தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’
மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் டேனியல் பேசியதாவது…
சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை. ஆனால் இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். செங்களம் தமிழ்த் திரையில் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் பிரேம் பேசியதாவது…
“செங்களம் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ் ஆர் பிரபாகரனின் திரைக்கதை வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம். விரைவில் திரையில் காண நானும் ஆவலோடு உள்ளேன் நன்றி.
நடிகை ஷாலி பேசியதாவது…
நான் ஓடிடியில் முதல் முறையாக நடிக்கும் படைப்பு. இதில் கதை தான் நாயகன். இப்படைப்பில் வாய்ப்பளித்த இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சார் மற்றும் படக்குழுவிற்கு, ZEE5 நிறுவனத்திற்கு நன்றி. படைப்பைப் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.” என்றார்.
Actor Daniel speech at sengalam tariler launch