தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டு இருந்தார் பிரதமர் மோடி.
அதே சமயத்தில் பாதிப்பு குறைவான இடங்களில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் சிலவற்றில் தளர்வு ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில…
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம்.
சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.
கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்களுக்கு தடை தொடரும்.
கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.
நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Guidelines and relaxation criteria for lockdown after 20th April