ஊரடங்கால் வீட்டுக்குள் உல்லாலா; கருக்கலைப்பு மாத்திரைக்கு தட்டுப்பாடு!

ஊரடங்கால் வீட்டுக்குள் உல்லாலா; கருக்கலைப்பு மாத்திரைக்கு தட்டுப்பாடு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abortion pills demand in Corona lock down daysகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருப்பதால் வருமானத்துக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

ஆனால் ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர்.

கணவன் மனைவி 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும் மற்றொரு புறத்தில்…. தாம்பத்ய உறவு மற்றும் கருத்தடைகளும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கணவன் மனைவி வீட்டிலேயே இருப்பதால் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.

பொதுவாக மருத்துவமனைக்கு, ஆண்கள், பெண்கள், கருக்கலைப்பு மாத்திரை கேட்பவர்கள் மிக அரிது.

ஆனால், இந்த ஊரடங்கில் சராசரியாக தினமும் நான்கு முதல், ஐந்து பேர் கருக்கலைப்பு மாத்திரைகளை கேட்டு வருகிறார்களாம்.

நிறைய மருந்தகங்களில், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்று தீர்ந்துவிட்டன. அதற்கும், தற்போது தேவை அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

Abortion pills demand in Corona lock down days

குடும்ப சண்டைகளை ஊ…..திப் பெரிதாக்கிய ஊரடங்கு.. – வழக்கறிஞர் இந்து

குடும்ப சண்டைகளை ஊ…..திப் பெரிதாக்கிய ஊரடங்கு.. – வழக்கறிஞர் இந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Advocate Indhu talks about Domestic violence during lock downகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு வழியின்றி சிலர் தவிக்கின்றனர்.

சில நிறுவனங்களில் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது வரை இந்தியாவில் மட்டும் ஊரடங்கு 40 நாட்களை நெருங்கி வருகிறது.

சாதாரண நாட்களாக இருந்த போது கணவன், மனைவி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வர். பின்னர் இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவர்.

அப்போது அசதியால் மற்ற வேலைகளை முடித்துவிட்டு உறங்கிவிடுவர்.

அதாவது சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அதனை மறந்துவிட்டு இரவில் மோதல் தவிர்த்து ஊடல் கூடும்.

ஆனால் தற்போது வீட்டிலே மன உளைச்சலுடன் ஆண்கள் பெண்கள் இருப்பதால் அதை வெளிப்படுத்தும் போது தம்பதியரிடையே மோதல் அதிகளவில் ஏற்படுகிறதாம்.

சின்னச்சின்ன சச்சரவுகள் கூட பூதாகரமாகி வன்முறையில் முடிவதாக நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பெண்களுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதாம். இதில் குடும்ப சண்டைகள் தொடர்பான புகார்கள் மட்டும் 80.

சென்னையில் ஊரடங்கு சமயத்தில் மட்டும் 2000 குடும்ப வன்முறை புகார்கள் குவிந்துள்ளது.

முன்பெல்லாம் கணவனிடம் சண்டை வந்தால் பெற்றோர் வீட்டுக்கு சென்று சில நாட்கள் பெண்கள் அங்கே தஞ்சம் அடைய முடியும்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் இந்து கருணாகரன் கூறியதாவது…

இளைய தலைமுறையினரிடம் சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. மேலும் கணவன் மனைவி இடையே புரிதல் இல்லை. இதுவே இன்றைய தலைமுறை தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்த லாக் டவுனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வராது.” என தெரிவித்தார்.

Advocate Indhu talks about Domestic violence during lock down

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் டிராய் ஸ்னீட் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் டிராய் ஸ்னீட் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gospel singer Troy Sneed dies from corona virusகொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 30.000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில் பிரபல பாடகரான டிராய் ஸ்னீட், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.

பிளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 52.

1999-ல் வெளியான ஹையர் ஆல்பத்துக்காக கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் டிராய் ஸ்னீட் என்பது குறிப்பிடத்தக்கது.

Gospel singer Troy Sneed dies from corona virus

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி டிடி; ‘வலிமை’யாக வருவேன் என உறுதி

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி டிடி; ‘வலிமை’யாக வருவேன் என உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV Anchor DD aka Dhivya Dharshini gets injured in lock downபிரபல டிவியில் முன்னனி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி (டிடி).

தனுஷ் உடன் பவர் பாண்டி, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார் டிடி.
டிவியில் மட்டுமில்ல சமூக வலைதளங்களில் இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர். ஆனால் டிடி வரவில்லை என்பதால் ஆர்வத்துடன் கேட்டனர்.

இந்த நிலையில் தனக்கு காலில் முறிவு ஏற்பட்டதாலேயே ஆன்லைனில் வர முடியவில்லை என டிடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடி கூறியிருப்பதாவது:

ஊரடங்குக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது. என் கால் வலது முட்டியை சரி செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இடது கால் முட்டியில் முறிவு ஏற்பட்டது. வலி இருக்கிறது.

ஆன்லைனில் படங்கள் பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய மனதை செலுத்த முயற்சி செய்து வந்தேன். இதை இங்கு பதிவிட மெல்ல வலிமை பெற்றேன்.

இதை சொல்லாமல் இருந்ததற்கு என் மீது அன்பு வைத்திருக்கும் மக்கள் என் மீது கோபம் கொள்வார்கள் என்று எனக்கு தெரியும்.

யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. விரைவில் மீண்டு உங்களிடம் வந்து உங்கள் அன்பை பெறுவேன்.

என்னுடைய மருத்துவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். நேர்லை வருமாறு கேட்டவர்கள் நான் முடியாது என்று சொன்ன காரணத்தை இப்போது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டிடி தன் உடல் நிலை குறித்து கூறியுள்ளார்

TV Anchor DD aka Dhivya Dharshini gets injured in lock down

BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

BREAKING தாயார் மரணமடைந்த 3 நாட்களில் நடிகர் இர்பான்கான் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award Actor Irrfan Khan passes awayஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான்.

இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கானின் தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கும் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. .

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இர்பான் கானும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 54.

இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக அவர் நடித்த ஆங்கிரேஸி மீடியம் என்ற படம் ரிலீசானது இங்கே கவனிக்கதக்கது.

National award Actor Irrfan Khan passes away

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

ஆணியே புடுங்க வேணாம் போலதான் இது.; துல்கருக்கு பிரசன்னா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issueஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.

இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனையடுத்து அந்த காட்சிக்கு விளக்கமளித்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில், மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது.

அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் (பிரபாகரன்) பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issue

Namma oorla like how we use “aaniye pudingavenam” or “enna koduma saravanan” the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let’s not spread hate based on misunderstanding.

More Articles
Follows