தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Dev movie Karthi team up with Maanagaram directorலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் ‘மாநகரம்’.

இதில் சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

‘மாநகரம்’ படத்தை அடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

After Dev movie Karthi team up with Maanagaram director

After Dev movie Karthi team up with Maanagaram director

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief workஇரண்டு வாரங்களுக்கு முன்பு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

15 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் நிவாரணப் பணிகள் முடிந்தபாடில்லை.

இந்நிலையில் 2வது முறையாக கஜா பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள 7 பதிவுகள் இதோ….

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன அரிசியை” சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும். (2/6)

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் “கிராம நிர்வாக அதிகாரிகள்” கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”. (3/6)

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. (4/6)

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம். (5/6)

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும். (6/6)

கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

மேகா ஆகாஷை தடவி எடுக்கும் சிம்பு.; கட் சொல்லாத சுந்தர்.சி

மேகா ஆகாஷை தடவி எடுக்கும் சிம்பு.; கட் சொல்லாத சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Vantha Rajava Than Varuven Teaser goes viralலைகா தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை 2019 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

இதில் சிம்பு உடன் மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா, நாசர், ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 2 நிமிடம் 9 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசரை சற்றுமுன் வெளியிட்டனர்.

என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல. ஆனா, நம்பாம கெட்டவங்க நிறைய பேர்” என்ற டயலாக்குடன் ஆரம்பிக்கிறது.

இதில் செம ஸ்டைலிசான கெட்டப்பில் இருக்கிறார் சிம்பு. மேலும் டைரக்டர் சுந்தர் சி படத்திற்கு உரிய குடும்ப காலாட்டாக்களுடன் டீசர் உள்ளது.

சிம்பு ரசிகர்களை கவரும் வகையில் காதல் பற்றிய டயலாக்குகளும் உள்ளன. எனக்குத் தான் காதலி யாருமே இல்லையே என்கிறார்.

இறுதியாக டீசர் முடிந்தவுடன் சில நொடிகள் நாயகி மேகா ஆகாஷை கட்டித் தடவி கொண்டே இருக்கிறார். டைரக்டர் கட் சொல்ல மாட்டாரா.? என சிம்புவே கேட்பது போல முடிவடைகிறது.

Simbus Vantha Rajava Than Varuven Teaser goes viral

 

மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viralரஜினிகாந்த் நடித்த 2.0 படம் நேற்று முன் தினம் வெளியானது.

அந்த பரபரப்பு அடங்கவே இன்னும் சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் ரஜினி ரசிகர்களை இன்னும் குஷியாக்க பேட்ட பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.

மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பேட்ட போஸ்டரில் சிங்கிள் ட்ராக் குறித்த விஷயம் வெளியாகியுள்ளது.

அதில் மரண மாஸ் என்பது பாடல் வரிகளாகும். இது தலைவரின் குத்து என்று விளக்கம் அளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிள்ளார்.

இதில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viral

முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 120 கோடியை தொடும் 2.0

முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 120 கோடியை தொடும் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First day Box office collection report of 2pointO movieஇந்திய சினிமாவே பெருமைப்படும் வகையில் மிகுந்த பொருட்செலவில் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து நேற்று முன்தினம் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 88 கோடியை வசூலித்துள்ளதாகவும் உலகளவில் ரூ. 118 கோடியை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் முதல்நாளில் 2.64 கோடியையும் 2ஆம் நாளில் 2.13 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 கோடிக்கு நிகராகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தமாக 19 கோடி வசூல் செய்துள்ளதாம்.

வரி இல்லாமல் 12 கோடி ஷேராக விநியோகஸ்தர்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஹிந்தியில் 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக, பாலிவுட் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 5 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

First day Box office collection report of 2pointO movie

கே.பாலசந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் உருவாக்கும் *லட்டு*

கே.பாலசந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் உருவாக்கும் *லட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Malayalam bilingual film titled Ladduகிரிஸ்டல் கிரியேஷன்ஸ் அமுதா ஆனந்த் தயாரிப்பில் ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் P. ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “லட்டு“- குணமாக சொல்லுங்க.

இப்படத்தை இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை, தமிழ் படம் 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதுதவிர கேடி (A) கருப்பு துரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், பஞ்சராக்ஷரம் மற்றும் சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் வலுவான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கியுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரெட்டையர் இருவரை சிங்கள் பேரெண்ட்டான தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசும்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கி ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறவுள்ளது.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பை-லிங்குவல் படமாக வெளியாகவுள்ளது.

Tamil Malayalam bilingual film titled Laddu

laddu bilingual film

More Articles
Follows