மாற்றுத்திறனாளியாக நடித்து வீடு கட்டி தருவேன்.; மல்லர் கம்ப கலைஞர்களுக்கு உதவும் லாரன்ஸ்

மாற்றுத்திறனாளியாக நடித்து வீடு கட்டி தருவேன்.; மல்லர் கம்ப கலைஞர்களுக்கு உதவும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாற்றுத்திறனாளியாக நடித்து வீடு கட்டி தருவேன்.; மல்லர் கம்ப கலைஞர்களுக்கு உதவும் லாரன்ஸ்

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன்
கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் ….

நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை கடவுள் மாற்றுத்திறனாளிகளாக படைத்தாலும், அம்மா அப்பா ஏழ்மையாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எங்களுக்கு என ஒரு அறக்கட்டளை உருவாக்கி, எங்களுக்கு பயிற்சி தந்து வாய்ப்புகள் வாங்கித் தந்து, எங்களுக்கு கடவுளாக இருக்கிறார்.

டான்ஸ் மட்டுமல்லாமல் இப்போது எங்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி தர, இப்போது எங்கள் குழுவிற்கு பல வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது. நீங்களும் உங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது..

எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன்.

சினிமாவில் சில நேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் மாஸ்டர் என்பார்கள், நயன்தாரா த்ரிஷா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும் என்பேன்.

சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள். இது நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது உங்களால் முடியுமா ? எனக் கேட்டேன், ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள், இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை.

இவர்களால் எல்லாமே முடியும். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய காரணமே, இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன்.

இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்தக்கலை இவர்களை வாழ வைக்கும். இந்தக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன். அதில் நான் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறேன்..
அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

மேலும் இக்கலையை கற்றுதந்த மாஸ்டர் ஆதித்யன் மற்றும் குழுவினரை பாராட்டினார் ராகவா லாரன்ஸ்.

Actor Lawrence help to Mallar Kabbam artists

பாரபட்சமில்லாத இளையராஜா இசை.. – மோகன்.; உடம்பில் 12 ப்ளேட் இருந்தாலும் விஜய்ஸ்ரீ பிளட்டில் சினிமாதான் – அனுமோல்

பாரபட்சமில்லாத இளையராஜா இசை.. – மோகன்.; உடம்பில் 12 ப்ளேட் இருந்தாலும் விஜய்ஸ்ரீ பிளட்டில் சினிமாதான் – அனுமோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரபட்சமில்லாத இளையராஜா இசை.. – மோகன்.; உடம்பில் 12 ப்ளேட் இருந்தாலும் விஜய்ஸ்ரீ பிளட்டில் சினிமாதான் – அனுமோல்

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.

இந்நிகழ்வில்…

தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது…

பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம் ‘பவுடர்’. இப்படம் முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன் சாருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு. படம் நன்றாக வந்துள்ளது. மோகன் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகை ஸ்வாதி பேசியதாவது…

நான் கேரளாவைச் சேர்ந்தவள். இந்தப்படம் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. எல்லோருமே ஜாலியா எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். மோகன் சார் ரொம்ப அழகாக சொல்லித் தருவார். அவர் நடிப்பு, பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படம் மிக அட்டகாசமாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ரஷாந்த் ஆர்வின் பேசியதாவது…

இந்தப்படம் மிகப்பெரிய வாய்ப்பு. மோகன் சாரை எத்தனையோ படங்களில் ரசித்திருக்கிறோம், அவரது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை நன்றாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். இந்த வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. மோகன் சார் அற்புதமாக நடித்துள்ளார். ‘ஹரா’ உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகை அனித்ரா பேசியதாவது…

இந்தப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. மோகன் சாருடன் கூடவே இருப்பது மாதிரியான கேரக்டர். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம், அவர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கூட நடிப்பேன் என நினைக்கவில்லை. இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் சாருக்கு நன்றி. இயக்குநரின் பவுடர் படத்திலும் நடித்துள்ளேன், இந்தப்படம் சூப்பராக வந்துள்ளது. ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெயக்குமார் பேசியதாவது…

மோகன் சார் ரசிகன் நான், அவர் கூட நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு பெருமை. இயக்குநர் மிக ஜாலியாக, எல்லோரிடமும் இயல்பாக பழகி, படத்தை எடுத்தார். டீசர் சூப்பராக வந்துள்ளது. இசை அட்டகாசமாக உள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகர் ஆதவன் பேசியதாவது…

சின்ன வயதிலிருந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் மோகன் சார் தான். என் அம்மா அவர் பாடல்களுக்கு மிகப்பெரிய ஃபேன். அப்படி வியந்து பார்த்த நடிகரை, விஜய் ஶ்ரீ சார் ஆக்ஷன் ஹீரோவாக காட்டியுள்ளார். மோகன் சார் இப்படத்தில் செம்மையாக ஆக்ஷன் செய்துள்ளார். படம் அட்டகாசமாக வந்துள்ளது. இன்னும் இதுமாதிரி நிறையப் படங்கள் மோகன் சார் செய்ய வேண்டும். மோகன் சாரை வைத்து தயாரிப்பாளர் தொடர்ந்து படம் எடுப்பார், இயக்குநரும் தொடர்ந்து இயக்குவார் என நம்புகிறேன், நன்றி.

நடிகர் சிங்கம் புலி பேசியதாவது…

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் ஒரு விழாவில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இந்தப்பட வாய்ப்பு, நமஸ்காரம் சரவணன் எனும் நண்பரால் வந்தது அதுவும் பவுடர் படத்தில் தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் ஸ்பாட் போனால் இயக்குநர் மூன்று கேமரா வைத்து காட்சிகளை எடுப்பார், வித்தியாசமாக இருக்கும். அது தான் அவர் திறமை. இயக்குநர் மிகப்பெரிய ஆக்சிடெண்டை தாண்டி வந்திருக்கிறார். ஹரா மாதிரி இன்னும் நிறைய படங்கள் அவர் எடுக்க வேண்டும். நல்ல உழைப்பாளி, டீசர் பார்த்தேன் அதிலேயே 43 ஷாட் இருக்கிறது, பார்க்க அட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துகள். அனுமோல் உடன் அயலி செய்தேன் இங்கு அவரிடம் பேசலாம் என நினைத்தேன், ஆனால் டிரெய்லரில் ஒரு உதை விடுகிறார் அதைப் பார்த்தவுடனே அப்படியே வீட்டுக்குப் போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன்.

இந்தப்படம் ஷூட்டிங்கில் தினமும் நிறையக் கூட்டம் இருக்கும், பட்ஜெட் பெரிதாகுமே எனக் கேட்டால், மோகன் சார் படம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பார் இயக்குநர். இப்போதெல்லாம் ஒரு படத்தை விளம்பரப்படுத்த ஏதோதோ செய்கிறார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு அது எதுவும் தேவை இல்லை, மோகன் சார் ஒருவரே போதும். அவர் 5 படம் தான் மைக் பிடித்து நடித்தேன் என்கிறார் ஆனால் அது ஒவ்வொன்றும் 5 வருடம் ஓடியிருக்கிறதே! இன்றும் எங்கும் அவர் பாடல்கள் தான். அவர் எத்தனையோ பேரை வாழவைத்துள்ளார். இசையை யாரும் மறக்க முடியாது, அது போல் மோகன் சாரை யாரும் மறக்க முடியாது. தயாரிப்பாளர் அனைவரையும் அத்தனை ஆதரவுடன் பார்த்துக் கொண்டார், அடுத்த படத்தில் என்னை மறக்க மாட்டார் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றென்றும் எங்களை வாழவைக்கும் அனைவருக்கும் நன்றி.

நாயகி அனுமோல் பேசியதாவது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், எனக்கு நீங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த வாய்ப்பு தந்த விஜய் ஶ்ரீ சாருக்கு நன்றி. நான் மோகன் சார் ஆக்டிங் பார்த்து தான் நடிக்க கற்றேன். அவர் பாடல்கள் எல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எல்லாப் படத்திற்கும் கதை கேட்டால் தான் எக்ஸைட் ஆவார்கள், ஆனால் இந்தப்படத்தில் மோகன் சார் நடிக்கிறார் என்றவுடனே நான் எக்ஸைட் ஆகிவிட்டேன். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் அசத்தியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இயக்குநர் மிகக் கடினமாக உழைத்துள்ளார். ஆக்சிடெண்ட்டில் அவர் உடம்பில் 12 பிளேட் வைத்திருக்கிறார்கள், ஆனாலும் எப்போதும் படம், படம் என்றே இருப்பார். அவர் மனதிற்கு கடவுள் பெரிய வெற்றியைத் தருவார். எப்போதும் தமிழில் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள், இப்படத்திற்கும் அதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன், நன்றி.

இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியதாவது…

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த மேடை ஏறி நிற்பேன் என நினைத்து பார்க்கவில்லை. காரில் போகும் போது ஒரு ஆக்ஸிடெண்ட், மூன்று நாள் கழித்து தான் எனக்கு நினைவே வந்தது. மோகன் சார் குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்துவிட்டார். எல்லோருக்கும் குடும்பம் தான் முக்கியம். 16 லட்சம் செலவானது. மோகன் சார், மோகன் ராஜ் சார் தான் பார்த்துக் கொண்டார்கள்.

மோகன் சார் மிகப்பெரிய ஆளுமை, ஆனால் ஒரு துளி கர்வம் கூட அவரிடம் இருக்காது. இந்தப்படத்திற்காக பேசும்போது, அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது, அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள், ஆனால் கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள். அவர் வந்தால் தெரியும் அவர் மார்க்கெட் என்னவென்று. எல்லாவற்றையும் கடந்து அவரின் மனிதம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் தான் என்னை உயிர்ப்பித்தார். நாம் பல இடங்களில் சீட் பெல்ட் போடுவதில்லை, கவனம் இல்லாமல் இருக்கிறோம், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். மோகன் சார் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், நன்றி.

நடிகர் மோகன் பேசியதாவது…

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எத்தனையோ படம் நடித்திருக்கலாம், ஆனால் நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. ‘ஹரா’ தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன்.

என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம்.

அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம். நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். நிகில் தான் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார், எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். ஏன் ஹராவை ஒத்துக்கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய் ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது, அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும். விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பார். அவர் பிழைத்து வரக் காரணம் அவர் மனைவி, குழந்தைகள் புண்ணியம் தான். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் தருவார். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை ஆனால் மூன்று பாடல்கள் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார். ராஜிவ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். சிங்கம்புலி, அனுமோல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி.

‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்கள்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.

Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥

Mohans Haraa movie teaser launch highlights

‘அக்கரன்’ படத்தில் ஆக்க்ஷன்.. ஆனாலும் ஓகே… இதுவரை செய்யாத சப்ஜெக்ட்.. – வெண்பா

‘அக்கரன்’ படத்தில் ஆக்க்ஷன்.. ஆனாலும் ஓகே… இதுவரை செய்யாத சப்ஜெக்ட்.. – வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அக்கரன்’ படத்தில் ஆக்க்ஷன்.. ஆனாலும் ஓகே… இதுவரை செய்யாத சப்ஜெக்ட்.. – வெண்பா

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது..
இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள்.

ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது..

நான் சினிமாவிற்கு மிகவும் புதிது. என் நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது. எனக்கு சினிமா செய்யும் ஐடியா எதுவும் இல்லை. கார்த்திக்,கருப்பசாமி எனத் திருப்பரங்குன்றம் நண்பர்கள் இணைந்து எல்லோரும் பேசினோம் உடனே குன்றம் புரடக்சன்ஸ் எனப் பெயர் வைத்தோம். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஷிவானி பிலிம்ஸ் சார்பில் செந்தில் பேசியதாவது..

சினிமா எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம் என்பார்கள், ஆனால் ஒரு படத்தைக் கஷ்டப்பட்டு எடுத்தால் கண்டிப்பாக ஈஸியாக ரிலீஸ் செய்யலாம். அக்கரன் அந்த மாதிரியான ஒரு நல்ல படம். அதை ஷிவானி சினிமாஸ் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி. நன்றி.

இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது..

நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம் எஸ் பாஸ்கரைத் தெரியும், அவர் பெயர் சொன்னவுடனே தயாரிப்பாளர் ஆபிஸ் போட்டுத் தந்து விட்டார். இருவருக்கும் நன்றிகள் இப்படத்தில் கேமராமேன் ஆனந்த் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். படத்தில் எம் எஸ் பாஸ்கர் அப்பா அட்டகாசமாக நடித்துள்ளார், இப்படம் புதுமையாக இருக்கும். இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஹரி பேசியதாவது..

