‘ஆதாரம்’ படம் சர்ச்சைகளை உருவாக்கும்.; அடித்துச் சொல்லும் ஒய்.ஜி. மகேந்திரன்

‘ஆதாரம்’ படம் சர்ச்சைகளை உருவாக்கும்.; அடித்துச் சொல்லும் ஒய்.ஜி. மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிதா இயக்கத்தில் அஜித் விக்னேஷ் மற்றும் பூஜா சங்கர் நடிப்பில், நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘ஆதாரம்’.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கதிரவன் பேசியதாவது…

இயக்குனர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி ,
என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார், இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி. மட்டும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.

எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் பேசியதாவது…

கவிதாவை நீண்ட நாட்களாக எனக்குதெரியும் காரணம் அவரின் தைரியம், அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும் அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

Y G மகேந்திரன் பேசியதாவது…

நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன் ஆனால் இந்தப்படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி, TN பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர் அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார், கதை அருமையாக நகரும் அது படம் பார்க்கும்போது தெரியும், இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் ஆனாலும் அது ஒரு முயற்சிதான் மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் நன்றி.

Aadhaaram will create controversies says Y Gee Mahendran

விஜய் – சிவகார்த்திகேயன் பட அப்டேட் கேக்குறாங்க.; உலகம் பூரா 6 கதைதான் இருக்கு – மிஷ்கின்

விஜய் – சிவகார்த்திகேயன் பட அப்டேட் கேக்குறாங்க.; உலகம் பூரா 6 கதைதான் இருக்கு – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு & பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது…

நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…

ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார்.. என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள்.

ஆனால் கவிதா அவர்களின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது அவரது தந்தை TN பாலு அவர்களின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன்.

தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது.

எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன் அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும்.

என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக் கொள்வேண்டும்.

நான் ‘லியோ-வில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன். இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

Fans ask Vijay and Sivakarthikeyan movie updates says Mysskin

தியேட்டரை வாங்கும் நயன்தாரா – விக்கி.; சிவகார்த்திகேயன் ஆபிஸில் GST சோதனை.; உண்மை என்ன.?

தியேட்டரை வாங்கும் நயன்தாரா – விக்கி.; சிவகார்த்திகேயன் ஆபிஸில் GST சோதனை.; உண்மை என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொள்ளும் முன்னரே படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

தற்போது புதிய படங்களை தயாரிப்பதிலும் அவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பிரபலமான திரையரங்கை அவர்கள் வாங்கி அதை புதுப்பித்து இரண்டு திரையரங்குகளாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் நம் FILMISTREET தளத்தில் அது போன்ற செய்திகள் எதுவும் பதிவிடவில்லை.

இந்த நிலையில் நயன்தாரா தியேட்டரை வாங்க முயற்சிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை என அவர்களது பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல சிவகார்த்திகேயன் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் GST துறையினர் சோதனை நடத்துவதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது பிஆர்ஓ தரப்பு. அப்படி எதுவும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rumours on sivakarthikeyan and Nayan vignesh shivan new properties

திருச்சியில் விஜய் ரசிகர்கள் அரசியல் மாநாடு.?; செம டென்ஷனில் திமுக

திருச்சியில் விஜய் ரசிகர்கள் அரசியல் மாநாடு.?; செம டென்ஷனில் திமுக

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியலுக்கு வர அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்து வருகிறார் நடிகர் விஜய்.

இதற்கு முன்னோட்டமாக தன் விஜய் மக்கள் இயக்கத்தினரை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வைத்து பரிசோதனை செய்தார்.

விஜய் இயக்க வேட்பாளர்களும் நிறைய தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

மேலும் அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை தன் பனையூர் இல்லத்தில் சந்தித்து வருகிறார் விஜய்.

இதனிடையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய்.

அதற்காக மாணவ – மாணவிகளின் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை தயார் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மாவட்ட இயக்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

மேற்கண்ட செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் விஜய் (ஜூன் 22) பிறந்தநாளையொட்டி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை முன்னிட்டு இப்போதே.. தங்க தளபதி, அன்பு தளபதி, நாளைய தமிழக முதல்வர்’ என விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

விஜய்யை தளபதி என அழைப்பதால் திமுகவினர் செம டென்சனில் இருக்கிறார்களாம்…

இருக்காதா பின்னே..??!!!

Vijay fans political event in trichy

துருவ் விக்ரமை கபடி பயிற்சி எடுக்க கட்டளையிட்ட ‘மாமன்னன்’ இயக்குநர்

துருவ் விக்ரமை கபடி பயிற்சி எடுக்க கட்டளையிட்ட ‘மாமன்னன்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சீயான் விக்ரமின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானார் துருவ். பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் அதே கதையில் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்து திரையில் அறிமுகமானார்.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘மகான்’ படத்தில் தன் தந்தை விக்ரமுடன் நடித்தார்.

நல்ல திறமையும் அழகும் நிறைந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவியும்.. நிறைய படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மெதுவாகவே படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் துருவ்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கிறார் என்ற செய்திகள் வந்தன.

ஆனால் இடையில் உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தை இயக்க மாரி செல்வராஜ் சென்றுவிட்டார்.

தற்போது ‘மாமன்னன்’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

எனவே துருவ் விக்ரம் நடிக்கிற படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ். அதற்காக நாயகனை திருநெல்வேலியில் கபடி பயிற்சி பயிற்சி எடுக்க சொல்லியிருக்கிறாராம் இந்த ‘மாமன்னன்’ இயக்குநர்.

Dhruv Vikram takes Kabaddi training for his next

சரத்பாபுவின் கடைசி ஆசையால்..; சென்னைக்கு கிடைத்த பெருமை

சரத்பாபுவின் கடைசி ஆசையால்..; சென்னைக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு.

நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

பின்னர், சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் சரத்பாபு பிறந்ததும் ஆந்திர மாநிலத்தில், அவர் இறந்ததும் ஹைதராபாத் தற்போது தெலுங்கானா மாநிலம் ஆனால் ஆரம்ப காலத்தில் அது ஆந்திர மாநிலம் தான்.

நடிகர் சரத்பாபு பிறந்ததும், இறந்ததும் ஆந்திர மாநிலமாக இருந்தாலும், அவரது இறுதி சடங்குகள் உடல் தகனம் சென்னையில் தான் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சரத்பாபு இறப்பதற்கு முன்பாக தன்னை சென்னையில் தான் உடல் தகனம் செய்ய வேண்டும் என கூறினாராம்.

இதன் மூலம், நடிகர் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறிய உள்ளது. இது சென்னைக்கு கிடைத்த பெருமை என தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.

actor sarath babu’s last wish comes true

More Articles
Follows