சூடான தோசை முதல் ஹாட்டான ஆசை வரை.; சினிமாவாகிறது ‘சரவண பவன்’ அண்ணாச்சி-ஜீவஜோதி கதை

சூடான தோசை முதல் ஹாட்டான ஆசை வரை.; சினிமாவாகிறது ‘சரவண பவன்’ அண்ணாச்சி-ஜீவஜோதி கதை

ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் மேலாளராகப் பணிபுரிந்தார்.

அப்போது ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில், ஏற்கெனவே 2 முறை திருமணம் செய்த ராஜகோபால் தான் ஆசைப்பட்ட ஜீவஜோதியை 3வது திருமணம் செய்ய விரும்பினார் ராஜகோபால்.

ஆனால், பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஜீவஜோதி.

தான் ஜீவஜோதியைத் திருமணம் செய்ய அவரது கணவர் சாந்தகுமார் தடையாக இருந்ததால் போட்டுத் தள்ளினார் ராஜகோபால்.

எனவே ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைவழக்கில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்த வழக்கு தற்போது ஜீவஜோதி சம்மதம் பேரில் திரைப்படமாக்க உள்ளது.

அதன் விவரம் வருமாறு…

தோசை அரசனுக்கு எதிரான ஜீவஜோதியின் போர், இந்திய சினிமாவில், பல வித்தியாசமான களங்களில் முன்னோடி படங்களான Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும் Raazi, போன்ற தீவிரமான படைப்புகளை தந்த Junglee Pictures நிறுவனம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை வழங்கவுள்ளது.

Junglee Pictures நிறுவனம் திருமதி ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை நிறுவி, கொடி கட்டி பறந்த P.ராஜகோபால் V. மீது தேசமே அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களை சுமத்திய, ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இத்திரைப்படம் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து, வானளவு புகழுக்கு உயர்ந்த தொழிலதிபர், உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.

உலகம் முழுக்க 28 நாடுகளில் 100 உணவங்களை திறந்து, இந்தியாவின் மிகப்பெரும் தொடர் உணவகங்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவரின் வாழ்க்கை பக்கங்களை தொட்டு செல்லும்.

அவர் தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர், பலருக்கு ஆதர்ஷமாக இருந்தவர். அவரது உழியர்கள் மட்டுமல்லாது பொது மக்களாலும் கொண்டாடப்பட்டவர்.

தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர். அப்படிபட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றத்தில் சிக்கியதும், அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுமான நாட்டை உலுக்கிய இந்த சம்பவங்கள், உண்மையான ஆதார பின்னணியில் இப்படத்தில் இடம் பெறவுள்ளது.

தனது வாழ்க்கை கதையை உலகிற்கு சொல்ல விளைந்த திருமதி ஜீவஜோதி சாந்தகுமார் அவர்களுடன் உரையாடியபோது அவர் பகிர்துகொண்டதாவது..

“எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப் பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, Junglee Pictures திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது.

எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவைத்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Junglee Pictures நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் அவர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற “Raazi” படத்திற்கு பிறகு Junglee Pictures அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படம் குறித்து பவானி ஐயர் கூறியதாவது..

இப்படத்திற்காக Junglee Pictures என்னை அணுகி, இக்கதையை கூறியபோது மிகப்பெரிய ஆச்சர்யம் உண்டானது.

ஆரம்பத்தில் வாழ்வை முன்னேற்றும் நம்பிக்கை மிக்க கதையாக ஆரம்பித்து தடாலென தடம் மாறி ஒவ்வொரு பெண்ணுக்குமான எச்சரிக்கை கதையாக மாறி நின்றது பெரும் அதிர்ச்சியை தந்தது.

வாழ்வின் மிகச்சிறிய ஒரு தருணம் உங்களை சந்தர்ப்பவாதியாக்கலாம் அல்லது குற்றத்தின் பாதிப்பில் சிக்கிகொள்பராகவும் மாற்றலாம்.

சமூகத்தில் மிகப்பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராக ஜீவஜோதி பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அவரின் போராட்டம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த கூடியது.

அவரது இந்த போராட்டம் எனக்கு மட்டுமல்ல மொத்த பெண் உலகத்திற்கும் மிகப்பெரும் பாடத்தை கற்றுதந்துள்ளது. இந்தகதை ஒரு பக்கம் குற்றத்தின் பிடியில் சிக்கி கொண்டு உயிர் பிழைக்க போராட்டம் நடத்திய கதையையும், இன்னொருபுறம் மிகப்பெரும் பணமும், அதிகாரமும், சக்தியும் எத்தனை தீய வழிகளுக்கு இட்டு செல்லும் என்பதையும் சொல்கிறது. இப்படியான கதையை எழுதுவது அற்புதமான சாவல். இதை எழுத ஆரம்பிக்க மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் என்றார்.

