தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் ரஹ்மான் கூட்டணி

தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் ரஹ்மான் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான ‘ கண்பத்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், ரஹ்மான், க்ரிதி சநோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

அமிதாப் நடித்த ‘ பிளாக் ‘ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட் பிரவேசம் செய்த விகாஸ் பால் அதன் பின் நிறைய படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியுள்ளார்.

மேலும் ‘குயின்’ , ‘சில்லார் பார்ட்டி’, ‘சூப்பர் 30’ போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மூன்று முறை தேசிய விருதும் மற்றும் பல விருதுகளும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பின் மத்தியில் தன் மகள் திருமணத்துக்காக சென்னை வந்த ரஹ்மான் தன் முதல் பாலிவுட் பிரவேசம் பற்றி இவ்வாறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“மூன்று மாத கால ஹிந்தி டூஷன் , ஸ்கிரிப்ட் ரீடிங், மேக்கப் டெஸ்ட் என்று நிறைய ஹோம் வொர்க் செய்த பின் தான் லண்டனில் படப்பிடிப்புக்கு சென்றேன்.

பொதுவாகவே தென்னிந்திய நடிகர்- நடிகைகளை பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள் என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன் .

ஆனால் நான் கேள்வி பட்டதுக்கு மாறாக இருந்தது, அங்கு எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்கள். அவர்களது நேரம் தவறாமை , பிளானிங் , எனக்கு கிடைத்த உபசரிப்பு, வரவேற்பு, காட்டிய அன்பு எல்லாமே என்னை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பெரியவன் – சிறியவன் பாகு பாடில்லாமல் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் நடிகர்களும் இயக்குனரும் புரொடக்க்ஷன் பாய் லைட் மேன் போன்றோர்களிடம் நண்பர்கள் போல பழகுவது என்னை ஆச்சாரியப்படுத்திய புதிய அனுபவமாகும்.

டைகர் ஷெராப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகையாகாது. எல்லோரிடமும் ஒன்று போல அன்புடனும் பாசத்துடன் பழகுபவர்.

இரண்டு நாள் அவருடன் பழகினாலே இவரை போல ஒரு மகன் நமக்கும் இருந்தால் என்று ஆசைப்படுவோம். பெரிய ஹீரோவாக இருந்தும் பழகுவதில் அவ்வளவு பணிவு.பழக்கதிலும் தொழிலிலும் மிகவும் அர்ப்பணிப்பு மனமுடையவர். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

என்னுடன் நடித்த க்ரிதி சனோனும் பழகுவதற்கு மிக இனிமையானவர் . படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளிலேயே நீண்ட காலமாக மிகவும் பரிச்சயமானவரைபோல தான் என்னுடன் பழகினார். ஒவ்வொரு சீன் எடுக்கும் போதும் ” சார் அப்படி நடித்தால் நல்லா இருக்குமா, இந்த சீன்ல நம்ம இப்படி நடிக்கலாமா என்று அபிப்ராயம் கேட்பார் க்ரிதி.

சிறந்த எழுத்தாளரான இயக்குநர் விகாஸ் பால், தான் பெரிய இயக்குநர் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் அன்பாக பழகுவார். யாருடைய மனமும் நோகக்கூடாது என்ற மனபான்மையுடன் வேலை வாங்குவார். அவருடன் பழகினால் அவரை விட்டு பிரிய நமக்கு மனசு வராது. அவ்வளவு பாசக்காரர்”.
படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றியும் மற்றும் பல விஷயங்களை பின் கூறுகிறேன்”

இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

Actor Rahman joins with Vikas Paul for bollywood film

மீண்டும் பயமுறுத்த வரும் ‘சிவி 2’ – கழுத்து மேல் பேய் நினைவிருக்கா.?

மீண்டும் பயமுறுத்த வரும் ‘சிவி 2’ – கழுத்து மேல் பேய் நினைவிருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி.

ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி (பாகம்-2) என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள்.

இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள்.

அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குனர் – K.R.செந்தில் நாதன்
ஒளிப்பதிவாளர் – B.L. சஞ்சய்
படத்தொகுப்பாளர் – S.P.அஹமத்
இசையமைப்பாளர் – F.S.பைஜில்
சண்டை – பில்லா ஜெகன்
கிரியட்டிவ் ஹெட் – v. அணில் குமார்
கலை- சூரியா
இணை தயாரிப்பு – விஜய் – பானு
தயாரிப்பாளர் – லலிதா கஸ்தூரி கண்ணன்
மக்கள் தொடர்பு – R.குமரேசன்

