பெண் உறுப்பை ‘சிதை’-க்கும் கொடூரம்.; கார்த்திராம் இயக்கத்திற்கு 230 விருதுகள்

பெண் உறுப்பை ‘சிதை’-க்கும் கொடூரம்.; கார்த்திராம் இயக்கத்திற்கு 230 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”.

பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.

அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 232 விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்மையை சிதைக்கும் கொடுமை.: சடங்குமுறையை சாடிய கார்த்திகேயனுக்கு 200க்கும் மேற்பட்ட விருதுகள்

இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது.

இந்நிலையில், இக்குறும்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது..

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜி கே திருநாவுக்கரசு, சரவணன், தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பலரும் இக்குறும்படம் இத்தனை விருதுகளுக்கு மேல் இன்னும் பல விருதுகளை குவிக்க தகுதியான ஒன்று தான் என்று கூறினார்கள்.

அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை படம் எடுத்து இயக்குனர் கார்த்தி ராம் மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் எனவும் வாழ்த்தினர்.

இக்குறும்படம் பல விருதுகளை குவிக்க காரணமாக இருந்தவர்களுக்கு படத்தின் ஷீல்ட் வழங்கப்பட்டது.

மேலும், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் பிஜு, மரக்கன்று கொடுத்து தனது நன்றியை தெரிவித்தார்.

பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும் இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும்.

அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும்.

இதை உரக்க சொன்ன இயக்குநர் கார்த்தி ராம் குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

சிதை

200 awards for Karthikeyan’s Sithai short film

தந்தை தந்த தலைப்பு.. மகன் நடித்த படம்..; ‘நெஞ்சுக்கு நீதி’-க்கு ஸ்டாலின் பாராட்டு

தந்தை தந்த தலைப்பு.. மகன் நடித்த படம்..; ‘நெஞ்சுக்கு நீதி’-க்கு ஸ்டாலின் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Zee Studios – போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

MK Stalin’s praise for Nenjukku Needhi

விஜய்ஸ்ரீ – நிகில் இணைந்த ‘பவுடர்’ படத்தின் ரத்த தெறி தெறி சாங் அப்டேட்

விஜய்ஸ்ரீ – நிகில் இணைந்த ‘பவுடர்’ படத்தின் ரத்த தெறி தெறி சாங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சாருஹாசனை வைத்து ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், ரத்த தெறி தெறி எனும் முதல் பாடல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.

அதே மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பவுடர் திரைப்படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் தோன்றியுள்ளார்.

லியாண்டர் லீ மார்ட் இசையமைத்துள்ள ரத்த தெறி தெறி பாடல் சிங்கப்பூரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த பாடலின் கூடுதல் புரோகிராமிங்கை லத்வியாவில் உள்ள தி பேக்யார்டு ஸ்டூடியோசில் நீல் செய்ய, இசைக்கோர்வை மற்றும் மாஸ்டரிங்கை இந்தோனேசியாவின் அகெளஸ்டிக் ஆடியோவில் டாரென் விக் செய்துள்ளார்.

திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வித்யா பிரதீப்
அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை – லியாண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – ராஜபாண்டி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ

Powder first single Ratha Theri Theri from June

விஜய்ஆண்டனி-யின் ‘வள்ளி மயிலை’ திண்டுக்கல்லில் தொடங்கிய சுசீந்திரன்

விஜய்ஆண்டனி-யின் ‘வள்ளி மயிலை’ திண்டுக்கல்லில் தொடங்கிய சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில்,
சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

படபிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள்.
திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படபிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் படபிடிப்பில் விஜய் ஆண்டனி, தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) ஆகியோர் பங்கேற்றார்கள்.

தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துக் கொள்கிறார்கள்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இதையடுத்து, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது..

எழுத்து, இயக்கம் : சுசீந்திரன்
இசை : D.இமான்
ஒளிப்பதிவு : விஜய் k. சக்கரவர்த்தி
எடிட்டர் : ஆண்டனி
ஆர்ட் டைரக்டர் : K.உதய குமார்
பாடல்கள் : யுகபாரதி
நடனம் : ஷோபி
ஸ்டண்ட் : ஸ்டன் சிவா
காஸ்ட்யூம் டிசைனர் : ராதிகா சிவா
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
டிசைன்ஸ் : ட்யூனி ஜான்
இணை தயாரிப்பு : கார்த்திக்
தயாரிப்பு நிறுவனம்: நல்லுசாமி பிக்சர்ஸ்
தயாரிப்பு : தாய் சரவணன்.

Vijay Antony’s ‘Valli Mayil’ started in Dindigul

என் தகுதிக்கு மீறிய புகழ்.. ஹிந்தி படிப்போம் தமிழ் வாழ்க..; ரஜினியை போல ஸ்டாலின்.; ‘விக்ரம்’ விழாவில் கமல் பேச்சு

என் தகுதிக்கு மீறிய புகழ்.. ஹிந்தி படிப்போம் தமிழ் வாழ்க..; ரஜினியை போல ஸ்டாலின்.; ‘விக்ரம்’ விழாவில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் நேற்று மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியானது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் சிம்பு, உதயநிதி, ராதிகா, லிசி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தும் அவர் விழாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் பேசும்போது…

“கமல்ஹாசனின் ரசிகன் என்ற ஒரே தகுதியோடு மட்டும் தான் சினிமாவுக்குள் வந்தேன்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ படத்துடன் தன் ‘இரவின் நிழல்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

இதே நேரு உள்விளையாட்டரங்கில் ஜூன் 5ம் தேதி என்னுடைய ‘இரவின் நிழல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.” என்றார்.

அனிருத் மேடையில் இசையமைக்க ‘அன்பே சிவம்’ படத்தின் ‘யார் சிவம்’ பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடினார்.

விழாவில் இறுதியாக கமல்ஹாசன் பேசியதாவது…

“உயிரே உறவே வணக்கம்”

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என படத்தின் விழா நடக்கிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை.

நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை கட்டி பிடித்து அழுதார்.

‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார்.

என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும்.

நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.

இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா? என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை

என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும்.

என் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர்.

ஏன் நானும் ரஜினியும் திரையில் போட்டியாக இருந்தாலும் நண்பர்களாக இல்லையா..? அது போல தான் அரசியலும்…

இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள்.

அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, ஸ்டாலின் என தொடர்ந்து அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது”

இவ்வாறு கமல் பேசினார்.

Kamal Haasan speech at Vikram audio launch

என் ஆன் ஸ்கிரீன் குரு கமல்.. மருதநாயகத்தை எடுத்து விடுங்க சார்.; ‘விக்ரம்’ விழாவில் சிம்பு பேச்சு

என் ஆன் ஸ்கிரீன் குரு கமல்.. மருதநாயகத்தை எடுத்து விடுங்க சார்.; ‘விக்ரம்’ விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் இன்று மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியானது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் சிம்பு, உதயநிதி, ராதிகா, லிசி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிம்பு பேசியதாவது…

“என் ஆஃப் ஸ்கிரீன் குரு என் அப்பா (டிஆர்). என்னோட ஆன் ஸ்கிரீன் குரு என்றால் அது கமல் சார் தான்.

கமல் அவரின் படங்களை பார்க்க என்னை அழைப்பார்… ஒரு படம் புடிச்சது ஆனா ஓடாதுன்னு சொன்னேன்.. ஒரு படம் புடிக்கல ஆனா ஓடும்னு சொன்னேன்.. இந்த ‘விக்ரம்’ படம் சூப்பர் ஹிட்டாகும்.

இப்போ எல்லோரும் பான் இந்தியா படம் பத்தி பேசுறாங்க.. அவங்களுக்கு எல்லாம் சவாலா இருக்கும் ‘மருதநாயகம்’.

மருதநாயகத்தை எடுத்து வுடுங்க சார்.”

இவ்வாறு சிம்பு பேசினார்.

Simbu speech at Vikram audio launch

More Articles
Follows