தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது.
இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
எனவே ஆகஸ்ட் 14 முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது… ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31 வரை.. காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.
இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 தேதி மட்டும் (செவ்வாய்கிழமை) முழு ஊரடங்கு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் நாளை ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது புதுச்சேரியில் 254 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 9 பேர் என 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,680 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் 3,828 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.