32 ஆண்டுகளை கடந்த ‘மிஸ்டர் இந்தியா’

32 ஆண்டுகளை கடந்த ‘மிஸ்டர் இந்தியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சில சமயங்களில், இந்திய சினிமா தனது ரசிகர்களுக்கு காலத்தால் அழியாத மாபெரும் படைப்புகளை வழங்கியிருக்கிறது. இதை வெறும் படைப்புகள் என்பதையும் தாண்டி, ‘கிரவுண்ட் பிரேக்கர்ஸ்’ என்றும் கூறலாம். அதாவது இவை சினிமா பார்க்கும் அனுபவத்தையே முற்றிலுமாக புரட்டி போட்டவை. அந்த வகையில், ஒரு சில திரைப்படங்கள் தான் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கும் அதே கொண்டாட்டங்களுடம் கடந்து செல்லும். 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா திரைப்படம் சந்தேகத்திற்கு இடமின்றி மாயாஜாலம் நிகழ்த்தி பல ஆண்டுகளுக்கு அப்பாலும் பரவியுள்ளது, பல கோடி ரசிகர்களின் விருப்ப படமாக இருந்து வருகிறது. “32 YEARS OF MR INDIA” என்ற தலைப்பு சமூக வலைத்தளங்களில், இணைய தளம் மற்றும் மீடியா சேனல்களில் பேசப்பட்டு வருவது படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல், பாலிவுட்டின் முதல் அறிவியல் புனைவு பொழுதுபோக்கு படமான இதை பெரிய திரையில் கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் பழைய நினைவுகளை தூண்டியுள்ளது.

அருண் பையா, சீமா திதி, குழந்தைகள், காலண்டர், எவர்கிரீன் பாடலான ஹவா ஹவா பாடல், அதன் இசை மற்றும் அதற்கு நடனம் ஆடிய காலத்தால் அழியாத அழகு ராணி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு மற்றும் 90களையும் தாண்டி 2000களின் குழந்தைகளும் ரசிக்கும் ஸ்ரீதேவியின் சார்லி சாப்ளின் ஆகியவற்றை எல்லாம் யாரால் மறக்க முடியும். எல்லாவற்றிற்கும் மிரட்டலான, பயமுறுத்தும் மொகம்போவும், அவர் பேசும் “மொகம்போ குஷு ஹுவா”வை இந்தி தெரியாத மக்களும் வெகுவாக ரசித்தனர். இந்தியாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கபூர் இயக்க, ஒரே படத்தில் எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோவாக மாறிப்போன அனில் கபூர் நாயகனாக நடித்திருந்தார். போனி கபூரின் மிக பிரமாண்டமான தயாரிப்பில் உருவான இந்த படம் யாராலும் மிஞ்ச முடியாத ஒரு தலைசிறந்த படமாக அமைந்தது. கூடுதலாக, சதீஷ் கவுசிக்கின் காலண்டர் கதாபாத்திரம், எடிட்டர் கெய்டனாக அனு கபூரின் பொழுதுபோக்கு பகுதி, லக்ஷ்மிகாந்த் பியாரி லாலின் மெல்லிய மற்றும் மயக்கும் பாடல்கள், சரோஜ் கான் நடனம் மற்றும் சலிம் ஜாவேத் திரைக்கதை படத்தை மேலும் அழகாக்கிய சிறப்பம்சங்களாக இருந்தன.

மிஸ்டர் இந்தியாவின் 32வது பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், படக்குழுவினர் இந்த படத்தின் மறக்க முடியாத தூண்களை நினைவு கூர்கிறார்கள். இது அவர்களின் ஆன்மாவின் அர்ப்பணிப்பு, இது அவர்களை வாழ்கின்ற மக்களின் மனதிலும், நினைவுகளிலும் வாழ செய்கிறது. அந்த வகையில் ஸ்ரீதேவி போனி கபூர் மற்றும் வீரு தேவ்கன் (சண்டைப்பயிற்சி இயக்குனர் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை) ஆகியோரை நினைவு கூர்கிறார்கள்.

