தமிழ் மலையாளம் ஹிந்தி… 3 குதிரை சவாரி செய்யும் கோமல் ஷர்மா

தமிழ் மலையாளம் ஹிந்தி… 3 குதிரை சவாரி செய்யும் கோமல் ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actress Komal sharmas 3 language movie updates தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா.

அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா.. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது.

விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது…

“இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும்.

அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போது கூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு லட்டை எதிர்பார்த்த எனக்கு ஒரே படத்திலேயே மூன்று லட்டு கிடைத்தது.

அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார்.

படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன் தான் இருந்தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன.

மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர்.. அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

இதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருந்தேன்.

இந்த படத்தில் வரலாற்று கால உடைகள், ஆபரணங்கள், அப்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவற்றை அணிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது.

மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம்.. படக்குழுவினர் எங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்..

இன்னொரு பக்கம் மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார் இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது..

மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இந்தபடத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

அந்தவகையில் மரைக்கார் படத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்த படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைத்தது மிகப்பெரிய விஷயம்..

கடுமையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்” என்கிறார் கோமல் சர்மா.

மலையாளம், இந்தி என திசை திரும்பியதால் தமிழ் படங்கள் இரண்டாம் பட்சம் தானா என கேட்டால் பதறுகிறார் கோமல் சர்மா.. “தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன்.. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்.

Actress Komal sharmas 3 language movie updates

சைக்காலஜிஸ்ட் பணியை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்த மாலா பார்வதி

சைக்காலஜிஸ்ட் பணியை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்த மாலா பார்வதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam actress Maala Parvathi busy with Kollywoodமலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகைகளை பட்டியலிட்டால் அதில் நடிகை மாலா பார்வதிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.. அந்த அளவிற்கு தான் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை வெளிப்படுத்தி கொள்பவர் தான் மாலா பார்வதி.

2007-ல் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கிய டைம் என்கிற படத்தில் அறிமுகமான இவருக்கு பிரபல இயக்குநர் லால்ஜோஸ் இயக்கிய நீலத்தாமரை திரைப்படம்தான் முழு அடையாளம் தந்தது.

அடிப்படையில் சைக்காலஜிஸ்ட்டான இவருக்கு ஆரம்பத்தில் நடிப்பு மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் இவர் நடித்த படங்களை பார்த்துவிட்டு தங்களது படங்களில் இவர் தான் நடிக்க வேண்டும் என இயக்குநர்கள் தேடிவர ஆரம்பிக்க, வேறு வழியின்றி தான் பார்த்துவந்த மருத்துவ பணியையும் விட்டுவிட்டு முழுநேரமாக நடிப்பில் இறங்கிவிட்டார் மாலா பார்வதி.

சினிமாவுக்காக நடிப்பு பயிற்சியையும் முறையாக கற்றுக்கொண்டார். மலையாளத்தில் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களுக்கு குறையாமல் நடித்து வரும் பிஸியான நடிகையான இவரை விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதைத் தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்த நிமிர் படத்தில் பார்வதி நாயரின் அம்மாவாக நடித்திருந்தார் மாலா பார்வதி.

அந்தப்படத்தில் இருவர் பெயரும் பார்வதி என்று இருந்ததால் குழப்பத்தை தவிர்க்க பிரியதர்ஷனின் ஆலோசனை படை மாலா பார்வதி என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்திலும் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் என இரு மொழிப்படமாக உருவான வாயை மூடி பேசவும் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தில் இவருக்கும் சீனியர் காமெடி நடிகர் சுராஜூக்குமான காதல் எபிசோட் ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள மரைக்கார் படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மாலா பார்வதி.

அதேபோல தமிழில் விஷ்ணு விஷால், தெலுங்கில் நானி, சமந்தா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘மாறா’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அம்மாவாக என இளம் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று பிஸியாக நடித்து வருகிறார் மாலா பார்வதி.

மலையாளத்தை போல தமிழிலும் ஒரு சிறந்த நடிகை என்ற பெயரை பெறவேண்டும் என்பதே இவரது விருப்பமாக இருக்கிறது. அந்தவிதமாக தமிழ்த்திரையிலும் தவிர்க்க முடியாத ஒரு ‘அம்மாவாக இவர் வலம் வருவார் என நம்பலாம்.

Malayalam actress Maala Parvathi busy with Kollywood

BREAKING நான் வச்ச புள்ளி அரசியல் சுனாமியாக மாறும்… – ரஜினி

BREAKING நான் வச்ச புள்ளி அரசியல் சுனாமியாக மாறும்… – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I started with dot soon it will became political Tsunami says Rajini‘சாணக்யா’ என்ற யூடிப் சேனலின் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது…

அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன்.

உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார்.

திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

அவராக வெளியே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. முதல் முறையாக, தேர்தலில் வெற்றி பெற்றார்.

அடுத்து, 1991ல், காங்கிரஸ் கட்சியோடு, ஜெ., கூட்டணி வைத்தார். ராஜிவ் படுகொலை செய்யப்பட்டதால் தி.மு.க.,விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக, ஜெ., வெற்றி பெற்றார்.

ஆந்திராவில், ஒரே ஆண்டில், மூன்று முதல்வரை, இந்திரா காந்தி மாற்றினார்.

