ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்யும் நடிகர் திரிகுன்

ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்யும் நடிகர் திரிகுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது.இந்த படத்தை அமலாபால் தயாரித்து கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது.

நடிகர் திரிகுன் , அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை அமலாபால் தயாரித்திருந்தார்.

டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் தனக்கு வரவேற்பு கிடைத்தது பெரும் மகிழ்வை தருகிறது என்கிறார் திரிகுன்.

தமிழ் படங்களில் அறிமுகமாகி தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வந்தவர் மீண்டும் தமிழ்படங்களில் கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.

தாய்மொழி தமிழில் மீண்டும் படம் பண்ணுவது உற்சாகமாக இருக்கிறது.
இரண்டு தமிழ்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. தமிழில் முன்னணி இயக்குனரோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் வரிசையாக படங்கள் செய்துவருகிறேன்.

இரண்டு மொழிகளிலும் நடிப்பது வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள் , மனிதர்களின் அணுகுமுறைகள் பெரும் அனுபவமாக இருக்கிறது.

இரண்டு மொழிகளும் எழுதப்படிக்க தெரிவதால் திரைக்கதையின் ஆழம் புரிந்து நடிக்க வசதியாக இருக்கிறது.

தெலுங்கில் பிரேமதேசம், கஞ்சம்,
கன்னடத்தில் லைன்மேன் .
தமிழில் டெவில் ஆகிய படங்கள் படபிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

Actor Thirigun talks about his upcoming films

90s Tamil TV Stars Reunion : மக்களை மகிழ்வித்த நட்சத்திரங்களின் சங்கமம்

90s Tamil TV Stars Reunion : மக்களை மகிழ்வித்த நட்சத்திரங்களின் சங்கமம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக சமீபத்தில் 90களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.

ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர்.

சங்கமித்த நட்சத்திரங்கள்

கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா,
அம்மு இராமசந்திரன், வெங்கட்,
நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு,
போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி, அஞ்சு, கணேஷ்கர் , ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், KSG வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸ்வேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர்.

சங்கமம் தொடரும்……

90s Tamil TV Stars Reunion : A reunion of stars that made people happy

நிச்சயமாக ‘இந்தியரே’.. பிறந்தநாளில் கமலுக்கு ஹின்ட் கொடுத்த ஷங்கர்.; முக்கிய வேடத்தில் கார்த்திக்

நிச்சயமாக ‘இந்தியரே’.. பிறந்தநாளில் கமலுக்கு ஹின்ட் கொடுத்த ஷங்கர்.; முக்கிய வேடத்தில் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் ஷங்கர்.

1993ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து காதலன், அந்நியன், இந்தியன் , முதல்வன், சிவாஜி, எந்திரன் என பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இறுதியாக தமிழில் லைகா தயாரிப்பில் ரஜினியை வைத்து ‘2.0’ படத்தை இயக்கி இருந்தார்.

கோலிவுட்டில் 2.ஓ பட வசூலை எந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

தற்போது தெலுங்கில் ஒரு படம் ஹிந்தியில் ஒரு படம் என இயக்குகிறார்.

இன்று ஆகஸ்ட் 17ல் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஷங்கர்.

எனவே ரசிகர்கள் & திரையுலகினர் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் ஷங்கர்,… ”நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி” என பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் இணையும் ‘இந்தியன் 2’ படம் விரைவில் ஆரம்பமாகும் என தெரிகிறது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விவேக், நெடுமுடி வேணு நடிக்க இருந்தனர்.

சில காட்சிகளும் எடுக்கப்பட்டன.

அவர்கள் மறைந்ததால், அவர்களுக்கு பதிலாக ஒரு கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Shankar gave a hint to Kamal on his birthday

ராஜமௌலி உதவியாளர் அஷ்வின் இயக்கத்தில் ‘1770’.; வந்தே மாதரம் 150 ஆண்டுகள்

ராஜமௌலி உதவியாளர் அஷ்வின் இயக்கத்தில் ‘1770’.; வந்தே மாதரம் 150 ஆண்டுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளானதைக் குறிக்கும் வகையிலான மோசன் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான ‘ஆனந்த மட’த்தை தழுவி, ‘1770’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.

