தளபதி ரசிகர்கள் இந்தளவுக்கா கீழ இறங்குவாங்க.? கிண்டலடிக்கும் தல ரசிகர்கள்

bigil noticeதமிழ் சினிமாவில் விஜய்க்கு உள்ள மாஸ் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இவரது ரசிகர்களும் அடிக்கடி மாஸ் விஷயங்களை செய்து வருகின்றனர்.

பிரம்மாண்ட கட் அவுட் முதல் FDFS வரை இவர்களின் வரவேற்பும் பெரிய அளவில் இருக்கும்.

ட்விட்டர் டிரெண்டிங்கிலும் அடிக்கடி அசத்தி வருவது இவர்களின் வழக்கம்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 2 மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் விஜய் நடித்த பிகில் படத்தை திரையிட உள்ளனர்.

இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் பிட் நோட்டீஸ் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதில்…. பிகில் படத்தை பாருங்க.. டிஆர்பி யை உயர்த்துங்க என்ற வாசகத்தை அடித்துள்ளனர்.

பட ரிலீசுக்கு போஸ்டர் அடித்த காலம் போய்… இப்ப இவ்வளவு கீழ் இறங்கி விட்டார்களே என நெட்டிசன்கள் & தல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Attachments area

Overall Rating : Not available

Latest Post