ஆசிரம குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஆரி-ஐஸ்வர்யா

ஆசிரம குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஆரி-ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari and Aishwarya Dutta surprises unprivileged children with Christmas Delightஎந்தவொரு இயற்கை பேரிடரோ அல்லது பொதுமக்களுக்கு ஒரு துன்பமோ உடனே தன் கரம் கொடுத்து தன்னால் இயன்றவரை அவர்களை மீட்பவர் நடிகர் ஆரி.

சமீபத்தில் கூட ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில்,கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன், க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் B.தர்மராஜ் தயாரித்து வரும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்கள்.

S.S.ராஜ மித்ரன் டைரக்ட் செய்யும் இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.

Aari and Aishwarya Dutta surprises unprivileged children with Christmas Delight

விஸ்வாசத்தின் இரு தூண்கள் அஜித்-சிவா.; சத்யஜோதி நிறுவனம் பாராட்டு

விஸ்வாசத்தின் இரு தூண்கள் அஜித்-சிவா.; சத்யஜோதி நிறுவனம் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Siva were 2 pillars of Viswasam says Sathya Jyothi filmsசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து அந்த பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது…

“எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் “விஸ்வாசம்” படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள்.

எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்த வாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.

மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் சேம ஹிட்” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

அஜித் குமார், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருக்கும் ” விஸ்வாசம் ” படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி. டி இமானின் இசையில், ரூபன் ஒளிப்பதிவில், திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், பிருந்தா மற்றும் கல்யாண் ஆகியோரின் நடன அமைப்பில், மிலன் கலை வண்ணத்தில், கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் வெளியிட, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி ஜி தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து உள்ளனர்.

Ajith and Siva were 2 pillars of Viswasam says Sathya Jyothi films

கட்டிய வீட்டை மேஸ்திரி கேட்கலாமா? இளையராஜா ராயல்டி குறித்து எஸ்ஏசி

கட்டிய வீட்டை மேஸ்திரி கேட்கலாமா? இளையராஜா ராயல்டி குறித்து எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja and SACகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழாவில் விஜய்யின் தந்தையுடம் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துக் கொண்டார்.

அப்போது அவரிடம் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும்.

இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

படம் தயாரிப்பது கடினமான தொழில். அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன.

அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும்.

படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டுதான் வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை.

அதுபோல்தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர்.

எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

பேட்ட படத்தில் ஆணவக்கொலை..? ரஜினி எடுக்கும் புது அவதாரம்.

பேட்ட படத்தில் ஆணவக்கொலை..? ரஜினி எடுக்கும் புது அவதாரம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta movie will be based on Caste Killing case Honour Killingகார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் ஒன் லைன் கதை இதுதான் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் ஆணவக்கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

பேட்ட படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Petta movie will be based on Caste Killing case Honour Killing

அருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ள பட டைட்டில் லுக் விரைவில் வெளியீடு

அருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ள பட டைட்டில் லுக் விரைவில் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sharaddha srinath‘SP சினிமாஸ் தயாரிப்பு எண் 2’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது.

குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவருமே ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைகளில் நடிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள்.

இருவரும் இணைந்து நடிக்கும் இந்த “தயாரிப்பு எண் 2” மிகவும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

பரத் நீலகண்டன் படத்தை இயக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்திய சென்சேஷனல் இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

நடிகர்கள்: அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், ‘எருமை சாணி’ விஜய், ‘கும்கி’ அஸ்வின், ‘ஜாங்கிரி’ மதுமிதா & மற்றும் பலர்.

தயாரிப்பாளர்கள்: S.P சங்கர், சாந்தப்பிரியா

இணை தயாரிப்பாளர்கள்: கிஷோர் சம்பத் & டெஷா ஸ்ரீ. டி

எழுத்து & இயக்கம்: பரத் நீலகண்டன்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசையமைப்பாளர்: தர்புகா சிவா

படத்தொகுப்பு: ரூபன்

திரைக்கதை ஆய்வு & ஒலி வடிவமைப்பு: உதயகுமார்.டி

தயாரிப்பு வடிவமைப்புகள்: கமலநாதன்

சண்டைப் பயிற்சி: சுதேஷ்

பாடல்கள்: தாமரை

நிர்வாக தயாரிப்பு: சதீஷ் குமார்.டி

தமிழ் சவுண்ட் பார்ட்டி ஜாக்குவார் தங்கத்தை கிழித்த முன்னாள் கவர்னர்

தமிழ் சவுண்ட் பார்ட்டி ஜாக்குவார் தங்கத்தை கிழித்த முன்னாள் கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jagauar thangamமனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் வேதமானவன்.

ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம் இது.

இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொண்டுள்ளார்.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.

தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் கே. பாக்யராஜ் வேதமானவன் பட பாடல்களை வெளியிட்டார்.

கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

ஜாக்குவார் தங்கம் எந்த மேடையில் பேசினாலும் தமிழர்கள் மட்டும் தான் தமிழ் படங்களில் பணி புரிய வேண்டும் என சவுண்ட்டாக பேசுவார்.

ஆனால் அவர் காலங்களில் அவர் மற்ற மொழி படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது வேறுகதை.

இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் வகையில் வேதமானவன் இசை விழாவில் கலந்துக் கொண்ட கர்நாடகாவின் முன்னாள் கவர்னரும் முன்னாள் நீதிபதியுமான மோகன் (வயது 89) பேசியதாவது….

நான் கர்நாடகாவில் கவர்னராக இருந்தேன். ஓய்வு பெறும்போது நான் ஒரு தமிழராக இருந்தபோதும அந்த மக்கள் என்னை விடவில்லை.

காரணம் நம்பிப்கை. நல்ல நடத்தை தான். அங்கு மொழி தேவையில்லை. அதுபோல் கலைஞர்களுக்கும் மொழி பேதம் கிடையாது.

தமிழ் படத்தில் தமிழர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என கூறும் ஜாக்குவார் அவர்கள் தமிழ் சினிமாவை தமிழர்கள் மட்டும்தான் பார்க்கனும்? என கூற முடியுமா? அவரால் முடியாது.” என பரபரப்பாக பேசினார் இந்த 89 வயது முன்னாள் நீதிபதி மோகன்.

More Articles
Follows