தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்
தரணி இயக்கத்தில் விஜய் – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் – ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கில்லி’.
வித்யாசாகர் இசை அமைத்து இருந்த இந்த படத்தை ஏ.எம் ரத்தினம் தயாரித்திருந்தார். 20 வருடங்களுக்கு பின்னர் இந்த படம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் ரீ-ரீலீஸ் உரிமையை பெற்ற சக்திவேலன் ஃபிலிம் ஃபேக்டரி தமிழகமெங்கும் வெளியிட்டது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கில்லி படம் ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் நடிகர் விஜய்யை சந்தித்து.. “நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து இருந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகப் போட்டியாளராக கருதப்படும் நடிகர் அஜித் நடித்த பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் அஜித் பிறந்தநாளில் பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்கின்றனர்.
‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார்.
ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ‘பில்லா’ படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘பில்லா’ பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.
Ghilli and Billa movies re release news