தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தன் அப்பா டி. ராஜேந்தரை போல பன்முகத்திறமை கொண்டவர் சிலம்பரசன்.
(ஒரே ஒரு வித்தியாசம்.. எந்தவொரு நடிகைகளையும் தொட்டு நடிக்க மாட்டார் டி.ராஜேந்தர். அப்பாவுக்கு நேர் எதிர் சுபாவம் கொண்டவர் சிம்பு.)
9 மாத குழந்தையாக இருக்கும்போது படங்களில் நடிக்க தொடங்கியவர் சிம்பு. தற்போது 39 வயதாகிறது. இதுவரை படங்களில் நடித்து வருகிறார்.
மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்கள் இவரது திரைப்பயணத்தில் முக்கியமானவை ஆகும்.
சினிமா தவிர சமூக சார்ந்த ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற பிரச்சினைகளில் தைரியமாக கருத்து கூறியவர். நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் விஷாலை சரமாரியாக கேள்விகளால் துழைத்தவர் இவர்.
2021ல் நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று ஜனவரி 11ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிம்பு பேசியதாவது…
இது எனக்கான வெற்றி இல்லை. என்னை 9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்தவர்கள் என் தாய் தகப்பன்தான்.
எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா? எனத் தெரியாது.
குழந்தைகளுக்கு பிடிச்சதை செய்து கொடுக்க எல்லா குழந்தைகளுக்கும் இதுபோல பெற்றோர் கிடைக்க வேண்டும்.
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என நெகிழ்ச்சியாக பேசினார் டாக்டர் சிம்பு.