தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு திரைப்படத்தின் தரத்தை சென்சார் வழங்கும் சான்றிதழை வைத்து கணிக்க முடியும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் சென்சார் குழுவில் இருப்பார்கள்.
மேலும் சர்ட்டிபிகேட் கொடுப்பதற்காக படங்களின் நிறைய காட்சிகளை வெட்டி எறிவார்கள்.
இந்நிலையில், ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படம் சென்சாருக்கு சென்றபோது கிட்டதட்ட 90 காட்சிகளை குழுவினர் வெட்டி எறிந்தனர்.
எனவே இதனை எதிர்த்து, இந்தி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து… “சென்சார் இனி சர்ட்டிபிகேட் மட்டுமே வழங்க வேண்டும் காட்சிகளை கட் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை” என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து… சென்சார் போர்டு வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் கூறியுள்ளதாவது…
“படத்தின் காட்சிகளை வெட்டாமல் இனி சர்ட்டிபிகேட் கொடுக்கப்படும்.
தற்போது ‘யூ’, ‘ஏ’, ‘யூஏ’ என 3 வகையான சர்ட்டிபிகேட் உள்ளது. இனி கூடுதல் வகையான சர்ட்டிபிகேட் வழங்கப்படும்.” என்றார்.