எங்களை ஆதரித்துப் பாராட்ட வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் மாதிரி ஆளுமையின் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கார்த்திகேயன் சார், கருப்புசாமி சார், இயக்குநர் என எல்லோருக்கும் நன்றிகள். அக்கரன் படத்தில் எங்களுக்குச் சவாலாக இருந்தது. எம் எஸ் பாஸ்கர் சாருக்கு டைட்டில் சாங் செய்தது தான். அதை முதன்முறையாகச் செய்தது நாங்கள் தான் என்பது பெருமை. எம் எஸ் பாஸ்கர் சார் இதுவரை பார்க்காத பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் என்னுடன் இசையில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. அனைவருக்கும்

தமிழ் சினிமாஸ் கருப்பசாமி பேசியதாவது..

தடை எப்போதும் நம் கூடவே வரும் அதை உடைக்க பழகிக்கொண்டால் நம்மைக் கண்டு மிரளும். அது தான் வாழ்க்கையின் தொடக்கம். பல தடைகளைத் தாண்டி அக்கரன் இன்று திரைக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி. ஒரு படத்தை எடுக்கும் போது, ஸ்டாரை வைத்துப் படமெடுக்க வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் எங்களுக்கு நட்சத்திரமே கிடைத்துள்ளார். என்னை வைத்து முதலில் ஒரு படமெடுக்கத் தயாரிப்பாளர் முன் வந்தார் அப்போது உருவாக்கியது தான் தமிழ் சினிமாஸ் ஆனால் ஒரு ஆக்ஸிடெண்டில் தவறிவிட்டார், அவர் பெயர் தியாகராஜன் அவர் பெயர் நிலைக்க வேண்டும் என்று தான் அதை விநியோகத்தில் இன்று கொண்டு வந்துள்ளோம். நூறு எதிரிகள் இருந்தாலும் ஒரு நண்பன் இருந்தால் போதும் உலகை ஜெயிக்கலாம். ஒரு மிகச்சிறந்த படம் இது அதனால் தான் இதை எடுத்தோம். ஷிவானி சினிமாஸ் உடன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இப்படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வெண்பா பேசியதாவது..

இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம், இந்த படத்தின் ஆடிசன் சென்றபோது, இயக்குநர் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது.. உங்களுக்கு ஓகே என்றால் எனக்கு ஒகே என்றார்.

எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது, நான் இதுவரை லவ், செண்டிமெண்ட் மாதிரியான படங்கள் மட்டுமே செய்து இருக்கிறேன். இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் சினிமா தனக்கு புதுசு என்றார், ஆனால் இந்த மாதிரியான கதையை எடுத்து, தயாரித்து, எங்கள் மாதிரியானவர்களுக்கு வாய்ப்பு தருவது பெரிய விஷயம் சார் நன்றி. எம் எஸ் பாஸ்கர் சார் நடிப்பிற்கு எல்லோருமே ரசிகர்கள் தான்.. நானும் அதில் ஒருத்தி. அவருக்கு மகளாக நடிக்கிறேன் என்றபோது நெர்வஸாக இருந்தது.

எங்களுடன் எளிமையாகப் பழகி அழகாகச் சொல்லித்தந்தார். அவருடன் நடித்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை எல்லாம் நன்றாக வந்துள்ளது. நல்ல படம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.

நடிகை பிரியதர்ஷினி பேசியதாவது..

ஜீவன் மணி எனும் இயக்குநர் என்னை வைத்து ஷார்ட் ஃபிலிம் எடுத்தார் அதன் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்ததது. தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் பேசியதாவது..

ஒளிப்பதிவாளர் ஆனந்த் அண்ணா மூலம் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதற்கு முன் பாலா சாரின் வர்மா படத்தில் நான் நடித்திருந்தேன் ஆனால் அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை, ஓடிடியில் தான் வெளியானது அதைப் பார்த்துவிட்டு இந்த பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தர வேண்டும் என ஆனந்த் அண்ணா எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். கதையை நம்பி ஒருமுயற்சியாக இந்தப்படத்தைச் சின்ன பட்ஜெட்டில் எல்லோரும் உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். இது போன்ற படத்தை தயாரிக்க முன்வந்த கார்த்திகேயன் சாருக்கு என் நன்றிகள், எம் எஸ் பாஸ்கர் சார் மாதிரி பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் போது தான், நாம் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. ஹரி மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை ஆதரிக்க வேண்டும். படம் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நன்றி.