Kollywood horror thriller Siivi sequel is ready

மோசமான படங்கள் ரிலீசானால் பொது நல வழக்கு போடுவேன்..; பாக்யராஜ் எச்சரிக்கை

மோசமான படங்கள் ரிலீசானால் பொது நல வழக்கு போடுவேன்..; பாக்யராஜ் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 09.12.2021 சென்னையில் நடைபெற்ற ‘கடைசி காதல் கதை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அத்திரைப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :

இயக்குனர் ஆர். கே. வித்யாதரன் பேசும்போது,

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு இந்த படம் ட்ரைலர் வெளியீட்டிற்கு வந்துள்ளது.
என்னுடைய மானசீக குருநாதர் இருவர். இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அடுத்ததாக இயக்குனர் கமாண்டர் கே.எஸ்.ரவிக்குமார். என்னுடைய முதல் கன்னட படத்தை 19 நாட்களில் முடித்தேன். சத்யா ராஜ் சாருடன் நிறைய கதை பண்ணிருக்கேன். அடுத்ததாக நிறைய கதை சிபிக்கும் வைத்திருக்கிறேன். அவர் சத்யராஜின் நகல். நான் ஒரு 1415 கதையை புத்தகத்தில் வைத்திருக்கிறேன். அதில் 141 ஆவது கதை மற்றும் 231ஆவது கதைக்கும் அட்வான்ஸ் வாங்கி அது சில காரணத்தால் எடுக்க முடியவில்லை. கடைசி காதல் கதை 531 ஆவது கதை தான். இந்த படத்தையும் 19 நாட்களில் எடுத்திருக்கிறேன். இந்த படத்தில், ஜாதி மதம், பெண்களின் பிரச்னை அனைத்தும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். படத்தின் ஹீரோ ஏற்கனவே பாலா இயக்கிய வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் சேத்தன் கிருஷ்ணா கன்னடத்தில் 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இந்த படத்தை வெகுவிரைவில் வெளியிட உள்ளோம் என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது,

தமிழ் சினிமா நல்ல தரத்தில் இருக்கிறது. படத்தின் கதை நல்ல இருந்தால் தியேட்டரிலும் சரி, ஓடிடி-தளத்திலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தின் இயக்குனரை நீண்ட காலமாக தெரியும். எனக்கு கதை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் முதலில் ஞாபகம் வருவது RKV தான். அப்பாவும் இவரை தான் சொல்லுவார் என்றார்.

இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது,

படத்தின் டிசைன் வேறு ஒரு தோற்றத்தில் இருந்தது. டைரக்டரை ஒரு 20 ஆண்டு கால பழக்கம். எப்போதும் ஏதேனும் ஓரு வேலையை செய்து கொண்டே இருப்பார். கன்னடம், தமிழ் இரண்டிலும் அவர் ஒரு நல்ல கதை மாந்தர். அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பம் தான் புது முக நடிகர்களை வைத்து எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்துள்ளது. இப்பொழுது தமிழ் சினிமாவில் இப்போது கதைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 7 ஓடிடி தளங்கள் தமிழில் வரவிருக்கிறது. பறந்து வரும் நாயகனை, நடந்து வர வைத்தது கே.பாக்யராஜ் தான். இயக்குனர் ஜாம்பவான் கே.எஸ்.ரவிக்குமார் என்றார்.

நடிகை ஷாலு ஷாமு பேசும்போது,

நான் இந்தத் துறைக்கு கு புதுசு தான். சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். எனக்கு வரும் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்பொழுது மாடலிங் செய்து கொண்டு இருக்கிறேன். ட்ரைலர் வெளியீட்டில் ஜாம்பவான்கள் முன்பு பேசியது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் சாம்ஸ் பேசும்போது,

இந்த படத்தில் சுவாரஸ்யமான போலீஸ் கதாபாத்திரம் செய்திருக்கிறேன். ஆர்.கே.வி. போன்று நானும் நகைச்சுவைக்காக ஒரு நோட் வைத்திருக்கிறேன். 2 நாள் தான் படப்பிடிப்பு என்று கூறினார். ஆனால், வெச்சி செஞ்சிட்டார். படம் மொத்தமும் 60 ஷாட் ஆனால் நானே 120 ஷாட் பண்ணிருக்கேன். நிறைவாக இருக்கிறது என்றார்.

