தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
HARAA கவிஞராகவும் கலக்கும் விஜய் ஸ்ரீஜி..; மோகன் ரசிகர்களை கவர்ந்த ரஷாந்த் அர்வின்
வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹரா’.
‘ஹரா’ படத்தின் டிரைலரும் வெளியாகி இதுவரை 20+ லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..
இந்த மாதம் ஜூன் 7ம் தேதி ஹரா படம் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸை கொண்டாட காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
மலையாள நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் சீனியர் நடிகர் சாருஹாசன், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், ஜெயக்குமார், ரயில் ரவி, சுரேஷ் மேனன் தீபா ஷங்கர், சிங்கம்புலி, ஆதவன், அனித்ரா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரஹத் முனியசாமி மற்றும் மனோதினகரன் கையாண்டுள்ளனர்.
ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இந்த பட எடிட்டிங் பணிகளை குணா செய்து இருக்கிறார்..
இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி எழுதியிருக்கிறார்.
கயா முயா என்ற குத்து பாடலையும் படைத்தலைவன் என்ற அதிரடி ஆக்சன் பாடலையும் எழுதி இருக்கிறார்.. இத்துடன் வாடா மல்லி என்ற காதலர்களை கவரும் பாடலையும் மகளே.. என்ற தாலாட்டு பாடலையும் மற்றும் மருதாணி என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.
1980-களில் வெளியான மோகன் படங்கள் என்றாலே பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக எதிர்பார்ப்பு இருக்கும். இளையராஜா எஸ் பி பி கூட்டணிக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் மீண்டும் திரையில் நடிக்க இருப்பதால் மோகன் ரசிகர்கள் மீண்டும் மெலோடி பாடல்களை எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களை கவரும் விதமாகவும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப இசையையும் ரஷாந்த் அர்வின் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..
ஜூன் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இதன் வெளியீட்டை பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பெற்று வருகின்றன.
தமிழக வெளியீடு உரிமையை எல்மா என்ற நிறுவனமும் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் பெற்றுள்ளது.
‘ஹரா’ படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் கோவை மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ளனர்.
Mohans Haraa release and Jukebox updates





