தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்
ரஜினிகாந்த் அமிதாப்பச்சன், பகத் பாசில் ரானா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வருகிறது ‘வேட்டையன்’.
‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது லைக்கா நிறுவனம்.
இப்படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.. படத்தின் கதைகளமும் ரஜினியின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ஞானவேல் கூறியிருக்கிறார்
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக இரண்டு புதிய திட்டங்களை இப்படத்தில் அறிமுகம் செய்துள்ளது படக்குழு.. அதன் விவரம் வருமாறு..
இத்திரைப்படம் திரையரங்குகளில் ஆடியோ விளக்கத்துடனும் (Audio description) & க்ளோஸ்ட் கேப்ஷன்ஸ் ஒளிபரப்படும்.. இந்த இரண்டு விஷயங்களைக் கொண்டு திரையரங்குகளில் ஒளிபரபப்பும் முதல் தமிழ் படம் `வேட்டையன்’ என கூறப்படுகிறது..
ஆடியோ விளக்கம் என்றால் என்ன.?
பார்வையற்றவர்கள் படத்தை பார்க்கும் போது ஆடியோவை வைத்து வசனங்களை புரிந்து கொள்வார்கள்.. ஆனால் வசனத்தை தாண்டி நடக்கும் சில காட்சிகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.. அப்படி இருக்கையில்.. இந்த ஆடியோ விளக்கமிருந்தால் ஆடியோ வடிவிலான விளக்க உரையைக் கேட்டு அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். இதுக்காகப் பிரத்யேக ஹெட்சைட்டை பயன்படுத்தி, கேட்கலாம்.
க்ளோஸட் கேப்ஷன் என்றால் என்ன.?
படத்தில் வரும் கேரக்டர்கள் வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு மிருகமோ ஒரு உருவமோ பின்னால் பயணிப்பதாக காட்சிகள் இருக்கும் இருக்கும் என்றால்.. காது கேளாதோரும் இந்த க்ளோஸட் கேப்ஷன்களை மூலம் அந்த உருவம் நகர்வதை செவி மூலம் தெரிந்துக் கொள்வார்கள்..
Vettaiyan brings 2 highlights First time in kollywood