எஸ் எஸ் 1 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி. கே. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ‘1770’ எனும் திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை ‘நான் ஈ’, ‘பாகுபலி’ ஆகிய படங்களின் இயக்குநரான எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரும், ‘ஆகாஷ்வாணி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநருமான அஸ்வின் கங்கராஜு இயக்குகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், ” இந்த தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்த தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என தோன்றியது. தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.

தயாரிப்பாளர்களான சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோரை மும்பையில் சந்தித்தேன். அவர்களிடம் படத்தை பற்றியும், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம். தயாரிப்பாளர்களின் அக்கறையுடனான அரவணைப்பும், குழுவாக பணியாற்றும் அவர்களது அணுகுமுறையும் எனக்கு பிடித்தது- இதன் காரணங்களால் அவர்களுடன் உடனடியாக இணைந்து பணியாற்ற தொடங்கி விட்டேன்.” என்றார்.

இந்த ஆண்டு, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த கவிதை பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் முதன் முதலாக இடம் பெற்றது. வீரியமிக்க தேச உணர்வைத்தூண்டும் இந்த கவிதை ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது.

படத்தைப் பற்றி கதாசிரியர் வி. விஜேந்திர பிரசாத் பேசுகையில், ” வந்தே மாதரம் என்பது மந்திர வார்த்தை என நான் உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திர சொல் அது. அதனை நாங்கள் ‘1770’ படைப்பில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்.” என்றார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி பேசுகையில், ” என் தொலைநோக்கு பார்வை மீது நம்பிக்கை வைத்ததற்காக முதலில் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்பாளியாக அஷ்வினின் அணுகுமுறையை பெரிதும் விரும்பினேன். அவர் தன்னுடைய கற்பனையுடன் கூடிய திறமைகளை வெளிப்படுத்த தயாராகிவிட்டார். அது காட்சியமைப்புகளை மேலும் பிரம்மாண்டமாக்கியது. அவரது இயக்கத்தில் வெளியான ‘ஆகாஷ்வாணி’ திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். அந்த படைப்பில் ஒரு கதை சொல்லியாக அவரது திறமையை வியந்து பாராட்டினேன். ‘1770’ படத்தின் மிக முக்கியமான அம்சம் விஜயேந்திர பிரசாத் அவர்கள் எழுதிய மந்திர வார்த்தைகளில் அடங்கி இருக்கிறது. அவரின் எழுத்து, மொழிகளின் எல்லைகளைக் கடந்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களுடன் எளிதாக இணைகிறது. இது போன்றதொரு உணர்ச்சிமிக்க குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.” என்றார்.

எஸ் எஸ் 1 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சைலேந்திர குமார் பேசுகையில், ” வாழ்க்கையை விட பெரிய திரைப்படத்தை உருவாக்க இதுவே சரியான தருணம். இந்த கனவை நினைவாக்க பி.கே. என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோவின் முன்னாள் தலைவர் சுஜாய் குட்டி, தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் சூரஜ் சர்மாவுடன் இணைந்திருக்கிறோம். ஜான்சி பாடகியாக இருந்து, எங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடி வளர்ந்துள்ளோம். ஆனால் ஆனந்த மடத்தின் கதையை ராம் கமல் சட்டர்ஜி கூறியதும், அதனை விஜேந்திர பிரசாத் சார் நேர்த்தியான திரைக்கதையாக அவருடைய மொழியில் கூறியதும் பிரமித்தேன். இதற்காக சுஜாய், கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு திரைப்படம் அல்ல. பெரிய திரைக்கு ஏற்றவகையிலான சிறந்த பொழுதுபோக்கு சினிமா ஒன்றை உருவாக்கும் ஓர் கனவு.” என்றார்.

