பலமுறை கௌதம் விளக்கம் கொடுக்க கேட்டு கேட்டு எழுதியிருக்கிறார் தாமரை.
  • இதற்கான டியூனை விமானத்தில் பறந்துக் கொண்டே ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளார்.
  • சூட்டிங்குக்கு எப்பவும் சிம்பு லேட்டாகத்தான் வருவாராம்.
  • ஆனால் வந்த பின் மொத்த குழுவையும் ஜாலியாக வைத்திருப்பாராம். காட்சிகளை உடனே முடித்து கொடுத்து விடுவாராம்.
  • இப்படத்தை தமிழில் யாரும் தயாரிக்கவில்லை.
  • ஆனால் தெலுங்குப் பதிப்பிற்கு கிடைத்த பணத்தை வைத்தே இரண்டு படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக கௌதம் தெரிவித்துள்ளார்.
  • தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள்.
  • இதன் வெளியீட்டு உரிமையை ட்ரைடண்ட் ஆர்ட் ரவி பெற்றுள்ளார்.
முதன்முறையாக இணையும் விக்ரம்-கௌதம் மேனன்

முதன்முறையாக இணையும் விக்ரம்-கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram and Gautham Menonகமல், அஜித், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டார் கௌதம் மேனன்.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

தற்போது தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தைஇயக்கி வருகிறார்.

இதனையடுத்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதாம்.

விக்ரம்-கௌதம் மேனன் இணைவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியால் ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு வந்த நிலைமை

மோடியால் ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு வந்த நிலைமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashநேற்றுமுன் தினம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் கடந்த இரு தினங்களாக வீதியில், தெரு முனையில் இரண்டு பேர் ஒன்றாக நின்று பேசினால் அது 500, 1000 நோட்டு பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது.

மளிகை கடைகள் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இப்பிரச்சினை நீள்கிறது.

தமிழகம் முழுக்க பல அரங்குகளில் மக்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 150 அரங்குகள் காட்சிகளை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படியொரு சூழலில் ஜிவி பிரகாஷ் – நிக்கி கல்ராணி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முடியுமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து ஆலோசித்ததில் ‘இந்த நோட்டுப் பிரச்சினை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம்’ என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் டி சிவா கூறுகையில், “எல்லோரும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி வரும் நவம்பர் 17-ம் தேதி தமிழகம் மற்றும் உலகெங்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும். ” என்றார்.

கமலை பற்றி சிவாஜி என்ன சொன்னார்..? பிரபு நெகிழ்ச்சி

கமலை பற்றி சிவாஜி என்ன சொன்னார்..? பிரபு நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji kamal prabhuகமல் கௌரவ வேடத்தில் நடிக்க, பிரபுவின் 200வது படமாக உருவாகி இருக்கிறது ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

அமுதேஷ்வர் இயக்கியுள்ள இப்படத்தை துஷ்யந்ந் தன் ஈஷான் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்.

இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆஷ்னா சாவேரி, ஊர்வசி, எம்ஸ் பாஸ்கர், மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர்.

இதில் ‘மாலாக்கா’ என்கிற மலேசிய பெண் டானா நடிச்சிருக்கார் பூஜாகுமார்.

இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை இப்படக்குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது பிரபு பேசியதாவது…

‘ நான் 200 படங்களில் நடித்துவிட்டதை சாதனையாக பார்க்கவில்லை. என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

என் தந்தை அடிக்கடி கமலை பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்போது சொல்வார்.

டேய். கமல் நல்ல நடிகன்டா. என் கலையுலக வாரிசு அவன்.

சினிமாவுல எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கான். எங்க காலத்துல அவ்வளவு தொழில்நுட்பம் இல்லை.

என் தோள்மேல உட்கார்ந்துக்கிட்டு எல்லாத்தையும் பார்க்குறான்.”

என்று தன் தந்தை சிவாஜி சொன்னதை நெகிழ்ச்சியுடன் கூறினார் பிரபு.

சிவாஜி-டிஆர்-விஜய் வரிசையில் ஜெயம் ரவி

சிவாஜி-டிஆர்-விஜய் வரிசையில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi son aaravநடிகர்-நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது சகஜம்தான்.

ஆனால் அவர்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது அரிதான ஒன்று.

கதை அமையும்போது அப்படி வாய்ப்பு வந்தால் நடிப்போம் என்பார்கள்.

இந்நிலையில் சாதனை படத்தில் சிவாஜி மற்றும் பிரபு இணைந்து நடித்தனர்.

ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல படங்களில் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் சிம்பு இணைந்து நடித்தனர்.‘

தியாகராஜன்-பிரசாந்த் மற்றும் நாசர்-லுத்புதீன் பாட்ஷா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, விஜய் அவரது மகன் சஞ்சய் உடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டுக்கு இணைந்து நடித்தார்.

தற்போது ஜெயம் ரவி தனது மகன் ஆரவ் உடன் சௌந்தரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இதனை ஜெயம் ரவியே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Jayam Ravi ‏@actor_jayamravi 3m3 minutes ago
Happiest day of my life! My son Aarav n I are acting together in #TikTikTik !!! God bless him

More Articles
Follows