#ShameOnUYNot… ‘ஜகமே தந்திரம்’ படக்குழு மீது கடுப்பான தனுஷ் ரசிகர்கள்

#ShameOnUYNot… ‘ஜகமே தந்திரம்’ படக்குழு மீது கடுப்பான தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்த படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக படம் வெளியீட்டுக்கு தயாரான போதிலும் கொரோனா ஊரடங்கு பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது.

எனவே பொங்கல் விருந்தாக ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்த்தனர்.

மேலும் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யக்கூடாது தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் படத்தின் ரீலீஸ் குறித்து எந்த அறிவிப்பையும் படக்குழு முடிவு செய்யவில்லை.

இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டு வருகின்றனர்.

Dhanush fans condemns about Jagamae Thanthiram release

Raise voice against #JagameThandhiram OTT release!!

#ShameOnUYNot

First Time Dhanushians Create Negative Tag – #ShameonUYNOT Regarding #JagameThandhiram On OTT

@dhanushkraja Thalaiva Sorry for this Tag but We need a clarification !!

புதுப் பொண்ணு ஆனந்தியின் புதுப்படம் ‘கமலி FROM நடுக்காவேரி‬’ ரிலீஸ் கன்பார்ம்

புதுப் பொண்ணு ஆனந்தியின் புதுப்படம் ‘கமலி FROM நடுக்காவேரி‬’ ரிலீஸ் கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கமலி FROM நடுக்காவேரி‬’.

இதில் கமலி என்ற கனமான கேரக்டரில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார்.

இவருடன் புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லட்சியம் ஒரு புறம் காதல் ஒரு புறம் என தவிக்கிறார் கமலி.

இரண்டையும் அவள் அடைந்தாளா.? என்பதுதான் படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாரான இப்படம் தற்போது பிப்ரவரி 19ல் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அண்மையில் ஜனவரி 16ல் கயல் ஆனந்திக்கு சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Anandhis Kamali From Nadukkaveri movie got release date

மதுரையில் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு கோயில்.; கும்பாபிஷேகத்தில் முதல்வர் & துணை முதல்வர் பங்கேற்பு

மதுரையில் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு கோயில்.; கும்பாபிஷேகத்தில் முதல்வர் & துணை முதல்வர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு மதுரையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூர் பகுதியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஏற்பாட்டின் பேரில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு தலா 400 கிலோ எடையில் முழு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நடைபெற்ற பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்து உணவளித்தனர்.

New Temple for Ex Chief Ministers MGR and Jayalalitha

ராஜஸ்தானில் ஸ்வெட்டர்.. அஜித் கால் ஜவ்வு கிழிந்தது..; மீண்டும் ரகளையில் தல-தளபதி ரசிகர்கள்

ராஜஸ்தானில் ஸ்வெட்டர்.. அஜித் கால் ஜவ்வு கிழிந்தது..; மீண்டும் ரகளையில் தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 13ல் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படம் நேற்று ஜனவரி 29ல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

இதில் காதல் கோட்டை பட காட்சியை தன் காதல் போல விஜய் சொல்வார்.

அப்போது மாளவிகா.. ‘ராஜஸ்தானில் ஸ்வெட்டரா.? என கலாய்ப்பார்.

இப்போது இணையத்தளத்தில் படம் வெளியாகிவிட்டதால் படத்தை நிறுத்தி நிறுத்தி பொறுமையாக பார்த்து வருகின்றனர்.

அப்படி ஒரு காட்சியை ஜூம் செய்து பார்த்து இருப்பார்கள் போல.. அதுவே தற்போது பிரச்னையாகிவிட்டது.

‘மாஸ்டர்’ படத்தில் ஒரு ஃபைட் சீனில் விஜய் கையில் வாலியுடன் எதிரிகளை அடித்து நொறுக்குவார்.

அப்போது, விஜய்க்கு பின்புறம் டீக்கடையில் இரண்டு வார இதழ்களின் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.

அதில் ஒரு அஜித் பட போஸ்டர் இருக்கும்.

அதில்… “அஜித் குதித்தார் கால் ஜவ்வு கிழிந்தது” என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருக்கும்.

இதனால் அஜித் ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

அஜித்தை விஜய் அசிங்கப்படுத்திவிட்டார் என அவரை திட்டி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அவர்களை அடுத்து விஜய் ரசிகர்களும் அஜித்தை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் இணையங்களில் சண்டை போட்டு வருகின்றனர் தல & தளபதி ரசிகர்கள்.

Again Vijay and Ajith fans clash due to Master movie scenes

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

இப்பட நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதில் சூர்யாவுடன் சத்யராஜ் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது குறிப்பிடத்தக்கது.

Suriya and Sathyaraj team up in Pandiraj direction

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gautham menon (2)மாநாடு & பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன், பத்து தல படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘பத்து தல’ படப்பிடிப்பு மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஆம்.. மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா பட இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் அப்பட தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற 12 நிமிடக் குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இதில் சிம்பு & த்ரிஷா நடித்திருந்தனர்.

Simbu and Gautham Menon joins 4th time

More Articles
Follows