தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஆனாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.
நேறு மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியானது.
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.
‘துணிவு’ படத்தை ஜனவரி 11ஆம் தேதி வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.
எனவே வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது ஆனால் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாரிசு பணத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஜய்யின் வாரிசு படமும் இதே நாளில் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘துணிவு’ பட ட்ரெய்லரில் நான் ஒரு அயோக்கிய பய என்று கூறி இருப்பார் அஜித்.. ‘வாரிசு’ பட ட்ரைலரில் நான்தான் ஆட்ட நாயகன் என்று கூறியிருப்பார் விஜய்.
தற்போது ஆட்டநாயகன் & அயோக்கிய பயலும் மோத உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
கூடுதல் தகவல்…
‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை அமைச்சர் உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதே நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு உரிமையை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thunivu and Varisu will release on same day