தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ட்ரிம்மிங் செய்யப்பட்ட ‘ஹரா’..; விறுவிறுப்பை கூட்ட விஜய் ஸ்ரீ எடுத்த முடிவு
*உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ‘ஹரா’
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள ‘ஹரா’, திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா போல ரசிகர்கள் கூடி பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் ‘ஹரா’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
‘ஹரா’ படம் தமிழகமெங்கும் 152க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், மலேசியாவில் 330 திரையரங்குகளிலும், மற்றும் ஐரோப்பா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் 220 திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
பெண்கள் விரும்பும் நாயகனாக இன்னமும் மோகன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘ஹரா’ படத்தை காண பெண்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருகின்றனர். இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்களும் படத்தை வெகுவாக ரசிக்கின்றனர்.
பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளன. முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மோகன் முத்திரை பதித்துள்ளதால் இனி வரும் படங்களிலும் அவர் இதுபோன்ற பாத்திரங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
‘ஹரா’ படத்தில் மோகன் ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘ஹரா’ படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
‘ஹரா’ படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி, படத்தொகுப்பு: குணா, சண்டை பயிற்சி: விஜய் ஸ்ரீ ஜி .
இடைவேளைக்கு முன்பு வரை படம் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைந்ததாக பல விமர்சனங்கள் இருந்தது. இதனை எடுத்து யோகி பாபுவின் காட்சிகளையும் மற்ற தேவையற்ற காட்சிகளையும் ட்ரிம்மிங் செய்ய உள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
எனவே படத்திற்கு இந்த வாரம் மேலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Public appreciate Haraa for presenting good content





