வெள்ளி விழா நாயகன் மோகன் ரீஎன்ட்ரி.; டைரக்டர் விஜய்ஸ்ரீ கொடுத்த வேறலெவல் அப்டேட்

வெள்ளி விழா நாயகன் மோகன் ரீஎன்ட்ரி.; டைரக்டர் விஜய்ஸ்ரீ கொடுத்த வேறலெவல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி மற்றும் கமலுக்கே போட்டியாக கருதப்பட்டவர் நடிகர் மோகன். இவர் பல படங்களில் மேடை பாடகராக நடித்ததால் இவருக்கு மைக் மோகன் என்ற செல்லப்பெயரும் உண்டு.

இளையராஜா இசையில் இவரது பாடல்கள் மற்றும் படங்கள் பெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். இதற்கு முன்பே மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ திரைப்படம் 1 வருடம் ஓடி இவரது புகழை பட்டி தொட்டியெங்கும் சென்றயடைய வைத்தது.

இதனையடுத்து கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, உதயகீதம், மெல்ல திறந்தது கதவு, இதயகோயில், மௌனராகம், உயிரே உனக்காக என பல வெள்ளி விழா படங்களை கொடுத்தார்.

எனவே இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் திரையுலகினர் அழைப்பதுண்டு.

1990களில் இவரது மார்க்கெட் வீழ்ச்சியை காண தொடங்கியது. இதனையடுத்து 1999ல் அன்புள்ள காதலுக்கு என்ற ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்த படமும் சரியாக போகவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் 2008ல் ‘சுட்டப்பழம்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.

ஆனாலும் மோகன் பாடி நடித்த பாடல்களை இன்று வரை இவரது ரசிகர்கள் இரவு நேரங்களில் கேட்டுவிட்டுத்தான் உறங்க செல்கின்றனர்.

மோகன் படங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் நிறைய பாடல்களை பாடியுள்ளார். எனவேதான் எஸ்பிபி மறைவு தனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என மோகன் அப்போதைய பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

புதிய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தபோதிலும் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருந்தார் மோகன்.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மோகனை நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.
ஆனால் இது வழக்கமான மேடை பாடகர் கதையில்லையாம். எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆக்சன் த்ரில்லராக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது சேவல் சண்டையை மையப்படுத்திய கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை 2022 ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

தாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படம் 26 ஜனவரி 2022ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ‘பப்ஜி’ படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் மோகனை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வரும் விஜய்ஸ்ரீயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Actor Mohan reentry first look update by Director Vijay Sri

மார்கழி குளிரில் மனங்களை மகிழ்விக்க தொடங்கியது மக்களிசை

மார்கழி குளிரில் மனங்களை மகிழ்விக்க தொடங்கியது மக்களிசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 ) கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன், நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும்,

(25/12/2021) தேதியில் பம்பை பறையிசை குழுவினர், புத்தர் கலைக் குழுவினர், கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா, சுகந்தி ஆகியோரும்,

(26/12/2021) தேதியன்று ஐஐடியில் ஒப்பாரி, ஜெயக்குமார் மற்றும் குழு, தெருக்குரல் அறிவு.

(27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு, காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு, தலித் சுப்பையா, சித்தன் குணா, திருமூர்த்தி ஆகியோரும்,

(28/12/2021) தேதியன்று கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை, கானா பாடகர்கள், முனியம்மா ஆகியோரும்.

(29/12/2021), (30/12/2021) ஆகிய தேதியன்று தமிழ் இசை சங்கத்தில், முரசு கலைக்குழு, ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு, கிடாகுழி மாரியம்மா, எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா, மலைவாழ் மக்கள் பாடல்கள், குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத்,
இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும்,

(31/12/2021) அன்று மார்கழியில் மக்களிசையின் கடைசி நிகழ்வாக மியூசிக் அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள்.

Margazhiyil Makkalisai started in Chennai from christmas

பார்வதி ராசாக்கண்ணுக்கு கூடுதலாக 3 லட்சம் உதவும் லாரன்ஸ்..; முதல்வர் & ஜெய்பீம் குழுவினருக்கும் நன்றி

பார்வதி ராசாக்கண்ணுக்கு கூடுதலாக 3 லட்சம் உதவும் லாரன்ஸ்..; முதல்வர் & ஜெய்பீம் குழுவினருக்கும் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமைநிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.

பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம்.

விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்தநிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.

பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்வோம்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence donated Rs 2 lakhs to Parvathy Ammal

எனக்குள் தூண்டுதலை உருவாக்கியவர் தனுஷ்.; தர்பங்கா விழாவில் விருது பெற்ற தருண்

எனக்குள் தூண்டுதலை உருவாக்கியவர் தனுஷ்.; தர்பங்கா விழாவில் விருது பெற்ற தருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் கிட்டத்தட்ட 50 விருதுகளை அள்ளி வந்துள்ளது.

இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என நினைக்க வைத்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

இந்தநிலையில் தேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார் தருண் குமார். தேன் படத்திற்கு மட்டுமல்ல, நடிகர் தருண் குமாருக்கும் மகுடத்தில் சூடப்பட்ட இன்னொரு மயிலிறகாக இந்த விருது அமைந்துள்ளது..
.
இதுபற்றி நம்மிடம் தருண் குமார் பேசும்போது…

“ஒருவரின் கடினமான உழைப்புக்காக கிடைக்கும் விருது என்பது உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் எப்போதுமே பெற்றிராத சந்தோஷமான தருணங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.. இது தேன் படத்திற்காக நான் இரண்டாவது முறையாக பெறும் விருது..

