தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துபாய் நாட்டிலிருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது…
துபாயிலிருந்து கடந்த 13-ம் தேதி காரைக்கால் வந்துள்ள 26 வயதுப் பெண்ணுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய சளி, உமிழ் நீர் மாதிரிகள் கடந்த 14-ம் தேதி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது கணவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்
அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
“இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில் முதல் முறையாக கடந்த மே 10-ம் தேதி சுரக்குடி விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை பார்த்தோம்.
பின்னர் மே 14ல் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் என்பதால் காரைக்கால் பச்சை மண்டலமானது.
தற்போது இந்த கொரோனா பாதிப்பு கர்ப்பிணி பெண்ணால் மீண்டும் ஆரஞ்சு மண்டலமாகியுள்ளது காரைக்கால்.
Again Karaikal became Corona Orange zone by Pregnant lady