அப்பாவி இளைஞனை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

அப்பாவி இளைஞனை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி தீப்தா (37), சில 18+ வெப் தொடர்களை இயக்கியுள்ளார். இளம் நடிகர் அளித்த புகாரைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

26 வயது இளைஞர் அளித்த புகாரில், “நடிகர்களுக்கான விளம்பரத்தைப் பார்த்து, படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு லக்ஷ்மி தீப்தாவை அணுகினேன்.

லட்சுமி என்னை ஆபாச காட்சியில் நடிக்க வற்புறுத்தியதால் மறுத்துவிட்டேன். அவர் என்னை 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று எச்சரித்தார்.

வெப் சீரிஸ் ஒளிபரப்பினால் எனது குடும்ப வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் தடை விதிக்க வேண்டும் என்றார் .
Female director arrested for forcing young man to act in 18 plus web series

நான் சொல்லி கேட்கல.. ‘வாத்தி’ தனுஷ் சொல்லி என் பையன் கேட்கிறான்.. – சாரா

நான் சொல்லி கேட்கல.. ‘வாத்தி’ தனுஷ் சொல்லி என் பையன் கேட்கிறான்.. – சாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக ‘சார்’ என்ற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வாத்தி

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது..

இந்தநிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாத்தி

இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது…

“இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னை கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டில் என் பையனை நான் படிக்க சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களை படிக்க சொல்லி உற்சாகப்படுத்துவதை பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது…

வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்கு சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

வாத்தி

my son listens ‘Vaathi’ Dhanush words says shara

‘வாத்தி’ வசூலை எண்ணிட்டிருக்கார் வம்சி அதான் இங்கு வரல.. – வெங்கி அட்லூரி

‘வாத்தி’ வசூலை எண்ணிட்டிருக்கார் வம்சி அதான் இங்கு வரல.. – வெங்கி அட்லூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘வாத்தி’ படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த விழாவில் இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசும்போது…

“இந்தப்படத்தின் கதையை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக இந்த படம் வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுக்கள் என இந்த படத்திற்கு பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் வம்சி இந்த படத்தின் வசூலை எண்ணிக் கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை..

இந்த படத்தை தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இந்தப்படத்தில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்.

வாத்தி

director Venky Atluri speech at vaathi success meet

8 நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘வாத்தி’

8 நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘வாத்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படம் 8 நாட்களில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

‘வாத்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்திய போஸ்டர் மூலம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை உறுதிப்படுத்தினர் மற்றும் இருமொழிகளில் உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ‘வாத்தி’ ரூ 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், தெலுங்கு பதிப்பான ‘சார்’ தெலுங்கு மாநிலங்களில் ரூ 25 கோடிக்கு அருகில் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் 16 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததால் படத்தின் வெளிநாட்டு வசூல் உறுதியாக உள்ளது.

‘Vaathi’ collects over Rs 75 crores in 8 days

வல்லரசு-வை விட நல்லரசு முக்கியம்.; விஜய் ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி அப்டேட்

வல்லரசு-வை விட நல்லரசு முக்கியம்.; விஜய் ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருநங்கைகளின் காதலை சொன்ன படம் ‘தாதா 87’ மற்றும் பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என சொன்ன படம் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் ஸ்ரீஜி.

தற்போது மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்ற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’ படத்தை இயக்கி வருகிறார்.

இதுபோன்ற சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் என்பவர் தயாரிக்கிறார்.

சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம்.

இந்த தசை சிதைவு நோயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும்.

தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர்.

தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு.?ஆகிறது என்பதையும் மையமாக வைத்து விஜய் ஸ்ரீ ஜி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும் என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

“இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல இந்தியா வல்லரசு நாடாக முன்னேற இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த செலவில் உள்நாட்டிலியே தயாரிக்க வேண்டியதும் அவசியம் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு,” என விஜய் ஸ்ரீ கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார்.

மேலும், முக்கிய கேரக்டர்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், ‘பேங்க்’ ராஜேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் கருத்தை அழுத்தமாகவும் அனைவரையும் சென்று சேரும் வகையிலும் சொல்வதற்கு வழக்கறிஞராக ஒரு முன்னணி நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிப்பில் தசை சிதைவு நோயை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

director vijay sri g next movie updates

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் காட்சிகள் ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறுகிறதா ?

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் காட்சிகள் ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறுகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

லாக்டவுன் நேரத்தில், இந்தியன் 2 படப்பிடிப்பை முடிப்பதற்குள் விவேக் இறந்துவிட்டார்.

இந்தியன் 2 கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனங்களால் புதுப்பிக்கப்பட்டபோது, ​​​​விவேக்கின் கதாபாத்திரத்தை ஒரு பிரபலமான நடிகர் மாற்றக்கூடும் என்றும் அவரது பகுதிகள் மீண்டும் புதிய நடிகருடன் படமாக்கப்படும் என்றும் பல தகவல்கள் வெளிவந்தன.

இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் பற்றி பேசிய சிம்ஹா, “விவேக் சாரின் பகுதிகள் கண்டிப்பாக படத்தில் இருக்கும் என்றார்.

Will late actor Vivek be seen in ‘Indian 2’?

More Articles
Follows