சூப்பர் ஹீரோயின்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் பார்க்கலாம்.. – பிரியங்கா உபேந்திரா

சூப்பர் ஹீரோயின்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் பார்க்கலாம்.. – பிரியங்கா உபேந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.

பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர்.

இவர் நடிக்கும் 50வது படம் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” .

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” படத்தை த்ரிவிக்ரம் ரகு இயக்க குத்த முனி பிரசன்னா & ஜி. முனி வெங்கட் சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர்.. புருஷோத்தம் பி (SDC) உடன் இணைந்து தயாரிக்கின்றார்.

படம் குறித்து பேசிய பிரியங்கா உபேந்திரா…

நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். நான் 16 வயதில் மிஸ் கல்கத்தா ஆனேன், பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.

1999 – 2003க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன்.

அந்த நேரத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றினேன். விஜயகாந்த் சார், விக்ரம் சார், பிரபுதேவா, உபேந்திரா ஆகியோருடன் படங்களில் நடித்தேன்.

எனது முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ஹதத் பிரிஷ்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது. எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை.
அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது அவ்வளவு சுலபமல்ல, யாருடன் நடிப்பது?,என்ன மாதிரியான கதைகளை தெர்ந்தெடுப்பது? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்.. எனக்கென்று ஒரு இடத்தையும் நான் தக்கவைத்துக்கொண்டேன் .

குழந்தைகள் பிறந்த பிறகு எனக்கு 8 பெங்காலி படங்கள் கிடைத்தது
ஆனால், குழந்தைகளுடன் என்னால் கொல்கத்தா செல்ல முடியவில்லை.
அதனால், கன்னட படங்களில் மட்டுமே நடிக்க விரும்பினேன்.

பாலிவுட் படமான ‘ஐத்ராஸ்’ படத்தின் ரீமேக்கான ‘ஸ்ரீமதி’ படத்தில் உபேந்திராவுடன் நடித்தேன்.
அப்புறம் ரவிச்சந்திரன் சாருடன் ‘கிரேஸி ஸ்டார்’ பண்ணினேன்

பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது.

எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் திகில் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

பிறகு ‘இரண்டாம் பாதி’, ‘தேவகி’ ஆகிய படங்களில் நடித்தேன். ‘ ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” என்னுடைய 50வது படம்.

ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ரசிகர்களிடமிருந்து பெரும் அன்பு கிடைக்கும்பொழுது அவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் பல திருமணமான பெண்கள் என்னை சக்திவாய்ந்த வேடங்களில் பார்க்கும்பொழுது சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் கூறுகிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’
படத்தின் இயக்குனர் ரகு கடின உழைப்பாளி.
நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன்.

அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது . இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன் படம் செய்ய ஃபிட்டாக இருக்க வேண்டும்.
கதாபாத்திரத்தின் உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம்.

இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.

இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா”’வில் பார்க்கலாம்.

பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்.

‘ ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” ஒரு மிடுக்கான ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் பார்வையாளர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும

இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வணிகமாகவும் இந்த படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறோம்.

பாகுபலிக்குப் பிறகு கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், கந்தாரா,போன்ற திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படத் துறைகளுக்கு இடையே இருந்த எல்லைகளை களைந்துள்ளன.

” ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’வை கன்னடம் , தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம்.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்திற்குப் பிறகு நான் தற்போது கர்த்தா கர்மா கிரியா, விஸ்வரூபினி ஹல்லிகெம்மா, கைமாரா மற்றும் பெங்காலி படமான மாஸ்டர் ஆங்ஷுமான் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இவை தவிர தி வைரஸ், கமரோட்டு செக்போஸ்ட் 2, உக்ரா அவதாரா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இவ்வாறு பேசினார் பிரியங்கா உபேந்திரா.

Actress Priyanka Upendra talks about Detective Deekshana

ரஜினி,மோகன்லால் இடம்பெறும் ‘ஜெயிலர்’ முக்கிய காட்சியை படமாக்கிய நெல்சன்

ரஜினி,மோகன்லால் இடம்பெறும் ‘ஜெயிலர்’ முக்கிய காட்சியை படமாக்கிய நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரலுக்குள் ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

அந்தக் காட்சியை படக்குழுவினர் ஒரு வாரம் ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய சண்டைக் காட்சியில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், தமன்னா மற்றும் பிற பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.

இது படத்தில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் மற்றும் ரஜினிகாந்த் காட்சியில் பல ஸ்டண்ட்மேன்களுடன் சண்டையிடுவது போல் தெரிகிறது.

Important scene from Rajinikanth starrer ‘Jailer’ filmed

எனக்கு நண்பர்களே கிடையாது.. எங்கு போய் தேடுவேன்.?. – செல்வராகவன்

எனக்கு நண்பர்களே கிடையாது.. எங்கு போய் தேடுவேன்.?. – செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 20 வருடங்களாக இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் தற்போது நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷுடன் இவர் நடித்த சாணி காயிதம் என்ற படம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது கதையின் நாயகனாக ‘பகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் இயக்கமா.? நடிப்பா.? என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையில் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று மார்ச் 1ம் தேதி நண்பர்கள் மற்றும் நட்பை பற்றி குறிப்பிட்டு ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில்

“அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,??? https://t.co/k9MM8vCGSK

Netizens reaction on Selva Raghavan post about friendship

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.; அதிர்ச்சியில் விஷால்!?

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.; அதிர்ச்சியில் விஷால்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷாளின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கடந்த மாதம் ஸ்டண்ட் காட்சியின் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டது, ஒரு டிரக் கட்டுப்பாட்டை இழந்து விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வேகமாக மோதியது, இருப்பினும் அவர்கள் காயமின்றி தப்பித்தனர்.

10 நாட்களுக்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் திடீரென விளக்கு கம்பம் கீழே விழுந்ததில் குமணஞ்சாவடியைச் சேர்ந்த லைட்மேன் முருகன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இரண்டு நிகழ்வுகளிலும் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Another shocking accident in Vishal’s ‘Mark Antony’ ?

‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை?

‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஐஸ்வர்யா சில மாதங்களாக முன் தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருந்தார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7ம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்போர்ட்ஸ் டிராமாவில் ரஜினியின் தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Veteran south actress to play as Rajinikanth’s sister in ‘Lal Salaam’?

AK 62 படத்தில் கமல்ஹாசன் பட நாயகி.; மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார்.!

AK 62 படத்தில் கமல்ஹாசன் பட நாயகி.; மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில பிரச்சனைகளால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிய பட குழு தற்போது மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவா இயக்ஐஇ 2017-ம் ஆண்டில் வெளியான ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் காஜல்.

கொரோனா லாக்டவுனில் திருமணம் செய்து கொண்ட காஜல் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

மேலும் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajal aggarwal to pair opposite with Ajith again?

More Articles
Follows