குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.; திராவிட வாதிகளை செமயாய் கலாய்த்த கஸ்தூரி

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.; திராவிட வாதிகளை செமயாய் கலாய்த்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuriதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14 முதல் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியில்லை.

இவை தவிர மற்ற 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரியும் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள் முன்பு; திராவிட வாதிகள் பேச்சு தே‌ர்த‌ல் முடிஞ்சா போச்சு என்கிறார்கள் இப்போது. Tasmac is back!’ என்று அவர் திமுக அரசை கலாய்த்துள்ளார் கஸ்தூரி.

கடந்தாண்டு 2020 அதிமுக அரசு டாஸ்மாக்கை திறந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது அப்போதைய எதர்க்கட்சி திமுக.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Kasthuri tweets on Tasmac reopening

கொரோனா நிவாரணப் பொருட்களை டாக்டர்கள் & காவலர்கள் மூலம் கொடுத்த ஜிவி பிரகாஷ் ரசிகர்கள்

கொரோனா நிவாரணப் பொருட்களை டாக்டர்கள் & காவலர்கள் மூலம் கொடுத்த ஜிவி பிரகாஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கினர்.

மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும், அதனை நட்டும் அனைத்து மாவட்டந்தோறும் G.V பிரகாஷ்குமார் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்..

மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுக்க போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர் அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக அவர்களின் பொற்கரங்களால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொருட்களையும் வழங்க வைத்து அவர்களை கெளரவப்படுத்தினர்..

தன் பிறந்தநாளை முன்னிட்டு இது போன்ற நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் திரு. G.V பிரகாஷ்குமார் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

GV Prakash fans provide food to poor people on GVP’s birthday

GVP FANS (1)

GVP FANS (3)

GVP FANS (4)

JUST IN சசிகலாவுடன் பேசிய 15 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்..; எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS தேர்வு

JUST IN சசிகலாவுடன் பேசிய 15 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்..; எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikala ops4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு சில மாதங்களுக்கு முன் விடுதலையானார் சசிகலா.

அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக சசிகலா அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்…
அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வாகியுள்ளார்.

சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் ரவி தேர்வு.

அதிமுக சட்டமன்ற குழு பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்வு

அதிமுக சட்டமன்ற குழு செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்வு

அதிமுக சட்டமன்ற குழு துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தேர்வு.

Sasikala and her supporters removed from ADMK

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை..; முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வேண்டுகோள்

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை..; முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் ஜூன் 14 முதல் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியில்லை.

இவை தவிர மற்ற 27 மாவட்டங்களில் நாளை ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது…

“குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று கமல் பதிவிட்டுள்ளார்.

MNM Leader Kamalhassan advice to TN CM Stalin

நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 கொரோனா 2வது அலையில் உயிர் சேதம் அதிகமாகி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் உயிர்கள் இழப்பை பார்க்கிறோம்.

இந்த நிலையில் ஊரடங்கில் கிட்டத்தட்ட 40-45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது நாளை ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நிதானமாக இருக்கும் மக்களே நிறைய இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

இதில் போதையில் இருக்கும் குடிகாரர்கள் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள்..? இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகுமே தவிர சற்றும் குறையாது.

டாஸ்மாக் திறப்பு அறிவிப்பை மது பிரியர்கள் வரவேற்றாலும் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர்.

கடந்தாண்டு அதிமுக அரசு டாஸ்மாக்கை திறந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது அப்போதைய எதிர்க்கட்சி திமுக.

திமுக கட்சியினர் ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு 10-05-2020 காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் டாஸ்மாக் கடை திறப்புக்கு அன்றைய அதிமுக அரசை கண்டித்து இருந்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்பதை வன்மையாக கண்டித்திருந்தார்.

“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்”

இவ்வாறு பதிவிட்டு இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இவையில்லாமல் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் சந்திப்பில் கூட “சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்.. நான் அடிப்பட்டு அனுபவப்பட்டு சொல்றேன். மதுவால் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்” என பேசியிருந்தார் ரஜினி.

கடந்தாண்டு டாஸ்மாக் திறப்புக்கு அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி இந்தாண்டு திமுக அரசை கண்டிக்கவில்லை.

மனதில் பட்டதை அதிரடியாக சொல்லும் சூப்பர்ஸ்டார் இன்னும் மௌனம் காப்பது ஏன்..?

திமுக சார்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

ஒருவேளை அவரது மௌனத்திற்கு காரணம் இதுதானா?

உங்கள் ரசிகர்களுக்கு நீங்க தான் சார் ரோல் மாடல்.. நியாயமா இருங்க ரஜினி சார்..!

Why Rajini is silent in TASMAC opening issue during lockdown

வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மே மாதத்தில் திறக்கப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெலிவித்தனர்

திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் ஒரு படி மேலே சென்று ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய உத்தரவில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

ஆனால் மக்களின் வாழ்வை கெடுக்கும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில்..

#tasmac is far more important than everything else. Wow!! What a thought!! உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??pls answer us மாண்புமிகு முதல் அமைச்சர் thiru @mkstalin அவர்கள்..

என வடிவேலு டயலாக்கில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார் குஷ்பூ.

முக ஸ்டாலின் என்ன பதில் சொல்வாரோ..?

Khushboo slams TN CM Stalin for opening Tasmac shops in lockdown

More Articles
Follows