எனக்கு பிடித்த SPBயின் பாடலுக்கு வாயசைப்பேன் என நினைக்கவில்லை.. – மோகன் உருக்கம்

எனக்கு பிடித்த SPBயின் பாடலுக்கு வாயசைப்பேன் என நினைக்கவில்லை.. – மோகன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

இது குறித்து நடிகர் மோகன் கூறியுள்ளதாவது…

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன்.

கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது.

அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன.

தெலுங்கில் எனது முதல் படமான ‘தூர்ப்பு வெல்லே ரயிலு’ (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார்
தான் இசையமைப்பாளர்.

முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு இசையமைத்து, அனைத்து பாடல்களையும் பாடியிருந்தது எஸ்.பி.பி சார் தான்.

தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ பாடலும் ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் எல்லாப் பாடல்களும் என்று என் திரைவாழ்விலும் எனக்காக, என் படங்களுக்காக தொடர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தொழில்முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி.யின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை.

பாடல்கள் மட்டுமல்ல. எஸ்.பி.பி. அவர்களே அத்தகையை பண்பான மனிதர்தான். எஸ்.பி.பி. அவர்கள் பூரண குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும் என்று அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. அவர்கள் பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்

நன்றி

வணக்கம்

மோகன்
திரைப்பட நடிகர்

Actor Mohans emotional statement about singer SPB

BREAKING கிரிக்கெட் வீரர்கள் MS தோனி & சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

BREAKING கிரிக்கெட் வீரர்கள் MS தோனி & சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Raina too confirms his retirement in cricket along with MS Dhoniசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

இதன் பின்னர் சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில்… “உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது. முழு திருப்தியுடன் நானும் உங்க வழியை தேர்ந்தெடுக்கிறேன்.

உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Suresh Raina too confirms his retirement in cricket along with MS Dhoni

‘மெய்நிகர் ஜன கன மன’ – தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்த பரத் பாலா.. 50 இந்திய மேஸ்ட்ரோக்கள் இணைந்தனர்

‘மெய்நிகர் ஜன கன மன’ – தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்த பரத் பாலா.. 50 இந்திய மேஸ்ட்ரோக்கள் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

virtual anthemபரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகிள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரசார் பாரதியின் முன்னெடுப்பு. செயற்கை நுண்ணறிவின் மூலம் எப்படி இந்திய குரல்களை ஒன்றிணைத்து அவற்றில் உணர்ச்சியை கொண்டு வரமுடியும்? ஒலி உணர்வு தொழில்நுட்பம் இல்லாமல் எப்படி இந்தியா பாடுகிறது? இந்திய மக்களை, இந்தியாவுடனான அவர்களின் உணர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாக இணைக்கும் சரியான உணர்வு எது? ஒரு மெய்நிகர் தேசத்தை உருவாக்க இந்தியர்களை எவ்வாறு இணைப்பது?

ஆகஸ்ட் 17, 2020: ‘மெய்நிகர் தேசிய கீதம்’ சுதந்திர தினத்தன்று கூகிள் தேடல், யூடியூப் மாஸ்ட்ஹெட் மற்றும் தூர்தர்ஷனில் வெளியாகிறது.

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தன்று அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் முதல் தார் பாலைவனம் வரை இந்தியர்களின் குரல்கள் ஒன்றிணைந்த ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது.

2020, இந்தியர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆண்டு. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள இந்தியர்கள் ஒன்றாக சேர்ந்து பாடும் இந்த தேசிய கீதம் வலிமையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

கூகிள் செயற்கை நுண்ணறிவு மூலம் சேகரிக்கப்பட்ட குரல்கள், பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட ஜன கன மன பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரசார் பாரதி, கூகிள், விர்ச்சுவல் பாரத் ஆகியோரின் தனித்துவமான கூட்டுமுயற்சியின் மூலம், இயக்குநர் பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் படமாக்கப்பட்ட தேசிய கீதத்தை செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்துடன் பாட இந்தியா அழைக்கப்பட்டது.

இது குறித்து பரத்பாலா கூறும்போது….

‘நாம் ஒருவருக்கு ஒருவர் விலகியிருக்கும் இந்த காலகட்டத்தில், மெய்நிகர் முறையில் இந்திய மக்களை ஒன்றிணைப்பதும், ஒரு மெய்நிகர் தேசத்தை உருவாக்குவதுமே என்னுடைய இந்த யோசனைக்கு காரணம்.

இந்தியாவை மெய்நிகர் முறையில் ஒன்றினைத்து, இந்தியர்களை நம் கலாச்சாரம் பற்றிய குறும்படங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் இணைப்பதே என்னுடைய யோசனையின் நோக்கம்.

எனவே இது எல்லா காரணிகளின் இயல்பான மற்றும் சரியான கலவையாக இருந்தது. மேலும் முதன்முறையாக ஒரு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்தில் குரல்களை ஒன்றிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்திய குரல்களை தொழில்நுட்பம் போல தெரியாமல் மனிதக் குரல்களை போலவே உணரவைக்கும்படி எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம். உணர்வுகளை எவ்வாறு தக்கவைக்க போகிறோம்? எல்லாவற்றுக்கும் மேல் உலகின் மிகச்சிறந்த தேசிய கீதத்துக்கு எவ்வாறு ஆழமான, உண்மையான மரியாதையை செலுத்தப் போகிறோம்.

இதுபோன்ற யோசனைகளுக்கு ஒரு வகையான தொலைநோக்குப் பார்வையும் உண்மையான இந்திய நம்பிக்கையும் தேவை.

