அப்பா மகள் பாசத்தை சொல்ல வரும் பிதா-க்கள் மிஷ்கின் & ‘பாக்ஸர்’ மதியழகன்

அப்பா மகள் பாசத்தை சொல்ல வரும் பிதா-க்கள் மிஷ்கின் & ‘பாக்ஸர்’ மதியழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskinஎக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் ‘பிதா’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.

மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘பிதா’ படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

இன்று காலை நடைபெற்ற சம்பிரதாயமான துவக்க விழா பூஜையில் ‘பிதா’ படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர்.

மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.

பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் ‘பிதா’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘சூரரை போற்று’ ரிலீசுக்கு முன்பே ரூ 25 கோடி லாபத்தை அள்ளிய சூர்யா

‘சூரரை போற்று’ ரிலீசுக்கு முன்பே ரூ 25 கோடி லாபத்தை அள்ளிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya soorarai pottruசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’.

ஜிவி.பிரகாஷ் இசையமைக்க நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை படமாக்கி உள்ளனர்.

எனவே இந்த படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் இதன் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு செலவு 30 கோடி என்றும், அதன் தமிழ்நாட்டு உரிமை மட்டும் 55 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் டி.வி. உரிமை இன்னும் விற்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

எனவே சூர்யாவின் லாபம் இன்னும் எகிறும் எனத் தெரிகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்யராஜ் & ஜெயராம் மகன்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்யராஜ் & ஜெயராம் மகன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sudha kongaraசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படம் கொரோனா பிரச்சினைக்கு பின்னர் வெளியாகவுள்ளது.

இதனிடையில் இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

இவருடன் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ஆணவக் கொலைகளை மையப்படுத்தி ஓர் ஆந்தலாஜி படமாக உருவாக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரிஸில் சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏன் இப்படி பண்றாங்க..? பாயல் ராஜ்புட்டை புலம்ப வைத்த ‘இந்தியன்2’ வதந்தி

ஏன் இப்படி பண்றாங்க..? பாயல் ராஜ்புட்டை புலம்ப வைத்த ‘இந்தியன்2’ வதந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

payal rajputகமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘இந்தியன் 2’.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் கமலுடன் முதன் முறையாக இணைந்துள்ளார் காமெடி நடிகர் விவேக்.

இவர்களுடன் டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பாயல் ராஜ்புட் நடனமாடுகிறார் என்கிற தகவல் பரவியது.

இது குறித்து பாயல் ராஜ்புட் அளித்துள்ள விளக்கத்தில்….

தயவு செய்து இது போன்ற பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம். இது போன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என தெரியல.

மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன் என்று வதந்தியும் பரவுது

என பொய்யான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாயல்.

டிவியில் பிரபலமான சன்ன மேரேயா பஞ்சாபி படம் மூலம் சினிமாவுக்கு வந்தார்.

கார்த்திகேயாவின் RX 100 படம் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் பாயல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் தமிழ்மாமணி மன்னர் மன்னன் காலமானார்!

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் தமிழ்மாமணி மன்னர் மன்னன் காலமானார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mannar mannan*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி அவர்கள் இன்று 06-07-2020 பிற்பகல் புதுச்சேரியில் காலமானார்.*

அவருக்கு வயது 92 . கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார்.

பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக் கட்டிடம் கட்டித்தந்தார்.

தமிழக அரசின் திரு.வி.க விருது கலைமாமணி விருது புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார்.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி முன்னாள் முதல்வர் எம்.ஜி ‌ஆர். ஜெயலலிதா தலைவர்கள் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார்.

இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

புதுச்சேரியில் ஜூலை 7 மாலை 4 மணியளில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் .

இந்தத் தகவலை மன்னன் மகன் பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவர் கவிஞர் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.
Attachments

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bhuvanaதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் புவனா. பத்திரிகையாளராக தனது கேரியரைத் தொடங்கிய இவர், விபி பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், 2005 ஆம் ஆண்டு ரைட்டா தப்பா என்ற படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தார். அந்தப்படம் வணிகத்தை விட விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழக அரசின் 2 மாநில விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. தன்னை இன்னும் மெருகேற்றுவதற்காக அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்தார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட பல கோர்ஸைகளையும் முடித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

இவர் இதற்கு முன் பல குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு “காதலிக்க நேரமுண்டு” என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் தொடங்க இருக்கிறது.

இவர் புவனா மீடியா என்ற இணையதளத்தையும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மிக முக்கியமாக விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே.. 2009-இல் வெளியானது இந்தக் குறும்படம். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதால் இவரது மீடியா தளம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தரமான அறம் சார்ந்த படத்தை அடுத்த வருடம் தர இருக்கிறார்.

More Articles
Follows