தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1980களில் நிறைய படங்களில் நடித்தவர் நடிகை சித்ரா.
‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
சரத்குமாரின் ’சேரன் பாண்டியன்’, ரஜினியின் ’ஊர்காவலன்’ பிரபுவின் ’என் தங்கச்சி படிச்சவ’ ’வெள்ளையத்தேவன்’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
‘சேரன் பாண்டியன்’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் இறப்பதாக காட்சி இருக்கும்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
சினிமா தவிர டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
ஒரு முறை நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்கவே அதன்பிறகு நல்லெண்ணெய் சித்ரா என்ற பெயரே இவரது பெயராக மாறி போனது.
கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இவர்களுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே மகள். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார்.
சித்ராவுக்கு வயது 56.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.இன்று மாலை 5′ மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது!
சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் அவரது வீடு உள்ளது.
தினம் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு அளிப்பார் சித்ரா. ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக கரையும். இதற்காகவே வெளியூர் பயணத்தை தவிர்ப்பார்.
சித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பராமரித்து வந்த நிலையில் இவர் காலமானது மிகுந்த வேதனைக்குரியது.
நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார். அந்த படம் 2020 ஜனவரி 3’ம் தேதி வெளியானது.
Sad news, #ActressChithra (56 )passed away due to cardiac arrest. Funeral @ 5pm
1A, Thiyagi Lohaiah Colony, Saligramam, Chennai-93 contact:9962109666
#RIPActressChithra
#RIPChithra
#RIPNallanaiChithra
Actress Nallennai Chithra passed away.