கூகிள் இந்தியாவின் தலைவர் சஞ்சய் குப்தாவுக்கு என்னுடைய உண்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூலை மாதம் ஒரு நள்ளிரவில் அவர் என்னை அழைத்து சுதந்திர தினத்தன்று இந்திய நாடு ஒன்று சேர்ந்து பாடும் இந்த யோசனையை என்னிடம் கூறினார்.

இது ஒரு சிறந்த கூட்டுமுயற்சியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

2000ஆம் ஆண்டில் 50 இந்திய மேஸ்ட்ரோக்கள் உடன் இணைந்து ஜன கன மன பாடலை உருவாக்கினோம்.

என்னை பொறுத்தவரை இது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கீதத்தின் புதிய வெளிப்பாடு. இது ஒரு சரியான பொருத்தமாக இருந்தது.

கூகிளின் ‘கூகிள் ஃபார் இந்தியா’ திட்டம் முற்றிலும் புதியது. டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உயர்த்துவது என்பது ஒரு நேர்மையான நோக்கம்.

அவர்கள் உயரிய நோக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அது இந்தியாவிலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு இந்தியர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

Attachments area

ரூ 100 செலவில் குடும்பத்தோட நிறைய படம் பார்க்கலாம்.; JSK தரும் அண்டா ஆஃபர்.!

ரூ 100 செலவில் குடும்பத்தோட நிறைய படம் பார்க்கலாம்.; JSK தரும் அண்டா ஆஃபர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jsk film corporationப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌
தயாரிப்பாள‌ர் JSK அவ‌ர்க‌ள் Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக‌ இம்மாத‌ம்
ஆகஸ்ட் 28ம் தேதி முத‌ல் JSK PRIME MEDIA டிஜிட்ட‌ல் த‌ள‌ம் அறிமுக‌மாக‌வுள்ளது.

இதில் ம‌க்க‌ள் நீங்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ விரும்பி பார்க்க‌ நினைக்கும் சூப்ப‌ர்ஹிட் திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம்.

அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌.

அப்ப‌டி வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.

அதில் முத‌லாவ‌தாக JSK FILM CORPORATION தாயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் C வேல்ம‌தி இய‌க்க‌த்தில் அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் வெளியாக‌ உள்ள‌து.

இத்திரைப்ப‌ட‌ம் முழுக்க‌ முழுக்க‌ கிராம‌த்தை மைய‌மாக‌க்கொண்டு ஒரே நாளில் ந‌ட‌க்கும் ந‌கைச்சுவை க‌லந்த‌ குடும்ப திரைப்ப‌டமாகும். ப‌ட‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌
ந‌டித்துள்ளார்.

அவ‌ர்க‌ளின் ந‌டிப்பு எப்ப‌வும்போல‌ ர‌சிக‌ர்க‌ளை ஈர்க்கும் என்ப‌தில் சிறிதும் ச‌ந்தேக‌ம் இல்லை.இதில் நடித்த 100 கதாபாத்திர‌மும் க‌தையில் அண்டாவோடு சேர்ந்து
நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்க‌ள் என்ப‌தே உண்மை.

ஓர் அண்டாவை மைய‌மாக ‌வைத்து காதல், பாசம், காேப‌ம், ந‌கைச்சுவை,பிரிவு,இழப்பு,
ஜாதி, ம‌த‌ம், இப்படி ப‌ல்வேறு
உணர்வுகளை அண்டாவ காணோம் ஒரே திரைப்ப‌ட‌த்தில் காண‌லாம்.

இப்ப‌டி அனைவ‌ரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் JSK PRIME MEDIA Digital த‌ள‌த்தில் வ‌ரும் ஆகஸ்ட் 28ம் தேதி உல‌க‌மெங்கும் வெளியாக‌ உள்ள‌து.

இப்ப‌ட‌த்தை தொட‌ர்ந்து Mummy Save Me, Va Deal போன்ற‌ புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌.

நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம்.

புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும்
அந்த‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளின் க‌ட்ட‌ணங்க‌ளில் விப‌ந்த‌னைக‌ளுக்குட்ப‌ட்டு பார்த்து ம‌கிழலாம்.

Jsk Prime Media App உங்க‌ள் Smart TV , IOS , Android, Fire Stick, Web Browser எல்லாவ‌ற்றிலும் எளிமையான‌ முறையில் கிடைக்கும்.

வெறும் 100 செலவில் உங்க‌ளுக்கு பிடித்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை குடும்ப‌த்தோடு பார்த்து கொண்டாடத் தயாராகுங்கள்.

வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!

வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iragi iragi songமைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது !

50 வயது நிரம்பிய கணவன் – மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

இந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது .

இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

editor b leninதிரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு.

இன்றும் தனது 74வது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி கட்டில் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.

நமக்கு முந்தைய தலைமுறை இயக்குனர் பீம்சிங் அவர்கள் எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி படங்கள் எடுப்பது வழக்கம். அவரின் மகனான பி,லெனின் அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு அதே நாளில் பிறந்திருக்கிறார் என்ற செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் படங்களிலும், இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்தனம்,ஷங்கர் மற்றும் சர்வதேச இயக்குனர்களோடும் எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் அவர்கள் 5 தேசிய விருதுகளை பெற்றவர்.

மேலும் பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும்,இந்திய தேசிய விருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

இன்றும் நவீன சிந்தனைகளோடு, தொழில்நுட்பத்தையும் இணைத்து திரைத்துறையில் புதிய வழிகாட்டுதலை ஆர்வமிக்க இளைஞர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

புதிதாக சினிமாவுக்கு வருபவர்கள் இவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆளுமைத்திறன் கொண்ட பி.லெனின் அவர்களின் கதை, திரைக்கதை, வசனத்தில், படத்தொகுப்பில் நான் கட்டில் திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. இவ்வாறு கூறினார் இ.வி.கணேஷ்பாபு.

More Articles
Follows