கமல் படத்தை தயாரித்து 20 வருடங்களுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படம்.; ஆதரவளித்தார் சூர்யா

கமல் படத்தை தயாரித்து 20 வருடங்களுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படம்.; ஆதரவளித்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார்.

பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் ‘தெனாலி’, மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.

இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அறிமுக கலை இயக்குநரான சிவா கலை இயக்கத்தை கவனிக்கிறார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, ‘என்ஜாய் என்ஜாமி’ புகழ் அறிவு ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இரட்டை இயக்குனர்கள் பேசுகையில்,’மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம்.

ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்.’ என்றனர்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா இன்று தன் இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

Actor Suriya released KS Ravikumar’s movie first look

BATH TUBல் தலையில்லாமல் தம் அடிக்கும் பெண் ‘பிசாசு’.; விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா பட மிரட்டல் லுக்

BATH TUBல் தலையில்லாமல் தம் அடிக்கும் பெண் ‘பிசாசு’.; விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா பட மிரட்டல் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

விரைவில் இப்படத்தின் First Single வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

The most expected Horror Thriller Pisasu 2 first look is here

தன் அப்பா பெயரை இணைத்து தன் மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

தன் அப்பா பெயரை இணைத்து தன் மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 12ல் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில்.. “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் தற்போது தன் ஆண் குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். அவரின் அப்பாவின் பெயர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் அப்பாவின் பெயரை தன் மகன் பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்பதை இங்கே கவனிக்கலாம்.

Actor Siva Karthikeyan names his son ‘Gugan Doss’

நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ‘மாநாடு’ என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய படத்தை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.

‘தங்க மீன்கள்’ படம் மூலம் 3 தேசிய விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கச் செய்தவர் ராம்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

மக்கள் தொடர்பு – A. ஜான்

V house productions next film announcement is here

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்கன்னா தக்காளி சட்னியா.? நெற்றிக்கண்ணால் நயன்தாராவை சுட்டெரிக்கும் நெட்டிசன்ஸ்

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்கன்னா தக்காளி சட்னியா.? நெற்றிக்கண்ணால் நயன்தாராவை சுட்டெரிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பட பூஜை, பிரஸ் மீட், இசை வெளியீடு, மூவி புரொமோசன் என எந்த நிகழ்விலும் பங்கேற்காதவர் நடிகர் அஜித்.

இவையில்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை நிறுத்தியவர் அஜித்.

இவரின் ரூட்டில் பயணிப்பவர் நயன்தாரா.

இந்த நிலையில் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து Rowdy Pictures என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்துள்ளார்.

‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இந்த்படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் அவரே (அட்மின்) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் & நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்து வருகின்றனர்.

தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் மட்டும் கலந்து கொள்ளும் நீங்கள் அடுத்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை.?

உங்கள் சொந்த பணம் படம் என்றால் ஒரு நியாயம் அடுத்தவர் தயாரித்தால் ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

*இதை பார்த்து நயன்தாரா நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே…*

ஒரு படத்திற்கு அக்ரீமென்ட் போடும் போதே தன்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பிற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என குறிப்பிட்டுதான் ஓகே சொல்வாராம் நயன்தாரா.

அதையும் ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்னத்த சொல்ல..?

Netizens slams Nayanthara for participating in movie promotions

மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

“’ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே!
ஹே நண்பா… கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” – என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ்.

இவர்கள் இருவருமே விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.

‘இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட்டே..

இந்த ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Aadhalinaal Kaadhal Seiveer Digital Series – #HeyNanba Song Teaser Sung by GV Prakash

More Articles
Follows