பேய்க்கதை வெப் சீரிஸுக்காக இணையும் வடிவேலு & சுராஜ்

பேய்க்கதை வெப் சீரிஸுக்காக இணையும் வடிவேலு & சுராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu surajதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு.

இவர் இல்லாத சினிமா படங்கள் உப்பு இல்லாத உணவாகவே ரசிகர்களுக்கு இருக்கிறது.

இருந்தபோதிலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடித்த எலி, கத்திச் சண்ட, மெர்சல் உள்ளிட்ட பட காமெடிகள் எடுப்படவில்லை.

இந்த நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு.

இது காமெடி கலந்த பேய்க்கதையாக உருவாகும் என கூறப்படுகிறது.

இந்த எபிசோட்டுக்களை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார்.

அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற நிறுவனங்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

தனுஷ் நடித்த படிக்காதவன், சுந்தர் சி நடித்த தலைநகரம், விஷால் நடித்த கத்திச்சண்டை, அர்ஜீன் நடித்த மருதமலை, கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுராஜ்.

மேற்கண்ட படங்களில் 3 படங்களில் வடிவேலுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் சுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பான்-இந்தியா படமாகும் வலிமை.?; ரஜினி-கமலை போல சாதிப்பாரா அஜித்.?

பான்-இந்தியா படமாகும் வலிமை.?; ரஜினி-கமலை போல சாதிப்பாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai ajithஒரே நேரத்தில் பல இந்திய மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கினால் அது ’பான்-இந்தியா’ திரைப்படமாகும்.

பல மொழிகளில் திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என தயாரிப்பாளர் நினைத்தாலும் அந்த ஹீரோவுக்கு இந்தியளவில் இமேஜ் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தென்னிந்தியளவில் ரஜினி, கமல் படங்களுக்கு இந்தியளவில் நல்ல மார்கெட் உள்ளது. எனவே பெரும்பாலும் இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி உள்ளிட்ட படங்களும் இதுபோல் பான் இந்தியா படமாக தயாராகியது.

இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படமும்’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

’வலிமை’ படத்தை இந்தியில் டப்பிங் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கானுடன் ‘அசோகா’, ஸ்ரீதேவியுடன் ’இங்கிலீஷ் இங்கிலீஷ்’ உள்ளிட்ட ஓரிரு ஹிந்தி படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி & கமலை போல வட இந்தியாவில் அஜித் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அழகிகளுக்கு சமூக அக்கறை வேண்டும்..; முன்னாள் மிஸ் தமிழ்நாடு Dr ஷீபா லூர்தஸ்

அழகிகளுக்கு சமூக அக்கறை வேண்டும்..; முன்னாள் மிஸ் தமிழ்நாடு Dr ஷீபா லூர்தஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss TN title winner and Techie person turns Social Activistபொதுவாகவே அழகுபோட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கம் ஒருவரின் புற அழகை வெளியே கொண்டுவருவது மட்டுமின்றி, அறிவையும், அக அழகையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.

மேலும் அழகுபோட்டிகளுக்கு சமூக பொறுப்பும் இருப்பதால்தான், அப்போட்டிகளில் பங்குபெறுபவர்கள், நல்ல சமூக நோக்கத்திற்காக பாடுபடுவார்கள். இது தவிர அவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்பட்டு சமூக மேம்பாடு அடைய முயல்வார்கள்.

அழகு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம் வேண்டும். உலக அளவில், பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்கள், சமூக அக்கறையுடன் பல்வேறு மக்கள் நலப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம். அழகி போட்டி மற்றும் சமூக அக்கறை ஆகிய இரண்டு விஷயங்களும் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது.

அதன் விளைவாகவே நான் சமூக நலப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதாவது ஒரு தனிநபரான என்னால் இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என தோன்றியது என்று டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறியுள்ளார். இவர் முன்னாள் மிஸ் தமிழ்நாடு ஆவார்.

