இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

ஜீவா, சமந்தா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.

இவர் குண்டாக பப்ளிமாஸ் மாதிரி இருப்பார். இதனால் இவருக்கு நாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் நாயகியின் தோழியாக பல படங்களில் நடித்திருப்பார்.

இதனையடுத்து திடீரென ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்தார்.

அண்மையில் சஞ்சய் என்ற தொழிலதிபரை மணந்தார்.

தற்போது கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா.

எனவே மாலத்தீவில் எடுக்கப்பட்ட தன்னுடைய பிகினி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வித்யுலேகா பகிர்ந்துள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் சிலர் நெகட்டிவ்வான கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.

ஒரு சிலர் ஓவராகவே உங்க விவாகரத்து எப்போது? என்றும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமான வித்யூலேகா தன் ரிப்ளை பதிவில்…

“என் பிகினி உடை புகைப்படத்திற்கா இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்?

1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள்.

ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை உடுத்தும பெண்கள் மட்டும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறார்களா? என கேட்டிருக்கிறார் வித்யூலேகா.

Actress Vidyulekha’s reply to negative comments

Chellamma Glimpse : ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன்… வலிமை பாணியில் டாக்டர்

Chellamma Glimpse : ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன்… வலிமை பாணியில் டாக்டர்

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மிரட்டிய வினய் இதிலும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

அதில் குறிப்பாக ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியுள்ளது.

அண்மையில் அஜித்தின் வலிமை பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் படக்குழுவும் அதே பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

75 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயனின் அசத்தலான நடனம் இடம் பெற்றுள்ளது.

சில டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை பார்க்கும் போது ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் அசத்தியுள்ளார் எனலாம்.

முக்கியமாக இப்பாடலின் நடன இயக்குனரும் கலை இயக்குனரும் இந்த பாடலை ரசித்து செதுக்கியுள்ளனர் என்பதை பாடலை பார்த்தாலே தெரிகிறது. (பிரஸ் மீட்டில் இந்த பாடல் திரையிடப்பட்டு பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது)

இதோ செல்லம்மா.. பாடல்…

The peppy track Chellamma from Doctor is trending now

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் & #வாழவிடுங்க_அஜித்..; தல தளபதி ரசிகர்கள் மோதல்.. ஏன் தெரியுமா?

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் & #வாழவிடுங்க_அஜித்..; தல தளபதி ரசிகர்கள் மோதல்.. ஏன் தெரியுமா?

நடிகர்கள் விஜய் & அஜித்தின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.

தற்போது நேற்று நடந்த ஒரு சம்பவத்திற்காக அஜித்தை கலாய்த்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

நேற்று நடந்த நிகழ்வு இது தான்.. (அஜித்தால் வேலையிழந்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி)

ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அஜித்துக்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்.

எனவே நடிகர் அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது,

மேலும் வேலைக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் அந்த பெண்ணின் குழந்தையின் படிப்புக்கு உதவுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்நிலையில் நேற்று அக்டோபர் 4 மாலை நடிகர் அஜித் வீட்டின் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த போலீஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக #வாழவிடுங்க_அஜித் என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

உடனே அஜித் ரசிகர்கள் ச்சும்மா இருப்பார்களா..?

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா டைரக்டர் எஸ்ஏசி-க்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பதால் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என ட்விட்டரில்
ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சும்மா சொல்லக்கூடாது… நல்லாவே டரெண்ட் வார்த்தைகளை பிடிக்கிறாங்க..

Reason behind Thala Thalapathy fans social media fight

அண்ணாத்த’ புரொடியூசர்.. ‘அன்பே சிவம்’ டைரக்டர்..; தனுஷ் போடும் சக்ஸஸ் ரூட்

அண்ணாத்த’ புரொடியூசர்.. ‘அன்பே சிவம்’ டைரக்டர்..; தனுஷ் போடும் சக்ஸஸ் ரூட்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’, சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படம் மற்றும் தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

இதில் அண்ணாத்த இந்தாண்டு தீபாவளி ரிலீசாக நவம்பர் 4ல் வருகிறது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள மற்றொரு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுந்தர் சி. தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் அரண்மனை 3 அக்டோபர் 14ல் ஆயுத பூஜை விருந்தாக வெளியாகிறது.

இத்துடன் தலைநகரம் 2 படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் சுந்தர் சி.

இத கொஞ்சம் பாருங்க : மீண்டும் தனுஷ் – அமீர் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குனர்

இந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் படத்தை சுந்தர் இயக்குவார் என கூறப்படுகிறது.

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ & தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் தற்போது உள்ளன.

Dhanush next with this popular hit director ?

நிவின்பாலி – அஞ்சலி இணையும் பட சூட்டிங்கை தொடங்கிய சிம்பு பட புரொடியூசர்

நிவின்பாலி – அஞ்சலி இணையும் பட சூட்டிங்கை தொடங்கிய சிம்பு பட புரொடியூசர்

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR..

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது..

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார்.

கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி.

மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான்

தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை வரவழைத்து தரும் என எதிர்பார்க்கலாம்.

Director Ram’s new project kick starts

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற ‘சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்’ சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜெ.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழு பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

Why was Actor Vijay Viswa honoured with doctorate?

More Articles
Follows