சைனா தயாரிப்புகள் இனி வேணாம்.; சாக்‌ஷி அகர்வாலின் தேசப்பற்று

சைனா தயாரிப்புகள் இனி வேணாம்.; சாக்‌ஷி அகர்வாலின் தேசப்பற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sakshi Agarwal boycotts Chinese productsஇந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் நாடே அதிர்ச்சியானது.

ஏற்கெனவே சீனாவில் இருந்து உருவான கொரோனா நோயால் இந்தியாவில் பலர் மரணம் அடைந்து வரும் நிலையில் சீனாவின் இந்த கொடூர தாக்குதலால் சீனாவை வெறுத்து வருகின்றனர் இந்தியர்கள்.

எனவே சீனா தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டாம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலும் தன் உறுதிமொழியை அறிவித்துள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது.

எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்

Actress Sakshi Agarwal boycotts Chinese products

ரஜினிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு உதவி செய்த ரசிகர்கள்

ரஜினிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு உதவி செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans help to the boy who gave bomb threat to Rajiniஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை பார்த்தோம்.

வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினியின் வீட்டை சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது புரளி என்பதும் உறுதியானது.

இருந்தபோதிலும் போன் செய்த நபரை போலீசார் தேடி வந்தனர்.

கடலூரைச் சேர்ந்த 15 வயது 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னுடைய தந்தையின் மொபைல் போனை எடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவனை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று கொரோனா நிவாரண உதவிகள் செய்துள்ளனர்.

மேலும் தந்தை இல்லாத அவனுக்கும் சிறுவனின் தாய்க்கு அறிவுரை சொல்லி வந்துள்ளனர்.

சிறுவனின் தந்தை மன்னிப்பு கேட்பதாக ஒரு வீடியோ வெளியானது. ஆனால் அவனின் தந்தை அவரல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Rajini fans help to the boy who gave bomb threat to Rajini

அண்ணாத்த ஆடுறார்… அஸ்வின்குமாரை மகனே என பாராட்டிய கமல் (வீடியோ)

அண்ணாத்த ஆடுறார்… அஸ்வின்குமாரை மகனே என பாராட்டிய கமல் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal impressed with Ashwins dance on a treadmillகமல்ஹாசன் ஒரு சகலகலா வல்லவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அவர் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கினாலும் ஒரு நடன இயக்குனராக தான் முதலில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இதனால் அவரின் நடனத்திற்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.

பாலசந்தர் போன்ற இயக்குனர்களால்தான் தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடிந்தது. இல்லை என்றால் மலையாள படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி இருப்பேன் என்று கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் துருவங்கள் பதினாறு படத்தி நடித்த அஸ்வின்குமார் என்பவர் கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட்மில்லில் நடந்த படி நின்றபடி நடனமாடியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

தற்போது அந்த வீடியோவை பார்த்த கமல்.. நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!…

என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஒரு அப்பாவை போல தங்களை பார்ப்பதாக அஸ்வின்குமார் கமலுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.

இதோ அஸ்வின் குமார் ஆடிய ஆட்டம்…

https://twitter.com/ikamalhaasan/status/1273968183351734273

Kamal impressed with Ashwins dance on a treadmill

 

கபசுபரே… கேரளா ஆந்திரா டெல்லி போல ஆள வருக வாத்தி..; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

கபசுபரே… கேரளா ஆந்திரா டெல்லி போல ஆள வருக வாத்தி..; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madurai Vijay fans wall posters goes viral in internet tooநடிகர் விஜய் வருகிற ஜீன் 22ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால் மக்கள் அவதிப்படுவதால் தன் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என முன்பே கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் அடங்குவதாக இல்லை. தங்கள் தளபதியை வாழ்த்தி விதவிதமாக போஸ்டர்கள் அச்சடித்துள்ளனர்.

அதில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது..

கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா

என ஒட்டியுள்ளனர்.

மற்றொரு போஸ்டரில்.. எங்களை காக்கும் கபசுரரே என்று அச்சடித்துள்ளனர்.

அதாவது.. கொரோனாவில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கபசுப நீரை குடிக்க அரசு சொல்லியுள்ளது. அதை குறிப்பிட்டு விஜய்யை வாழ்த்தியுள்ளனர்.

மதுரை ரசிகர்கள்தான் இத்தகைய போஸ்டர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற போஸ்டர்கள் இதோ…

https://twitter.com/DrVijayGroup/status/1274238572028022784

Madurai Vijay fans wall posters goes viral in internet too

Madurai Vijay fans wall posters goes viral in internet too

அமெரிக்கா ரிட்டர்ன் பெண்ணை காதலித்து மணக்கும் கும்கி அஸ்வின்

அமெரிக்கா ரிட்டர்ன் பெண்ணை காதலித்து மணக்கும் கும்கி அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020ஆர்யா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் மொட்ட ராஜேந்திரனின் மகனாக நடித்திருந்தார் அஸ்வின் ராஜா.

அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் கும்கி படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதில் பிரபலமாக இவரை கும்கி அஸ்வின் என்றே அழைக்க தொடங்கினர் ரசிகர்கள்.

இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி சுவாமிநாதன் என்ற தயாரிப்பாளரின் மகன் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

இந்த நிலையில் வருகிற ஜீன் 24ஆம் தேதி அஸ்வினுக்கு திருமணம் நடக்கவுள்ளதாம்.

தன்னை 4 வருடமாக காதலிக்கும் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை தான் மணக்கவுள்ளார்.

வித்யா ஸ்ரீ சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள்.

அவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்துள்ளார்.

கொரோனா விதிமுறைகள் படி இந்த திருமணம் மிக எளிமையாக நடக்கவுள்ளதாம்.

Kumki Ashwin and Vidyasree to get married on 24th June 2020

சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

சுஷாந்த் சிங்கின் மரணத்தையும் விடாமல் படமாக்கும் பாலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh Rajput suicide reveals Reel and Real heroesகிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் அண்மையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

ஆனால் சுஷாந்த்தின் உறவினர்கள் அது தற்கொலை அல்ல கொலை என்று கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் சுஷாந்த்தின் மரணமே தற்போது சினிமாவாகிறது.

இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்க விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நபர்களை இந்தி திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்களின் போராட்டம் எப்படி பட்டது? என்பதை இந்த படம் சொல்லவிருக்கிறதாம்.

மேலும் பாலிவுட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை ஷாமிக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Film inspired by Sushant Singh Rajputs life in process

More Articles
Follows