முன்னதாக தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான முதல் விருதை பெற்றேன்.

தற்போது தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் எனது நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து, அதற்காக இந்த சிறந்த நடிகர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து இன்னும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேன் படத்தில் நான் நடித்திருந்த வேலு கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒன்றாகவே இருந்தது. என் உடலில் உள்ள காயங்களும் தழும்புகளும் அந்த கடின உழைப்பை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

நீங்கள் உங்களுடைய இதயத்தையும் ஆன்மாவையும் நூறு சதவீதம் நேர்மையாக உங்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கும்போது அது எல்லைக்கோடுகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மக்களின் இதயங்களை தொட்டுவிடும்.

இதுபோன்ற விருதுகள் தான், நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான தூண்டுதலாக எங்களுக்கு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனது போராட்டத்திற்கும் கடின உழைப்புக்குமான ஒரு அங்கீகாரத்தையும் வெற்றியையும் இந்த படம் எனக்கு கொடுத்துள்ளது.

பர்சனலாக சொல்லவேண்டுமென்றால் என்னை பொருத்தவரை கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு திரையுலக பயணத்தை அமைத்துக்கொண்டு லட்சக்கணக்கானோருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சாரைத்தான் எனக்கான தூண்டுதலாகவும் நான் கருதுகிறேன்.

தர்பங்கா என்பது பீகாரின் கலைகளின் தலைநகரமாகும். அப்படிப்பட்ட தர்பங்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா என்பது இந்திய திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அந்த திரைப்பட விழாவில் எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருப்பதை ஒரு சாதனையாகத்தான் நான் கருதுகிறேன்.

இந்த விருது வழங்கியதன் மூலம் எனது கடின உழைப்புக்கான அங்கீகாரத்தை வழங்கி கவுரவப்படுத்திய விழா அமைப்பாளர்களுக்கும் விழா நடுவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. என்னுடைய தயாரிப்பாளர் அம்பலவாணன் மற்றும் பிரேமா, இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் உடன் நடித்த சக நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் தேன் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள இப்போதிருந்தே நான் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்” தருண் குமார்.

Tharun Kumar has won yet another Best Actor award for ‘Thaen’ at Darbhanga International Film Festival 2021

அஜித் – நயன்தாரா ரூட்டில் சுபிக்‌ஷா.; துக்கம் தூக்கலாய் ஒரு படக்குழுவினர்.!

அஜித் – நயன்தாரா ரூட்டில் சுபிக்‌ஷா.; துக்கம் தூக்கலாய் ஒரு படக்குழுவினர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு தரமான உற்பத்தி பொருளாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இருந்தால் மட்டும் தான் மார்கெட்டில் நல்ல விற்பனை இருக்கும்.

எனவே தான் திரையுலகினர் தங்கள் படத்தின் விளம்பரங்களுக்கு தாராளமாக செலவு செய்கின்றனர். பல புரோமோசன் விளம்பர நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் நடிகர் அஜித் & நடிகை நயன்தாரா ஆகியோர் புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

சினிமாவில் இவர்கள் தங்கள் கேரியரை துவங்கும் போது படவிழாக்களில் கலந்துக் கொண்டனர். ஏனென்றால் அன்று இவர்களுக்கே விளம்பரம் தேவைப்பட்டது என்பது வேறுக்கதை.

இந்த நிலையில் அஜித் நயன்தாராவை போல் நடிகை சுபிக்‌ஷா தங்கள் பட புரோமோசனில் கலந்துக் கொள்ளவில்லை என படக்குழுவினர் வேதனையில் உள்ளனர்.

அதுப்பற்றிய விவரம் வருமாறு…

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக “சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை” என்று பெயர் வைத்துள்ளனர்.

நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அதை கடைபிடிப்பதில்லை அந்த வகையில் கடுகு படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெயியீட்டிற்கு வருமாறு, தயாரிப்பாளரும், இயக்குனரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை, நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்.

இதற்கிடையே இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகின்ற 31 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டும் வர மறுக்கிறார்.

அவருக்கு எந்தவொரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை இருந்தும் இதுபோல் நடந்து கொள்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க போகிறோம்.

இந்த படத்தை உருவாக்க நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம் அதன் பலனாக 8 விருதுகளும் வாங்கியுள்ளது எங்களது படம் என்கிறார் மனவேதனையுடன் நாயகன் ருத்ரா.

ஒளிப்பதிவு – பிஜு விஸ்வநாத்
இசை – ராஜேஷ் அப்புகுட்டன் – ருத்ரா
பாடல்கள் – கட்டளை ஜெயா
எடிட்டிங். – சுதாகர்
கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர்
நடனம் – ராபர்ட், ரேகா
ஸ்டண்ட் – விஜய்
வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – அன்பு
தயாரிப்பு – நுபாயஸ் ரகுமான்
THREE FACE Creations Release
கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன்.

Actress Subiksha follows Ajith and Nayanthara way

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ள கிறிஸ்துமஸ் நாளில் வரும் விஷால் பட டீஸர்

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ள கிறிஸ்துமஸ் நாளில் வரும் விஷால் பட டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.
அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் 25.12.2021 அன்று வெளியாகிறது.

மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது படத்தின் இறுதி பதிப்பு தயாரானது.

இந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2022 ஜனவரி குடியரசுத் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது படத்தின் டீசரை டிசம்பர் 25 அன்று படக்குழு வெளியிடுகிறது.

இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர்.

விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றுகிறார்.

Vishal’s Veerame Vaagai Soodum teaser will release on christmas

More Articles
Follows