கதாநாயகன் ஆகாஷ் பிரேம் குமார் பேசும்போது,

இது நான் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த அப்பா அம்மாக்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன். எனது தந்தை கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் கே.எஸ்.ரவிக்குமார்-ன் பஞ்சதந்திரம், ரவிக்குமாரின் நடிப்பும் இயக்கமும் பிடிக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு என்னுடைய கண் தான் காரணம். நான் ஒரு காட்சியில் நடித்தால் போதும் என்று தான் வந்தேன். ஆனால் என்னை ஒரு கதாபாத்திரமாக பார்த்த என்னுடைய குரு பாலா சாருக்கு நன்றி என்றார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

ஆர்.கே.வி. எனக்கு 4 ஆண்டாக தான் தெரியும். அவர் சிறந்த நடிகரும் மற்றும் இவர் ஓரு கால் நடை மருத்துவரும் கூட. கன்னடம் தெரியாவிட்டாலும் அவரின் திறமையால் வாய்ப்பு வாங்கி விடுவார்.
கடைசி காதல் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் இயக்குனரிடம் என்னப்பா? இதற்கு மேல் யாரும் காதலிக்க மாட்டார்களா? அல்லது இதற்கு பிறகு யாரும் காதல் கதையை எடுக்க மாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், அப்படியில்லை சார் அதற்குள் விஷயம் இருக்கிறது என்றார். அவர் உச்சிக்கு செல்லும் ஒரு காலம் வர வேண்டும் என்று வேண்டுகிறேன். கமல், ரஜினி போன்று எல்லாரையும் தியேட்டரில் பார்த்து கைதட்டின எனக்கு அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது போல இவருக்கும் ஒரு வாய்ப்பு வரும். படத்தில் நடித்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற வாழ்துகிறேன் என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது,

நேற்று விபத்தில் இறந்த முப்படை தளபதி, அவரின் மனைவி மீதமுள்ள 12 பேருக்காக வருந்துகிறேன்.
கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது.

இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

Bhagyaraj speech at Kadaisi kadhal kadhai trailer launch

சசிகுமார் தம்பியுடன் சன் டிவி தொகுப்பாளினி இணையும் ‘ஆத்மிகா’

சசிகுமார் தம்பியுடன் சன் டிவி தொகுப்பாளினி இணையும் ‘ஆத்மிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற’ஆசிய விருதுகள்’ திரைப்பட விழாவில் தான் இயக்கிய ‘மூடர் ‘குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கியுள்ள படம்தான் ‘ஆத்மிகா’.

இப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த் நாக் நாயகனாக நடித்துள்ளார்.

சன் டிவியில் வணக்கம் தமிழகம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய விஜே ஐஸ்வர்யா முத்துசிவம் நாயகியாக நடித்துள்ளார் .

மற்றும் ஜீவா ரவி , பிர்லா போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் .சரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை கார்த்தி மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை ஆனந்த் அமைத்துள்ளார்.

சென்னை ,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார்
பேசும்போது …

“படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பலரும் குறும்படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் .சினிமா மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிறோம்.

பல பிரச்சினைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே படத்தை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம்.

புலிகள், காட்டெருமைகள் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில், அனைத்தையும் கடந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இது ஒரு புது விதமான வகைமையில் இருக்கும் .

Eminent personalities Vijay Sethupathi, GV Prakash Kumar and Aari congratulate ‘Aathmika’ team on its excellent first look

‘அண்ணாத்த’ ஹிட்டு.. ரஜினி கிப்டு.; சிவா வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்

‘அண்ணாத்த’ ஹிட்டு.. ரஜினி கிப்டு.; சிவா வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளியன்று ரஜினிகாந்த் நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ படம் ரிலீசானது.

ரஜினி ரசிகர்கள் பெண்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.

ஒரு தரப்பினரிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

ஆனாலும் உலகளவில் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளமையான தோற்றத்தில் ரஜினியை கண்ட ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இயக்குநர் சிவாவை நேரடியாக அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார் ரஜினி.

சென்னையில் உள்ள சிவா வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அண்ணாத்த படம் குறித்தும் மற்ற விஷயங்களையும் பேசினாராம்.

மேலும் இயக்குநருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்தாராம்.

இது தொடர்பாக போட்டோ எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது தான் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சூட்டிங் நடந்த சமயத்தில் ரஜினியை கூடுதல் கவனத்துடன் அன்பாக பார்த்துக் கொண்டாராம் சிவா.

அந்த அன்பின் வெளிப்பாடுதான் ரஜினி இந்த சங்கிலி பரிசு எனத் தெரிகிறது.

இது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாவே தனது ஹூட் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth gifted gold chain to Annaatthe director Siva

சாண்டியை பயமுறுத்தும் நேரம் : மிரட்ட வரும் ஹாரர் திரில்லர் ‘3:33’

சாண்டியை பயமுறுத்தும் நேரம் : மிரட்ட வரும் ஹாரர் திரில்லர் ‘3:33’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’.

முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு
ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத்
VFX சூப்பரவைசர் – அருண்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
மிக்சிங் – ராம்ஜி சோமா
SFX – A. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

விளம்பர வடிவமைப்பு – SABA DESIGNS

வித்தியாசமான கதையில், மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

வித்தியாசமான கதையில், மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Dance master Sandy’s 3.33 will release on december 10

More Articles
Follows