நடிகர் விஸ்வநாத் பேசியதாவது..

அட்டகத்தி முதல் இப்போது வரை ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஆனந்த் சார் மூலம் தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளது எனக்கு தெரிகிறது. நன்றி. எம் எஸ் பாஸ்கர் எந்தப்படத்தில் நடித்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார். அதே போல் உடன் நடிப்பவர்களுக்கு நல்ல ஸ்பேஸ் தருவார். கபாலி படத்தில் நடித்தபோது ரஜினி சார் உடன் நடிப்பவர்களை கூப்பிட்டு தனித்தனியாகப் பாராட்டுவார். அதே போல் எம் எஸ் பாஸ்கர் சாரும் எல்லோரையும் பாராட்டினார். உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி சார். இப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். ஹரி சார் மியூசிக்கில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. எல்லோருக்கும் நன்றி.

நடிகர்கள்- எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா

தொழில்நுட்ப கலைஞர்கள்..

எழுத்து இயக்கம் – அருண் K பிரசாத்
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்

Akkaran action movie i said ok says Venba

‘ரோமியோ’ படத்தில் சிம்பிள் & சேலன்ஜிங் கேரக்டர் எனக்கு… – மிருணாளினி

‘ரோமியோ’ படத்தில் சிம்பிள் & சேலன்ஜிங் கேரக்டர் எனக்கு… – மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரோமியோ’ படத்தில் சிம்பிள் & சேலன்ஜிங் கேரக்டர் எனக்கு… – மிருணாளினி

சமூக வலைதளம் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, தற்போது கதாநாயகியாக மட்டும் அல்லாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகையாகவும் வலம் வருகிறார்.

கதை தேர்வில் கவனம் செலுத்துபவர், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘ரோமியோ’ படத்தில் நாயகியாக மிருணாளினி நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அதற்கு முன்பாக வெளியான போஸ்டரில் மிருணாளினி ரவி மது பாட்டிலுடன் இருப்பதும், அதை பார்த்து மிரண்டு போகும் விதத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி கையில் பால் சொம்பு இருப்பது போன்றும் இருந்த புகைப்படமே, இது நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் முக்கியத்தும் உள்ள படம் என்பதை புரிய வைத்துவிட்டது.

இந்த நிலையில், ‘ரோமியோ’ படத்தை பார்த்த பலர் படம் சிறப்பாக வந்திருப்பதாக சொல்வதோடு, விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பு & மிருணாளினியின் உடனான கெமிஸ்ட்ரி ஆகியவற்றை குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள்.

இதனால், ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் நடித்தது குறித்து கூறிய நடிகை மிருணாளினி ரவி…

“சில கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு எளிதாகவும் அதேசமயம் சவாலாகவும் இருக்கும். ‘ரோமியோ’வில் எனது கதாபாத்திரம் இதுபோன்றது தான். என்னுடைய நிஜ கதாபாத்திரம் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறுபட்டது.

பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். இயக்குநர் விநாயக் வைத்தியானந்தன் என்னிடம் கதையை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் வலுவான எமோஷனல் அடித்தளமும் இதில் இருக்கிறது என்பது புரிந்தது.

கூடுதலாக, திறமையான நடிகர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஆரம்பத்தில் தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் பல அனுபவமிக்க நடிகர்களுடன் பணியாற்றப் போகிறேன் என்பது பதட்டமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது.

’ரோமியோ’ ஒரு மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்” என்றார்.

அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை (ஏப்ரல் 11) உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் வெளியிடுகிறது..

In Romeo movie my character is simple and Challenge says Mirunalini

கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’

திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார்.

யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள் ‘கோடீ’ எனும் படத்தின் தலைப்பை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

டாலி தனஞ்செயாவின் வசீகரிக்கும் கண்களுடன் சுவாரசியமான அம்சங்களையும் இணைத்து, கதையின் தீவிரத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மடிக்கப்பட்ட 500 நோட்டுகளால் கடிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

‘கோடீ’ – ஒரு மில்லியன் கனவுகளை கொண்ட அன்றாட நபரை சுற்றி வருகிறார் என தலைப்பு தெரிவிக்கிறது.

இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்காக பாடுபடும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராயக்கூடும் என தனஞ்செயா ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளார்.

ஹொய்சாலாவின் கடைசி பயணத்திற்குப் பிறகு.. ஒரு வருட இடைவெளிக்குப்பின் தனஞ்செயா கன்னட திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார்.

அவர் ‘கோடீ ‘ படத்தின் மூலம் புதிய அலைகளை உருவாக்கவிருக்கிறார். இந்தத் திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரிய தருணத்தை குறிக்கும்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரம். இதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்…

”கடந்த ஆண்டு தொலைக்காட்சி சேனலில் இருந்து வெளியே வந்தவுடன் பெரிய திரையில் கதைகளை உயிர்ப்பிப்பதே என் இலட்சியமாக இருந்தது ” என்றார்.

இந்தி திரையுலகில் வெற்றியை ருசித்திருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே இந்த படத்தை தற்போது கன்னடத்திலும் தயாரிக்கிறார்.

அருண் பிரம்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வாசுகி வைபவ்- நோபின் பால் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், இதன் டீசர் எதிர்வரும் 13 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Param and Daali Dhananjeya in Kotee

கலாம் கண்ட கனவு.; என்னைப் போல வாழாதீங்க.. ‘வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

கலாம் கண்ட கனவு.; என்னைப் போல வாழாதீங்க.. ‘வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலாம் சொன்ன கனவு.. என்னைப் போல வாழாதீங்க.. வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..

*21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ள குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது*

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்ரவர்த்தியார் நடித்திருக்கும் படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.

நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குகன் சக்வர்த்தியாரின் தாய் மற்றும் தந்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு…

எழுத்தாளர் இயக்குநர் டி கே சண்முக சுந்தரம் பேசியதாவது…

ஒரு இனிமையான விழா. 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன் சக்வர்த்தியார். திரைப்படக் கல்லூரியில் படித்தவர், அதனால் தான் 21 கிராப்ட்களை கையாண்டுள்ளார். அவரிடம் அதற்கான அறிவு இருக்கிறது. ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல் எழுதியுள்ளார், தத்துவ பாடலும் பாடியுள்ளார் பல விதங்களில் அசத்தியுள்ளார். இந்தப்படம் என்ன ஜானர் எனத் தெரியவில்லை, மர்மக்கதையோ என்று நினைதேன்.

தலைப்பு வித்தியாசமாக பல சிந்தனைகளை தூண்டி விடுகிறது. ஆனால் சமூக சிந்தனையை பேசியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது. மன்னர்கள் ஆண்ட வங்காள விரிகுடா, இப்போது குகன் சக்வர்த்தியார் வசமாகியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். ஒரு படைப்பு மக்களுக்கு பயன்பட வேண்டும், அம்மாதிரியான படைப்பாக இப்படைப்பு இருக்குமென நம்புகிறேன். குகன் சக்வர்த்தியாருக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் கலைமாமணி பிரபாகரன் பேசியதாவது…

முயற்சி திருவினையாக்கும் எனும் பழமொழிக்கு உகந்தவர் குகன் சக்வர்த்தியார். எப்போது சந்தித்தாலும் இப்படம் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்துள்ளார்.

முத்துராமனின் மகன் கார்த்திக்கை பாரதிராஜா அழைத்து நடிக்க வைத்த போது, இனிமேல் நீ பபூன், ஒரு எண்டர்டெயினர், இயக்குநர் என்ன சொன்னாலும் அதைத்தட்டாமல், மக்களுக்கு பிடிக்கும் படி செய்ய வேண்டுமென சொன்னதாக சொல்வார்கள்.

அது போல் குகன் தன்னை மாற்றிக்கொண்டு இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். நாம் நம்பும் விசயத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அது போல் இப்படத்திற்காக உழைத்திருக்கும் குகன் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…

இந்த மேடை மிக முக்கியமான மேடை, வெற்றி பெற்றவர்களை பற்றிப் பேசும் மேடையை விட வித்தியாசமான மேடை எனக் கருதுகிறேன். அதற்கு காரணம் மாப்பிள்ளை குகன் தான்.