மக்கள் அழகை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அதைத்தாண்டி ஒரு பரந்த, விரிந்த உலகம் இருக்கின்றது. முக்கியமாக அழகி போட்டிகளில் வென்று பட்டம் பெற்றவர்கள் சமூகத்திற்கு என்னென்ன நல்ல காரியங்களை செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுபவர்கள் என்று கூறும் டாக்டர். ஷீபா லூர்தஸ் ஒரு அறிவாற்றல் உளவியல் நிபுணரும் கூட.

நம் நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களையும் , உலக அளவில் இருக்கும் மக்களையும் மிகவும் கவர்ந்தவர் பட்டியலில் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ‌. பி‌. ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு என்றென்றும் முக்கிய இடம் உண்டு. அதற்கு அப்துல் கலாம் அவர்களின் எளிமையும், சிறந்த குணநலங்களும், நிர்வாகத்திறங்களும், சமூக அக்கறையும், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சான்றாகும்.

அவர் “பிறந்தநாள்” குறித்து கூறிய விளக்கம் : “அன்று ஒரு நாள் மட்டுமே நீ அழும்போது.. உன் தாய் சிரிப்பாள்”. அப்துல் கலாம் அவர்களைத்தவிர இது போன்ற சிறந்த, உணர்ச்சி பூர்வமான விளக்கத்தை யாராலும் கூறியிருக்க முடியாது.

அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று எனது பிறந்த நாளும் வருகிறது. அப்துல் கலாம் அவர்கள் மறைவதற்கு முன்னால் வரை, என்னுடைய பிறந்த நாள் சாதாரண நாளாகவே கடந்து சென்றது. ஆனால் அவரது மறைவிற்குப்பிறகு, பாதிக்கப்பட மக்களின் நலங்களில் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றேன்.

அதாவது ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி கஷ்டப்படுபவர்களைக் கண்டுபிடித்து, பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களை காப்பாற்றினோம். இதையே எங்களுடைய ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் பொன்மொழி ஆக்கினோம். எங்கள் அமைப்பின் குறிக்கோள் : நேசம் மற்றும் அன்பு ஆகியவற்றை இந்த சமூகத்தில் பரப்பவேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக பெண்கள். குழந்தைகள் நலன் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றேன்.

இந்த ஆண்டும் அப்துல் கலாம் அவர்கள் நினைவு நாள் ( ஜூலை 27-ம் தேதி) அன்று, மூன்று நிகழ்வுகளை நடத்தினோம். அன்று காலையில், மைலாப்பூரில் உள்ள லயன்ஸ் ஆக்டிவிட்டி சென்டர், டயாலிசிஸ் மற்றும் டயக்னாஸ்டிக் சென்டருக்கு நன்கொடை, நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்கினோம். இந்த நிகழ்வில் நடிகர் திரு. ரியாஸ் கான் போன்ற சினிமா பிரபலங்களும், லயன்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் திரு. ஆர். சம்பத், லயன்ஸ் டிஸ்டிரிக்ட் கவர்னர் 324 A5 திரு. ஆர்.எம். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நான் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை யுனைட்டெட் சமாரிடன்ஸ், பிரெசிடெண்ட் ஆக இருப்பதால், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்னை பிறந்த நாள் கேக் வெட்ட சொன்னார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நான், கொரோனா கொடுங்காலத்தில் இது அவசியமற்றது என்று நினைத்தேன். ஆனால் என்னை கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர்களின் நல்ல உள்ளங்களை நான் ஏமாற்ற விரும்பாமல், கேக் கட் செய்தேன்.

அடுத்த நிகழ்வாக, சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினோம். இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜான் லூயிஸ் அவர்கள் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான பணி நிமித்தம் காரணமாக அவரால் வர இயலவில்லை.

