உலகில் ஏதாவது ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டால் நம் கோலிவுட்காரர்கள் சும்மா இருப்பார்களா..?
இப்போ கொரோனா சீசன்தானே.. இதோ கொரோனா சினிமாவும் வந்துட்டுல்ல…
பத்திரிகையாளரும் போட்டோகிராபருமான பாஸ்கர் ராஜ் என்பவர் கொரோனா காலத்தில் போடப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கை வைத்து 21 DAYS என்ற படத்தை இயக்கி தயாரிக்கவுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இப்பட டைட்டிலில் டாக்டர்களின் டெத்தஸ் கோப், போலீஸ் தொப்பி, சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், தனித்த வீடு, நர்ஸ் தொப்பி, மீடியா மைக், உள்ளிட்டவைகளை வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இது 21 நாள் ஊரடங்கு சமயத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கவிருக்கிறாராம்.
இதனை எம்.பி.ஆர் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கவிருக்கிறார்.
தற்போதும் கொரோனா ஊரடங்கு தொடர்வதால் ஆன் லைன் மூலம் நடிகர் நடிகைகள் தேர்வை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு முடிந்த பின்னர் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார் பாஸ்கர் ராஜ்.