இத்திரைப்படத்தில் பங்கு கொள்ளவுள்ள திறமையாளர்கள் குறித்து மிக விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள்.

Junglee Pictures நிறுவனம் சார்பாக கூறப்பட்டதாவது..

“மிகப்பெரும் ஆச்சர்யமளிக்கும் இந்த புதினத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கு மிக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

இந்த வழக்கு இந்தியா மட்டும்மல்ல உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு.

இருபது ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, இறுதியாக சுப்ரீம் கோர்ட் 2019 ல் தீர்ப்பு வழங்கிய போது தான் முடிவுக்கு வந்தது. தமிழக கிராமத்தின், ஒரு முனையில் ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவித்த ஒருவர், தன் நம்பிக்கையால் உலகம் முழுக்க பிரபலமான உணவங்களை எழுப்பி ஜெயித்த கதை, தடாரென திரும்பி அதிர்ச்சிதரும் சம்பவங்களுக்குள் பயணித்து, ஜீவஜோதியின் நியாயத்திற்கான 18 வருட
போராட்டத்தை உண்மைக்காக அவரின் நீண்ட பயணத்தை நம்பிக்கை கதையை சொல்லும்.

வாழ்வின் பாடத்தை தரும் இந்த அற்புதமான கதையை திரையில் உங்கள் பார்வைக்கு கொண்டுவர ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

உண்மை சம்பவங்களை கொண்டு அற்புதமான கதைகள், வித்தியாசமான களங்களின் பின்னணியில் உருவாகும் தரமான படைப்புகள், என இந்தி திரையுலகத்தில், பாலிவுட்டில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறது Junglee Pictures நிறுவனம்.

தற்போது Rajkummar Rao மற்றும் Bhumi Pednekar, நடிப்பில் ‘Badhaai Do’ திரைப்படத்தையும் Ayushmann Khuranna மற்றும் Rakul Preet Singh நடிப்பில் ‘Doctor G’ படத்தையும் தயாரித்து வருகிறது.

Saravana-bhavan-rajagopal-jeevajothi

A biopic on Rajagopal and Jeeva Jothi real story

‘ஸ்ருதி’ பெயரில் ஹன்சிகாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

‘ஸ்ருதி’ பெயரில் ஹன்சிகாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

நடிகை ஹன்சிகா மோத்வானி் ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் “My Name is Shruthi” எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகத்தில் உள்ளார்.

இந்தப்படம் சுதந்திரமாக இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட, ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும்.

அந்தப் பெண் ஒரு எதிர்பாரத அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதே கதை.

இதற்கு மேல் விவரிப்பது தவறாக இருக்கும் மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்து விடும்.

நல்ல அனுபவம் மிகுந்த பல நடிகர்கள், இயக்குநர்களுடன் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்ததில், ஒரு கதை விவரிக்கப்படும்போதே, கதையில் உள்ள நிறை குறைகளை, கதையின் திருப்பங்களை கொஞ்சம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் இயக்குனர் ஶ்ரீநிவாஸ் ஓம்கார் இந்தக் கதையை மிகவும் அற்புதமாக என்னிடம் விவரித்தார்.

இந்த படத்தில் பல காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கை நுனியில் தான் அமர்ந்திருந்தேன் ஆரம்பத்திலிருந்து படத்தின் கிளைமாக்ஸ் வரை, எந்த இடத்திலும் என்னால் படத்தின் கதை எப்படி செல்லும் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படத்தில் அமைந்துள்ள திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் திரையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்புகிறேன். திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்

இந்தப் படத்தின் நடிகர் முளரி ஷர்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மார்க் கே ராபின் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார், Kishore Boyidapu ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை Ramya Burugu மற்றும் Nagender Raju இருவரும் Vaishnavi Arts நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.

Hansika’s suspense thriller is titled My name is shruthi
IMG-20210707-WA0022

டைரக்டர் பிரபு சாலமனின் மகன் நடிக்கும் ‘டேய் தகப்பா’.; டைரக்டர் யார் தெரியுமா.?

டைரக்டர் பிரபு சாலமனின் மகன் நடிக்கும் ‘டேய் தகப்பா’.; டைரக்டர் யார் தெரியுமா.?

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.

கலை இயக்கம் – சிவராஜ்
காஸ்டியும் டிசைனர் – தனா
ஒப்பனை – P.ராம்சந்திரன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Director Prabhu Solomon son to play lead role in Dei Thagappa

இருக்குறதே போதும்.. புதுசு வேண்டாம்..; ஒன்றிய அரசுக்கு நாசர் கண்டனம்

இருக்குறதே போதும்.. புதுசு வேண்டாம்..; ஒன்றிய அரசுக்கு நாசர் கண்டனம்

சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.. இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன.

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்க்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சமுதாய சீர்வை கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.

இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துக்களை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.

அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளை என்றும் அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது.

அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

– நடிகர் எம்.நாசர்
7.7.2021

Actor Nassar voice against cinematograph act 2021

இந்தியாவில் அதிபர் ஆட்சி.? சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி விஜய் அஜித் யாரும் இல்லையே? – அமீர் ஆதங்கம்

இந்தியாவில் அதிபர் ஆட்சி.? சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி விஜய் அஜித் யாரும் இல்லையே? – அமீர் ஆதங்கம்

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவில் பல திருத்தங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.

இதற்கு நாடு முழுவதும் திரைத்துறை சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

கமல், சூர்யா உள்ளிட்டோரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர்கள் கார்த்தி ரோகிணி உள்ளிட்டோர் தமிழக முதல்வரை சந்தித்தனர்.

எனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இதனிடையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் மோடி அரசின் மக்கள் நல திட்டம் சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

சூர்யாவுக்கு ஆதரவாக கூட சினிமாத்துறையில் யாரும் குரல் கொடுக்கவில்லை என இயக்குநர் அமீர் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக இயக்குனர்கள் இன்று ஆன்லைனில் ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்த விவாதம் நடத்தினர்.

அப்போது இயக்குநர் அமீர் பேசும்போது..

“அனைத்து வாரியங்களையும் அரசே ஏற்று நடத்தினால் இது அதிபர் ஆட்சி போல ஆகிவிடும்.

சென்சார் போர்டு மாதிரியானவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்

இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் அளவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை.

இந்த சட்டத் திருத்தம் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

சூர்யா கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்த போது கூட சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அமீர்.

Ameer question Rajini Vijay Ajith Why no one Supports Suriya

டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்தும் இந்தியர்கள் யார்.? பங்கேற்கும் தமிழர்கள் யார்.? முழு தகவல்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்தும் இந்தியர்கள் யார்.? பங்கேற்கும் தமிழர்கள் யார்.? முழு தகவல்கள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக உள்ளது. ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜூலை 23-ம் தேதி இந்திய தேசிய கொடியை குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி செல்வார்கள்.

ஆகஸ்ட் 8-ம் தேதி நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர் தமிழக வீராங்கனைகள். தற்போது 4 தமிழக வீரர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பு 8, தற்போது 4 என மொத்தம் 12 தமிழக வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லவுள்ளனர்.

இவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்…

1). இளவேனில் வளரிவன் (துப்பாக்கிச் சுடுதல் – 10 மீட்டர் ஏர் ரைப்பிள், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு)

2) சரத் கமல் (டேபிள் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு)

3) கேசி ஞானபதி (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

4) நீத்ரா குமணன் (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

5) ஆரோக்கிய ராஜீவ் (தடகள பிரிவு – 4*400 ரிலே)

6) தனலட்சுமி (தடகளம் – 4*400 ரிலே)

7) நாகநாதன் பாண்டி (தடகளம் – 4*400 ரிலே).

8) சி.எ. பவானி தேவி (வால் சண்டை – பெண்கள் ஒற்றையர் பிரிவு)

9) சத்யன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு மட்டும்)

10). வருண் அசோக் தக்கர் (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

11). ரேவதி (தடகளம் – 4*400 ரிலே).. இவர் மதுரைச் சேர்ந்தவர். ஷூ (காலணி) கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து, ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். தற்போது மதுரையில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Legendary six-time world champion boxer MC Mary Kom and men’s hockey team captain Manpreet Singh will be India’s flag bearers for the opening ceremony of the Tokyo Olympics on July 23.

World Championships silver medallist wrestler Bajrang Punia will be the country’s flag-bearer for the closing ceremony on August 8. – Indian Olympic Association (IOA) announced.

Who will be the country’s flag-bearer in tokyo olympic ?

More Articles
Follows