கொரோனா தொற்றில் இருந்து மீண்டு ஆலோசனைகள் சொல்லும் ஆண்ட்ரியா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டதால் கொரோனாவில் தன்னை தற்காத்து கொள்ள 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஆண்ட்ரியா.

அந்த அட்வைஸ்கள் இதோ…

1. கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும் பாசிட்டிவ்வாக இருங்கள். பயம் என்பது நெகட்டிவ் எமோஷன். நலமடைவது மட்டுமே குறிக்கோள் என இருங்கள்.

2. கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டை வழி, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும். ஆவி பிடிப்பது நல்லது. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

3. நீங்கள் சாப்பிடுவது, குடிப்பதும் மிகவும் முக்கியமானது. நமது தினசரி உணவில் பல சூப்பர் உணவுகள் நமக்கு உள்ளது ஆசீர்வாதமானது.

4. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் தூள் கலந்த பால் ஆகியவை நல்லது. சளியை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர், ஜுஸ் ஆகியவற்றை அடிக்கடி குடியுங்கள்.

5. உங்கள் பால்கனி, மொட்டி மாடி ஆகிய இடங்களில் நல்ல காற்றை தினமும் சுவாசியுங்கள். அப்படியில்லை என்றால் ஜன்னலைத் திறந்து விட்டு நல்ல காற்றை சுவாசியுங்கள்.

6. உங்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, பணியாட்கள், டிரைவர்கள், வாட்ச்மேசன் ஆகியோரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

7. விட்டமின் சி, பி, ஜின்க் ஆகியைவை நமது எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியவை. அஷ்வகந்தா, துளசி மற்றும் பல இந்திய மூலிகைகள் இருக்கின்றன. உங்கள் டாக்டரை ஆலோசித்து அதற்கேற்றபடி மருத்துவம் பாருங்கள்.

8. நெகட்டிவ் செய்திகளைப் பார்ப்பது, கோவிட் நிலவரம் ஆகியவற்றை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதீர்கள். அழுத்தம் உங்களது எதிர்ப்புக் சக்தியைக் குறைக்கும்.

9. புத்தகம் படியுங்கள், உங்களுக்கு விருப்பமான இசையைக் கேளுங்கள், உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன், அன்பானவர்களுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.

10. கோவிட் 19 ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் உங்களையோ மற்றவர்களையோ தவறாகப் பேச வேண்டாம். கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களை கனிவாக அணுகுங்கள். இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

என 10 ஆலோசனைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actress Andreas healthy tips to prevent from Covid 19

Overall Rating : Not available

Latest Post