திரு. ராமநாதன், துணை இயக்குனர், மகளிர் திட்டம், செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் அலுவலகம், திரு. சிவா கலைசெல்வன், பி.டி.ஓ., சிட்லபாக்கம் மற்றும் திரு பஞ்சு பி.டி.ஓ., சிட்லபாக்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் திரு ராம் ஜீவன் முந்த்ரா மற்றும் செயலாளர் திரு. புலவர் ஆர். மாணிக்கம் மற்றும் லயன்ஸ் குரூப் 324 A5 முன்னாள், இந்நாள், டிஸ்டிரிக்ட் கவர்னர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்று, இரண்டு மாணவர்களை வைத்து மரக்கன்றுகளை நட வைத்தோம். ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டியை சேர்ந்த மாணவர்கள் அப்துல் கலாம் குறித்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பேசினர். மாணவர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. மாணவர்கள் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் மூலிகை மருத்துவ குணம் கொண்ட துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், டாக்டர். ஏ‌. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் குழந்தைகளோடு இருப்பதையும், அவர்களுக்கு உதவிகள் செய்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அவ்விதம் இருக்க முடியவில்லை. ஆனால் குழந்தைகளின் இருப்பிடத்தை பசுமையாக மாற்றும் முயற்சியாக 1,000 மரக்கன்றுகளை வழங்கினேன்.

இறுதியாக ஆதனூரில் உள்ள ஹெல்பிங் ஹன்ட்ஸ் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, பள்ளி சீருடைகள்,
சானிடைசர்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கு நாங்கள் செல்லவில்லை. பாதுகாப்பான முறையில் நலத்திட்ட உதவிகள் அனுப்பிவைக்கப்பட்டது.

அனைத்து நிகழ்வுகளும் அரசின் ஆணைப்படி, சமூக இடைவெளி நடவடிக்கைகள் மற்றும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலுமாக பின்பற்றப்பட்டது.

இறுதியாக நான் கூற விரும்புவது: அப்துல் கலாம் அவர்களுக்கு நம் நாடு பற்றிய தொலைநோக்கு பார்வையில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற அப்துல் கலாம் அவர்கள் காட்டிய பாதையில் சென்று வெல்வோம் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இவ்வாறு டாக்டர் ஷீபா லூர்தஸ் கூறினார்.

Miss TN title winner and Techie person turns Social Activist

தனுஷ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி பட வில்லன் நடிகர் மரணம்

தனுஷ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி பட வில்லன் நடிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Anil Murali dies at 56 in Keralaமலையாளத்தில் பிரபலமான நடிகர் அனில் முரளி.

இவர் 1993-ல் ’கன்னியாகுமரியில் ஓர் கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கிலும் நடித்துள்ளார்.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 6 மெழுகுவர்த்திகள், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் உடன் கொடி, சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கல்லீரல் பிரச்சினைக்காக கேரளா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார்.

இந்த நிலையில இன்று சற்றுமுன் (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 56.

அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor Anil Murali dies at 56 in Kerala

BREAKING தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு.; தளர்வுகள் இருக்கா.?

BREAKING தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு.; தளர்வுகள் இருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lockdown in TN extended till 31st Aug Complete lockdown on Sundaysதமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீடிக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு..

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு.

அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு.

திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.

விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு.

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி.

பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு.

Lockdown in TN extended till 31st Aug Complete lockdown on Sundays

BREAKING கொரோனா லாக்டவுன் 3.. ஜிம்கள் அனுமதி.; பள்ளி கல்லூரிகள் & தியேட்டர்கள் தடை தொடரும்

BREAKING கொரோனா லாக்டவுன் 3.. ஜிம்கள் அனுமதி.; பள்ளி கல்லூரிகள் & தியேட்டர்கள் தடை தொடரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unlock 3கொரோனா மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம்…

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், ஜிம்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இரவுநேரத்தில் தனிநபர்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.

எவை அனுமதி கிடையாது…?

மெட்ரோ ரயில்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தொடரும்.

திரையரங்குகள், ஸ்விம்மிங் பூல், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்

அரசியல் கட்சி, விளையாட்டு, கலாச்சார கூட்டங்களுக்கான தடை தொடரும்.

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

More Articles
Follows