தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாக்யராஜ் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட்டனாலும் அவர் இயக்கி நடித்த படங்களில் யாராலும் மறக்க முடியாத படம் முந்தானை முடிச்சு.
ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரித்த இந்த படம் 1983-ம் ஆண்டு வெளியானது.
தமிழில் ஹிட்டானதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக்கானது.
இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக வந்த செய்திகளை கடந்த மே மாதம் நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.
பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.
தற்போது ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம்.
ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது
இந்த படத்தில் இணைந்துள்ள குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது..
‘முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படத்தில் நடிக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.
Aishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequel