தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய “பூமணி”படத்தில் இரண்டாவது நாயகியாகவும்,நடிகர் கார்த்திக் உடன் “கிழக்கு முகம்”என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்தார்.மேலும் சில படங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
Actor Hamsavardhans Wife Shanthi passed away