அவருடன் பழக ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை ஒரு வெள்ளந்தியாக உற்சாகமாக இயங்கும் மனிதனாகவே அவரைப் பார்த்துள்ளேன். அவரது அயராத உழைப்பு தான் அவருக்கு இந்த உயரத்தை, மேடையை தந்துள்ளது. பல கஷ்டங்களுக்கு இடையில் இந்தப்படத்தை எடுத்துள்ளார். எத்தனை பிரச்சனை என்றாலும் குகன் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.

அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கும். சினிமா எல்லோருக்கும் வெற்றியை தந்துவிடுவதில்லை, ஆனால் அதில் விடா முயற்சியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் குகன். உழைப்பவன் என்றும் தோற்பதில்லை, வாழ்த்துகள்.

நெட்பிளிக்ஸ் தமிழ்நாடு சங்கர் பேசியதாவது…

குகனுக்கு எல்லையே கிடையாது, ஒரே ஒரு ஆள் எல்லாவற்றையும் செய்வது மிகப்பெரிய சாதனை. அவருக்கு இன்னமும் நிறைய திறமை இருக்கிறது, அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் ஜெசிகா பேசியாதாவது…

நம்மால் ஒரு துறையிலேயே சரியாக வேலை செய்ய முடியாமல் தடுமாறுகிறோம். இந்த நிலையில் 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன். அவரது திறமையை பாராட்டி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற உங்கள் ஆதரவைத் தர வேண்டும், நன்றி.

மிராக்கல் மூவீஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பேசியதாவது…

இந்தப்படத்தில் 21 கிராப்ட்களையும் செய்து அசத்தியிருக்கிறார் குகன். படம் பார்த்தேன், அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார். பாடல்கள் அருமை.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தை வெளியிட வேண்டி பேசினோம், அவர்கள் படம் பிடித்துள்ளது இன்னும் ஒரு வாரத்தில் வெளியீடு பற்றி அறிவிக்கிறோம் என நம்பிக்கை தந்துள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

கருடானந்த சுவாமிகள் பேசியதாவது…

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நாம் இருக்கும் துறையில் சிறப்பாக இயங்குவது தான் நம் சிறப்பு, அந்த வகையில் திரைத்துறையில் 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன். குகனை எனக்கு பல காலமாகத் தெரியும், கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் மிகவும் நட்போடு பழகுபவர்.

ஒரு சந்திப்பில் வங்காள விரிகுடா படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார், அப்துல் கலாமின் சில காட்சிகள் என்னை நெகிழச் செய்தன. ஒரு காலத்தில் பாக்யராஜ், டி ராஜேந்தர் என, எல்லா கலைகளையும் கையாளும் திறமையாளர்களைப் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது அப்படியில்லை, இன்றைய காலகட்டத்தில் 21 கிராப்ட்களை கையாண்டிருப்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் சாதித்து காட்டியுள்ளார் குகன். எனக்கு குரு ஸ்தாணத்தை தந்து என்னை வாழ்த்த அழைத்து வந்துள்ள குகனுக்கு என் வாழ்த்துகள்.

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்களை ஜெயிக்க வைக்க ஒரு மந்திரம் இருக்கிறது அது மாதா பிதா தான். தாய் தந்தையை போற்றுங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எல்லோரும் இப்படத்திற்கு தங்கள் பரிபூரண ஆசிர்வாதத்தை தர வேண்டுகிறேன், நன்றி.

குகன் சக்கரவர்த்தியார் பேசியதாவது…

எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன், அது தான் இப்படம். பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், அப்துல்கலாம் என அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப்படம். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

என்னை மாதிரி வாழாதீர்கள், இவர்கள் மாதிரி வாழுங்கள் என சொல்வது தான் இந்தப்படம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, கலைஞர், அண்ணா எல்லோரும் வாழும் இடம் வங்காள விரிகுடா. அது போல் இந்தப்படமும் வாழும். இந்தப்படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள்.

ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் பேசிய இந்த மேடையில் நானும் இன்று பேசுகிறேன் என்பதே எனக்கு பெருமை தான். காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது, அறிவு வேண்டும். நல்ல படம், அருமையான கதை, நல்ல பாடல்கள் என படம் நன்றாக வந்துள்ளது. படம் நன்றாக இருந்தால் நீங்கள் பாராட்டுவீர்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. நான் உழைக்கிறேன், பிழைக்கிறேன், வாழ்த்துங்கள், நன்றி.

Gugan Chakravarthiyar speech at Vangala Viriguda event

—-

More Articles
Follows