‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் அஜித்துடன், ஹூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில் வெகு நாட்களாக வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

இதனிடையில் வலிமை குறித்து பட இயக்குனர் வினோத் & அஜித் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா இருவரும் தங்கள் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது…

ஊரடங்குக்கு முன்னர் சீனியர் நடிகர்களை வைத்து காட்சிகள் எடுத்தோம். ஊரடங்குக்கு பின்னர் சூட்டிங் தொடங்கிய போது கொரோனா பயத்தால் அந்த சீனியர் நடிகர்கள் வரவில்லை.

எனவே புதிய நடிகர்களை வைத்து மீண்டும் அதே காட்சிகளை எடுத்தோம்.

வெளிநாட்டில் ‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்படவுள்ளது.

ஊரடங்கு முடிந்தபின் வெளிநாட்டுக்கு சென்று அந்த சண்டைக் காட்சியை எடுக்கவுள்ளனர்.

ஒருவேளை வெளிநாடு பயணம் ஊரடங்கால் தாமதமானால் மாற்று ஏற்பாடும் தயாராக உள்ளதாம்.

சண்டைக் காட்சிகள் தவிர சிறுசிறு பேட்ச் ஒர்க் உள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைப் பொறுத்தவரை, இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் முடிந்து விட்டது.

பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Ajith movie Valimai Final shoot schedule updates

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *