ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓரு அதார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்க மலராய பூவே’ என்ற பாடலில் கண் புருவத்தை) சிமிட்டி இந்திய இளைஞர்களை கட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இதனால் இவருக்கு ஐப்ரோ அழகி் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

2018-ஆம் ஆண்டில் இவரின் படமே அதிகளவில் இணையத்தில் வைரலானது.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற ஹிந்தி திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

இவர் தன் இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் உரையாடுவார்.

”ஹேப்பி நியூ இயர்” என்ற படப் பாடலான “மான்வா லாகே” பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு சரன் நாயர் என்பவர்.., “உங்கள் உதட்டை கடிக்கனும். எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என கேட்டுள்ளார்.

பிரியாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் “ஹ்ம்ம்ம்ம் I will.. நான் செய்வேன்” என பதிலளித்துள்ளார்.

Actress Priya Prakash Varrier reply to her fan

priya

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakash (2)சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.

அதன் பின் அழகு ராஜா, VSOP, மிஸ்டர். லோக்கல் என படு தோல்விப் படங்களை கொடுத்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.

சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

அதாவது ஜிவி இசையில் ஒரு பாடலை அவர் பாடவிருக்கிறாராம்.

‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறாராம்.

இப்பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Actor Dhanush sung a song for GV Prakash next film

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanகலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியானது.

இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர கலைஞர்கள் விவரம் வருமாறு…

நடிகைகள் தேவதர்ஷினி, மதுமிதா

இயக்குனர்கள்

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா (நடிகர்)

இசையமைப்பாளர்கள், பாடகர்கள்:

டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து.

டிவி சீரியல் நடிகர்கள்

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா

நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியல் (கலைமாமணி விருது) தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிர்வாகிகள் லீக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிர்வாகம் மீது முதல்வர் அலுவலகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அதற்கான விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Complete details on Kalaimamani Awards 2021

ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை கெடு

ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai Soundararajanபுதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நமச்சிவாயம், காங்., – எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் ஆகியோர், கடந்த மாதம், 25ம் தேதி, தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமார் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதனிடையில. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழிசை சவுந்தரராஜன் இன்று (பிப்., 18) பொறுப்பேற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து அவரை முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு (நாராயணசாமி அரசு,) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னரின் செயலரிடம் மனு அளித்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.

அதன்படி வரும் பிப். 22ம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

Floor test for Narayanasamy govt on feb 22nd

வழி தெரியாமல் தடுமாறிய தல..; வேறு வழியில்லாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அஜித் (வீடியோ)

வழி தெரியாமல் தடுமாறிய தல..; வேறு வழியில்லாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அஜித் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தவிர நடிகர் அஜித்தை பொது வெளியில் பார்ப்பது அபூர்வம்.

ஆனால் சென்னை வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார் அஜித்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அஜித் அங்கு வர என்ன காரணம் ? என்ற கிடைத்த தகவலின் படி…

சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் அஜித்.

வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் அஜித்.

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இங்கு மாறி வந்துவிட்டதாக தெரியவந்தது.

அந்த கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்கு அஜித்தை பார்த்ததும் சிலர் அவருடன் செஃல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.

அங்கிருந்த போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்தனர்.

அந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜீத் லேட்டஸ்ட் புகைபடங்கள் இதோ https://www.filmistreet.com/photos/valimai-ajith-images-new-photos-thala-ajith-kumar-latest-stills/

Reason behind Ajith viral photos

காலம் முழுவதும் முன்னணி நடிகராக இருக்க முடியாது..; நடிகர் அஜித் ரூ. 18 லட்சம் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் புகார்

காலம் முழுவதும் முன்னணி நடிகராக இருக்க முடியாது..; நடிகர் அஜித் ரூ. 18 லட்சம் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seventh channel manickam narayananகடந்த 1996 ஆண்டில் நடிகர் அஜித் தன் பெற்றோர் பயணம் செல்வதற்காக ரூ.6 லட்சம் தேவை என கேட்டு பெற்றதாகவும் இதுவரை திருப்பி தரவில்லை என செவன்த் சேனல் நிறுவன மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் அந்த பணத்தை நான் வாங்கவில்லை என அஜித் ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த பணத்தை கொடுத்தற்கான வங்கி ஆதாரங்களையும் தற்போது வரை வைத்துள்ளதாக மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அதே போல பின்னர் மற்றொரு படத்திற்கு அட்வான்ஸாக ரூ. 12 லட்சம் கொடுத்து அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வேறு ஒரு படம் நடித்து தருகிறேன் என சொல்லி அந்த வாக்கை காப்பாற்றவில்லை எனவும் அத்தொகையை அஜித் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இந்த ரூ.18 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தரவில்லை என தெரிவித்துள்ளார்.

அஜித் மீது வழக்குப் போடப் போவதில்லை எனவும் அவரே தன் நிலை உணர்ந்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அவர் முன்னணி் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

அஜித் சமையல் செய்வது மட்டுமே நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மனிதர்களை மதித்தால் மட்டுமே நல்லவராக போற்றப்படுவார்கள்.

அஜித் இன்று முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் காலம் முழுவதும் அப்படி இருக்கப் போவதில்லை என கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

Seventh Channel producer blames Actor Ajith

More Articles
Follows