தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த படம் 2.0.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ரூ. 450 கோடியில் தயாரித்திருந்தது லைகா புரொடக்சன்ஸ்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகளவில் வெளியானது.
நமது தேவைக்காக செல்போன் சிம் நெட்வொர்க்கில் 3ஜி, 4ஜி டெக்னாஜிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறோம்.
இதனால் ஆங்காங்கே நெட்வொர்க் டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகள் சிட்டுக் குருவிகளின் அழிவுக்காக காரணமா உள்ளது.
மேலும் பல பறவை இனங்களும் இதனால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த படம் உலகுக்கு ஒரு பாடமாக சொன்னது. இதனால் மக்களிடையே படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் கிட்டதட்ட பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை குறித்து தற்போது MAKING OF 2.0 என்ற புத்தகத்தை எழுதி வருகிறாராம் டைரக்டர் ஷங்கர்.
விரைவில் இந்த புத்தகம் வெளியாகவுள்ளது. இந்த புத்தகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
A Book on Making of 2.0 by director Shankar Will Rajini launch