தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் தூய்மைபணியாளர்கள், மற்றும் ஏழைகள் உள்ளிட்ட 1300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கமல் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
“உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா உள்ளது. 2-ம் உலக போரை விட பாதிப்பு அதிகம். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார்.
அரசியல் மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.
கொரோனாவை சமாளிக்க முடியாமல் மற்ற நாடுகள் திணறி வரும் போது இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது.
தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசுகிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்றார்.
இதனையடுத்து நடிகை ஜோதிகா மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய கேள்விக்கு… “உலகளாவிய பிரச்னையாக கொரோனா இருக்கும் போது ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும்.
இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்றார் அமைச்சர்.
Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement