2022 ஜனவரி 9 நிலவரப்படி பொங்கலுக்கு மோதும் தமிழ் படங்கள் இதோ..

2022 ஜனவரி 9 நிலவரப்படி பொங்கலுக்கு மோதும் தமிழ் படங்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் 2022 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு (இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு) அமலுக்கு வந்துள்ளதால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

இதனையடுத்து வலிமை விட்ட இடத்தை பிடிக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

நாளை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள் மட்டும் தியேட்டர்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரவு காட்சிகள் ரத்து. மேலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன.

பொங்கல் தினத்தில் 6 படங்கள் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ 2. விதார்த் நடித்த ’கார்பன்’ 3. சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , 4. அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் 5. ‘மருத’ 6. ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 13ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா

லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா.
கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்திரகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர்
கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கார்பன்
ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது.

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மருத

பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மருத’. இந்த படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சரவணன், விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்ல போகிறாய்..

ஹரிஹரன் இயக்கத்தில் ட்ரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்றைய (ஜனவரி 9ஆம் தேதி) நிலவரப்படி ஐஸ்வர்யா முருகன் ரிலீஸ் ஜனவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தள்ளி வைக்கிறோம் என படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி.. ஐஸ்வர்யா முருகன் ரிலீஸ்

ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை கருப்பன் பட புகழ் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.

ஒரு காதல் ஜோடியின் குடும்பத்தை ஒரு காதல் எப்படியெல்லாம் பிரிக்கும் என்பதை இந்த படம் சொல்கிறதாம்.
ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன்னு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவையும், கணேஷ் ராகவேந்திரா இசை பணியையும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணியையும் செய்கிறார்கள்.

வீரமே வாகை சூடும்
து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இதில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பு குறித்து தகவல் இல்லை.

6 tamil movie release on Pongal 2022

19வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவில் 3 தமிழ் படங்களுக்கு விருது

19வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவில் 3 தமிழ் படங்களுக்கு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

19 வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவின் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்திற்கு வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் “சேத்துமான் ” படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “தேன்” படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “சேத்துமான்” திரைப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித் க்கு வாழ்த்துக்கள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை சேத்துமான் படமும் கொடுத்தது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரு மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது. என பேசினார்.

3 Tamil movies won award in 19th Chennai International film festival

இந்தியாவிலேயே முதல் நடிகை இவராம்.; ஆச்சரியப்படுத்தும் ஆண்ட்ரியா

இந்தியாவிலேயே முதல் நடிகை இவராம்.; ஆச்சரியப்படுத்தும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான். இந்தியாவிலேயே முதல் கடல் கன்னி படமாக

இது இருக்கும். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் DINESH SELVARAJ டைரக்ட் செய்கிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். இந்த வருட சம்மரில் படத்தினை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

அதன் பிறகு கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.

ஒளிப்பதிவு:பால சுப்ரமணியெம்,
கலை:கிராஃபோர்ட் CRAWFORD
PRO: ஜான்சன்,
தயாரிப்பு : ஃபோக்கஸ் பிலிம்ஸ். FOCUS FILMS

Andrea in Indias First Mermaid Movie based on soul stirring fantasy

சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் யுனிவர்சிட்டி.; ஏன் தெரியுமா.?

சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் யுனிவர்சிட்டி.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி’ கவுரவ டாக்டர் ‘ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நட்சத்திரமாக வளர்ந்தவர்கள் ஒரு சிலரே.

கமல்ஹாசன், (மறைந்த) ஸ்ரீதேவி, மீனா, விஜய், ஷாலினி, சிம்பு, வெண்பா என ஒரு சிலரே இன்று வரை சினிமாவில் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு கௌரவ டாக்டர் வழங்கவுள்ளது ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’

இந்த பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது.

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கூறியதாவது…

” மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள்.

அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.

விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம்.

அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்கிறார்.

ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vels university honors actor Simbu with honorary Doctorate

முதன்முறையாக தொண்டர்களுக்கான படம்..; ரைட்டரை அடுத்து சமுத்திரக்கனி-யின் பப்ளிக்

முதன்முறையாக தொண்டர்களுக்கான படம்..; ரைட்டரை அடுத்து சமுத்திரக்கனி-யின் பப்ளிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த ரைட்டர் திரைப்படம் கடந்தாண்டு 2021 டிசம்பரில் தியேட்டர்களில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

தற்போது மீண்டும் ஆங்கில படத்தலைப்பில் சமுத்திரக்கனி மற்றொரு படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விவரம் வருமாறு…

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது-

சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் இணைந்துள்ளனர். இவர்களுடன் நடிகை ரித்விகா இணைந்துள்ளார்.

ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே. எல். பிரவீன் தொகுத்திருக்கிறார்.

கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது.” என்றார்.

சமுத்திரக்கனி – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ சமுத்திரக்கனியின் பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை கவர்ந்திருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Samuthirakani and Kaali Venkat in Public movie

இயக்குனராக அவதாரமெடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான தர்புகா சிவா

இயக்குனராக அவதாரமெடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான தர்புகா சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான திரைப்படம் ‘முதல் நீ முடிவும் நீ”.

வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது.

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படம் ஜீ5 தளத்தில் இந்த மாதம் 2022 ஜனவரி 21ல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்புகா சிவா பற்றி கூடுதல் தகவல்கள்…

‘ராஜதந்திரம்’ (2015) படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. இந்த படத்தில் இவர் செய்த காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.

அதே வருடத்தில் வெளியான சசிகுமாரின் ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன்பின்னர் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘நிமிர்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbuka Sivas directorial debut MUDHAL NEE MUDIVUM NEE release update

More Articles
Follows