சீமான் & ஹரி நாடார் தண்டிக்கப்பட வேண்டும்..; தற்கொலைக்கு முன்னர் விஜயலட்சுமி கடைசி வீடியோ

சீமான் & ஹரி நாடார் தண்டிக்கப்பட வேண்டும்..; தற்கொலைக்கு முன்னர் விஜயலட்சுமி கடைசி வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vijayalakshmi last video before suicide attemptவிஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜயலட்சுமி. தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

சீமான் தன்னுடன் இருந்ததற்கு இதுதான் ஆதாரம் என கூறி சில வீடியோக்களை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் சீமான் ‘ ஏய் பொண்டாட்டி நான் ஒன்னும் கெட்டவன் இல்லடி’ (டிவிஸ்ட்) கேடு கெட்டவன்டி ‘ என்று கூறியிருந்தார்.

இதை நெட்டிசன்கள் ட்ரோல் வீடியோக்களை வெளியிட்டனர்.

சீமான் இதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று ஜீலை 26ஆம் தேதி மாலை சற்றுமுன் தன்னுடைய கடைசி வீடியோ என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில்.. சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகிய இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஜாமீனில் வெளியே வர கூடாது.

நான் தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பின்குறிப்பு.. தற்கொலைக்கு முயற்சித்த அவர் அடையாரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இல்லை. நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் பிஆர்ஓ ரோகேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

Actress Vijayalakshmi last video before suicide attempt

வீடியோ பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்…

https://twitter.com/filmistreet/status/1287389097720295424

 

பாலிவுட் பாலிடிக்ஸ். : ஏஆர் ரஹ்மான் வாய்ப்புகள் தட்டி பறிப்பு…; வைரமுத்து ஆதங்கம்

பாலிவுட் பாலிடிக்ஸ். : ஏஆர் ரஹ்மான் வாய்ப்புகள் தட்டி பறிப்பு…; வைரமுத்து ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu support to AR Rahman on Bollywood gangism revelationதமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கோலோச்சினாலும் ஹிந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதற்கான காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

அண்மையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதில்…. ஹிந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும் ஏஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு வரும் பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிய ரஹ்மானுக்கு சினிமா உலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது.
சேகர் கபூர் ‘‘பாலிவுட் உங்களை கையாண்டதை விட அதிகமான திறமை உள்ளதை நிரூபித்து விட்டீர்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஹ்மான் ‘‘இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நாமது வாழ்க்கையில் இழந்த முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. அமைதி! இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். செய்வதற்கு இன்னும் சிறந்த விசயங்கள் உள்ளன’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஏஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக வைரமுத்து கூறியுள்ளதாவது…

அன்பு ரகுமான்! @arrahman
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.

என பதிவிட்டுள்ளார்.

Vairamuthu support to AR Rahman on Bollywood gangism revelation

‘லிப்ட்’ படத்தில் கவின் உடன் இணைந்த ‘சிங்கப்பெண்’ காயத்ரி ரெட்டி

‘லிப்ட்’ படத்தில் கவின் உடன் இணைந்த ‘சிங்கப்பெண்’ காயத்ரி ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kavin gayathri reddyஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி.

படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.

பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.

இப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,

“இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும் போது அதை நீங்கள் உணர முடியும். மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாப்பாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு. அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்தேன்.

இந்த லிப்ட் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியான பின் கரியரில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்

தூத்துக்குடி சென்ற உதயநிதி இ.பாஸ் எடுத்ததற்கு ஆதாரம் இல்லை.. – அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி சென்ற உதயநிதி இ.பாஸ் எடுத்ததற்கு ஆதாரம் இல்லை.. – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalin e pass issuesசாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்தனர் ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ்.

இவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சென்னையிலிருந்து காரில் சாத்தான்குளம் சென்றார் உதயநிதி.

சென்னை & பிற மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் உதயநிதியின் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ இபாஸ் அனுமதியை உதயநிதி பெறவில்லை என கூறப்பட்டது.

இதற்கு உடனடியாக உதயநிதி தரப்பில்… ‘இ-பாஸை காட்டிய பிறகே போலீஸார் ஒவ்வொரு தணிக்கைச்சாவடியிலும் பயணிக்க அனுமதித்தனர்” என்றார்.

ஆனால் இபாஸ் சான்றை அவர் பதிவிடவில்லை.

இந்த நிலையில் ரஜினி கேளப்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்தாரா? என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் ரஜினியின் இ-பாஸ் இணையத்தில் வெளியானது.

ஆனால் உதயநிதி இ-பாஸ் எடுத்து சென்றதற்கான எந்த ஆதாரமும் வெளியாகவில்லை.

இது திமுக & ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பான செய்திக்கு…

“திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு இ.பாஸ் எடுத்ததற்கு இன்று வரை ஆதாரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து விஷால் & ஜி.கே.ரெட்டி இருவரும் மீண்டது எப்படி..?

கொரோனா பாதிப்பிலிருந்து விஷால் & ஜி.கே.ரெட்டி இருவரும் மீண்டது எப்படி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal gk reddyகொரோனா வைரஸ் பாதிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 13.4 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோல் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் அர்ஜுனன் சகோதரியின் மகன் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு என தெரியவந்தது.

அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் & தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு என தெரிய வந்துள்ளது.

கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

எனவே இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

விஷால் தன் கைவசம் தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களை வைத்திருக்கிறார்.

அண்ணாத்த தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சூர்யா & பாண்டிராஜ்

அண்ணாத்த தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சூர்யா & பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya pandirajவெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் மற்றும் ஹரி இயக்கத்தில் ‘அருவா’ ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’, & ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய 2 படங்களையும் தயாரித்து நடித்திருந்தார் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் சூர்யா நடித்திருந்தார்.

பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows