ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட்..; சென்னை துறைமுகம் உஷாராகுமா..?

ammonium nitrateலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்து உலகையே உலுக்கியது எனலாம்.
இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் தற்போது வரை இணையத்தில் உலா வருகிறது.
பெய்ரூட் துறைமுக குடோனில் 6 ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
100க்கும் மேற்ப்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 4000க்கும் மேற்ப்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரமெங்கும் ஆம்புலன்ஸ் சத்தமே ஒலிக்கிறது. மரண ஓலம் இதுவரை ஓயவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை துறைமுகம் அருகில் உள்ள குடோன் ஒன்றில், 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
கரூர் நிறுவன,ம் ஒன்றுக்கு சொந்தமான அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளதாம்.
பெய்ரூட் துறைமுக விபத்தை அடுத்து இந்த வேதிப்பொருளை உடனடியாக பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post