பி. கே. என்டர்டெய்ன்மென்ட் நிறுவன த்தின் தயாரிப்பாளரான சூரஜ் சர்மா பேசுகையில், ” இந்த கூட்டணியில் இளையவனாக இருப்பதால், ‘1770’ எனும் கனவு திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இது போன்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றப் படைப்புகளை உருவாக்கிய வல்லுநர்கள் மற்றும் ஜம்பவான்களிடமிருந்து ஏராளமான விசயங்கள் கற்றுக் கொள்ளும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.” என்றார்.

தயாரிப்பாளர் சுஜாய் குட்டி பேசுகையில், ” திரைக்கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது வித்தியாசமானது. அவரின் உத்வேகம் அலாதியானது. நான் ‘1770’ படைப்பை உருவாக்கினால், அவர்தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் எழுதவில்லை என்றால் இந்தப் படத்தை தயாரித்திருக்க மாட்டேன் என்று அவரிடமே கூறினேன்.” என்றார்.

தயாரிப்பாளர் பி. கிருஷ்ணகுமார் பேசுகையில், ” ஆனந்த மடம் போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாவதற்கு தோள் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் அவசியம் தேவை. ‘வந்தே மாதரம்’ பாடி வளர்ந்தோம். இப்போது இந்த மந்திரத்தின் பிறப்பை படைப்பாக உருவாக்குகிறோம். படத்தின் இயக்குநரான அஷ்வின் மற்றும் எழுத்தாளர் ராம் கமல் சட்டர்ஜி, இந்த கதையை எங்களிடம் சொன்னபோது, அஷ்வின் என் மனதில் இடம் பிடித்தார்.” என்றார்.

‘1770’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தீபாவளி பண்டிகையின் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே படத்தின் இயக்குநரான அஷ்வின், தன்னுடைய குழுவுடன் இணைந்து காலகட்டத்தை ஆராய்ந்து, தனித்துவமான காட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SS Rajamouli protégé Ashwin Gangaraju to direct magnum opus 1770 created by Ram Kamal Mukherjee

சூர்யா – சிவா இணையும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி

சூர்யா – சிவா இணையும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விருமன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து நாயகன் கார்த்தி மற்றும் பட குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தன் ரசிகர்களை சந்தித்தார் நடிகர் கார்த்தி.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தன் வீட்டில் தன் அண்ணன் தம்பி உறவு.. தங்கை பாசம்.. அப்பாவின் கண்டிப்பு தண்டனை உள்ளிட்ட பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு வீடியோ மூலம் ரஞ்சித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்தின் அப்டேட் பற்றி கேட்கப்பட்டது.

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இதன் சூட்டிங் தொடங்கப்படும் என்று கார்த்தி தெரிவித்தார்.

Karthi gave super update of Suriya-Siva movie

மலையாளிகளை தன் இசையால் மயக்கப்போகும் அனிருத்.; ஹீரோ யார்?

மலையாளிகளை தன் இசையால் மயக்கப்போகும் அனிருத்.; ஹீரோ யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களின் இன்றைய இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான்.

மேலும் முன்னணி நடிகர்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அதுவும் அனிருத்து தான்.

ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா முதல் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் முதன்முதலாக மலையாள சினிமாவிலும் இவர் நுழைகிறார்.

நிவின்பாலி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம்.

மம்மூட்டி நடித்த ‘தி கிரேட் பாதர்’ மற்றும் நிவின்பாலி நடித்த ‘மைக்கேல்’ ஆகிய படங்களை இயக்கிய ஹனீப் அதேனி என்பவரின் புதிய படத்திற்கு தான் அனிருத் இசையமைக்க உள்ளார்.

Anirudh to compose music for Nivin Pauly’s new malayalam film

More Articles
Follows