‘ஆந்திராவை தெலுங்கர் ஆள வேண்டும்’ என, என்.டி.ராமராவ் கட்சி துவக்கினார். அலை உருவானது; அவர் முதல்வரானார்.எனவே, அலை முக்கியம்.

நான் கொஞ்ச நாள் முன், புள்ளி வைத்தேன். அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது.

அதை யாரும் தடுக்க முடியாது. இது, மக்கள் மத்தியில் உருவான சுழல். அதை, வலுவான அலையாக மாற்ற, ரஜினி வந்தாக வேண்டும்; ரஜினி ரசிகர்களும் வருவார்கள்.

அந்த அலை, கரையை நெருங்க நெருங்க, தேர்தலை நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும். அது, ஆண்டவன் கையில் உள்ளது. அந்த ஆண்டவன், மக்களாகிய நீங்கள் தான்; நீங்கள் தான், அதை உருவாக்க வேண்டும்; அது உருவாகும்.

அப்போது அற்புதம் நிகழும். அதிசயம் நிகழும்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

I started with dot soon it will became political Tsunami says Rajini

பாண்டே கிட்ட மாட்டிக்காதேன்னு சிவகுமாரு சொன்னாரு… – ரஜினி

பாண்டே கிட்ட மாட்டிக்காதேன்னு சிவகுமாரு சொன்னாரு… – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Ranraj Pandey achievements at Chanakya event பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்யா என்ற யூடிப் சேனலின் முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பாண்டேவின் நண்பர் என்ற முறையில் கலந்துக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது….

தினமலர் பத்திரிக்கையில் இருந்து பின்னர் தந்தி டிவிக்கு வந்தார் ரங்கராஜ் பாண்டே.

அவர் நடத்தும் கேள்விக்கென்ன பதில் மற்றும் நடுவராக இருக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பேன். அவரின் ரசிகனாக மாறிவிட்டேன்.

சினிமா சூட்டிங் இருந்தால் கூட இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சீக்கிரம் வந்துவிடுவேன்.

அவர் முன் எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் இவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது. விட்டால் போதும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.

ஒரு முறை என்னிடம் அண்ணே ஒரு பேட்டி கொடுங்க என்றார்.

நிச்சயம் முடியாது.. நான் மாட்ட மாட்டேன் என்றேன். சிவகுமார் கூட ரஜினி பாண்டே கிட்ட மாட்டிக்காத என்றார்.

பாண்டே தந்தி டிவியில் இருந்து வேலையை விட்டு வெளியேறும்போது ஏன் இப்படி செய்கிறார்? என நினைத்தேன்.

தந்தி டிவி நிர்வாகிகள் அவர்களின் ஊழியர்களை ஒரு பிள்ளையாக பார்த்துக் கொள்வார்கள்.

அங்கிருந்து வேறு சேனலுக்கு போக போகிறாரா? என்று கூட நினைத்தேன்.

அவரிடம் கேட்டதற்கு எல்லாரிடமும் பேட்டி கண்டு விட்டேன். இப்போது போரடிக்கிறது. அங்கு சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றார்.

அடுத்து சாணக்யா என்ற யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் அவரின் சாணக்கியத்தனம் தெரியுது.

துக்ளக் இதழ் போன்று சாணக்யா நன்றாக வளர வேண்டும். சோ போன்று ரங்கராஜ் பாண்டேவும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini talks about Ranraj Pandey achievements at Chanakya event

சமூக அக்கறையில்லாத விஜய்..; சுதாரித்துக் கொண்ட சூர்யா

சமூக அக்கறையில்லாத விஜய்..; சுதாரித்துக் கொண்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay suriyaஉலகையே அச்சுறுத்தும் வைரசாக கொரானோ உருவெடுத்துள்ளது.

சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரியளவில் பரவி வருகிறது.

வட இந்தியாவிலும் கேரளாவிலும் நிறைய உயிர்களை கொரானா கொன்று குவித்து வருகிறது.

கை குலுக்க கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இருமல் மூலம் அதிகளவில் பரவி வருவதாக விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகள் கேட்டுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் நேறு விஜய் நடித்த மாஸ்டர் பட இசை வெளியீடு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் அழைக்கப்படவில்லை என்றாலும் கிட்டதட்ட 1000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதை படக்குழுவினர் நினைத்திருந்தால் தவிர்த்து இருக்கலாம். ஆன்லைனில் பாடல்களை வெளியிட்டு இருக்கலாம். ஏற்கெனவே 3 பாடல்கள் இணையத்தில்தான் வெளியானது.

ஆனால் சமூக பொறுப்பில்லாமல் மாஸ்டர் படக்குழுவினர் நடந்துக் கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் சூர்யா பொறுப்புடன் நடந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் என்ற படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்களை நாளை மார்ச் 17ல் சத்யம் தியேட்டரில் வெளியிட இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து பாடல்கள் ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் & தியேட்டர்கள் & டாஸ்மாக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

பள்ளிகள் & தியேட்டர்கள் & டாஸ்மாக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN school studentsசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுக்க 5000 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மை மாநிலமான கேரளாவில் இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

அங்கு மார்ச் 31ஆம் தேதி வரை ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.

தற்போது தமிழகத்திலும் இந்த கொரோனா பீதி அதிகரித்துள்ளது.

மார்ச் 19 முதல் மார்ச் 31வரை சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் மாக், தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண, சுப காரியங்களில் நிறைய பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரணி, ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows