ரஜினி பட கடையை கூட டைட்டிலாக்கிய சார்லி & கோமாளி டைரக்டர்

19 year old Karuppaiah directed Shanmugam Saloonபி. வாசு இயக்கிய குசேலன் படத்தில் ரஜினி, மீனா, பசுபதி, வடிவேலு, சோனா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வடிவேலுவின் பெயர் சண்முகம். இவர் சலூன் வைத்திருப்பார்.

ஒரு காட்சியில் கூட சலூன் கடை சண்முகம் என்று வடிவேலுவை ரஜினி அழைப்பார்.

தற்போது சண்முகம் சலூன் என்ற பெயரே ஒரு சினிமாவுக்கு டைட்டில் ஆகியுள்ளது.

இந்த படத்தில் சார்லி மற்றும் கோமாளி பட டைரக்டர் பிரதீப் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

19 வயதான இளைஞர் கருப்பையா ராம் என்பவர் இயக்க பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார்.

கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்ய அருண் எடிட்டிங் செய்துள்ளார்.

சொக்கலிங்கம் மற்றும் உண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை மே 1 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு யூடிப்பில் ரிலீஸ் செய்கின்றனர்.

19 year old Karuppaiah directed Shanmugam Saloon

Overall Rating : Not available

Latest Post