தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் ‘மெர்சல்’.
இந்த படத்திற்காக டுவிட்டரில் ‘எமோஜி’யை அறிமுகம் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் இதை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங்கில் கொண்டு வந்து கொண்டாடினர்.
இதை கிண்டலடித்திருந்தார் நடிகை மீரா மிதுன்.
“எமோஜிக்காக செலவு செய்த பணத்தைக் கூட திரும்ப எடுக்க முடியவில்லை. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது.
ராமன் மேஜிக், உங்க சம்பளத்தை வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன், அப்படி வரவில்லை என்றால் விஜய்க்கு போன் செய்யுங்கள்,” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு வழக்கம்போல விஜய் ரசிகர்கள் மீராவை கழுவி கழுவி ஊற்றி கமெண்ட்டுக்களை வீசினர்.
இதனையடுத்து தான் இப்போது பொள்ளாச்சி சென்று கொண்டிருப்பதாக காரில் அமர்ந்து ஒரு போட்டோவை போட்டிருந்தார்.
அதன்பின்னர் சில மணிகளில் பொள்ளாச்சியில் ரூம்ல இருக்கேன். தைரியம் இருந்தா நேரில் வாங்கடா என கமெண்ட் போட்டு ஒரு போட்டோவை போட்டுள்ளார்.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மேலும் டென்ஷன் ஆகிவிட்டனர்.
படுகேவலமான வார்த்தைகளால் மீராவை திட்டி வருகின்றனர். தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லு.. எங்கிருந்தாலும் நேரில் வர்றோம் என கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.
Again and Again Model Meera Mithun clash with Vijay fans