‘பொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’!

‘பொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபொம்மியும் திருக்குறளும்… சுட்டி டிவியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி, முதல் முறையாக திருக்குறளை அனிமேஷன் மற்றும் நிஜ பாத்திரங்கள் வழியே தமிழ் கூறும் நல்லுலகுக்கு எடுத்துச் செல்கிறது.

கஸ்டோ ஸ்டுடியோவின் மாபெரும் தயாரிப்பான இந்த நிகழ்ச்சியை அனிமேஷன் பாத்திரங்களுடன் தொகுத்து வழங்குபவர் இலக்கியத்தரமான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர், சீரிய தமிழறிஞர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன்.

தமிழில் இதுவரை யாரும் செய்திராத புதிய முயற்சியாக, உலக மறை திருக்குறளை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்துள்ளது?

“மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உண்மையில் நானே எதிர்ப்பார்க்காத வரவேற்பு இது. சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு மூன்று வயது சிறுமி என்னிடம் வந்தாள். ‘நீ நல்லா பேசுற… என் தம்பிக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்’ என்றாள். அவள் தம்பிக்கு 2 வயதுதான். அவனையும் அழைத்து வந்தாள். பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சியை அவன் தவறாமல் பார்த்து எனக்கு ரசிகனாகிவிட்டான்.

தமிழகத்தில் பலருக்கும் நான் ஓரளவு பரிச்சயமானவன் என்றாலும், இந்த பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சியில் பார்த்த பிறகு ஏராளமான குழந்தைகள் எனக்கு ரசிகர்களாகிவிட்டார்கள். அண்மையில் ஒரு பள்ளியில் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என விவாதம். அதில் இறுதியில் என் பெயரை முடிவு செய்தார்கள். காரணம், இந்த பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி என அந்தப் பள்ளிக்குச் சென்ற போது ஆசிரியர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இங்கு மட்டும் அல்ல அயலகத்திலும் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிகழ்ச்சி,” என்கிறார் பேராசிரியர் கு ஞானசம்பந்தன்.

இந்த நிகழ்ச்சியில் தோன்றியதிலிருந்து தினசரி அவருக்கு ஏராளமான பாராட்டுக் கடிதங்கள், பலதரப்பட்ட பார்வையாளர்களிடமிருந்தும் வருகிறதாம்.

உலகளாவிய பார்வை கொண்ட திருக்குறளுக்கு இந்த நூற்றாண்டில் சுட்டி டிவி செய்யும் தொண்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்பது பொதுவெளியில் பரவி வரும் பரவலான கருத்து.

சுட்டி டிவியில் தினமும் பிற்பகல் 1.30 முதல் 2.00 மற்றும் மாலை 5.30 – 6.00 மணி வரை பொம்மியும் திருக்குறளும் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடருக்கு திரைத் துறையின் ஜாம்பவான்கள் பலரும் பங்களித்துள்ளனர்.

பொம்மியும் திருக்குறளும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கருத்து வடிவமைப்பு: தோட்டா தரணி
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
பாடல்கள்: பா விஜய்
கருத்துருவாக்கம் – கவிதா ஜாபின் சன் நெட்வொர்க் & கஸ்டோ ஸ்டுடியோ
திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்டோ ஸ்டுடியோ
டைட்டில் பாடல் இசை: டிமோதி மதுகர்

மீண்டும் பிரதமரான மோடிக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் வாழ்த்து.!

மீண்டும் பிரதமரான மோடிக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த இந்திய தேசத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் பொதுமக்களின் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்று அமோகமான முறையில் மீண்டும் பிரதமர் பதவி ஏற்றிருக்கிறார் திரு. நரேந்திர மோடி.

இந்த சூழலில் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் அவருக்கு மனப்பூர்வமான இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்து தரப்பு சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பிரதமர் இருப்பார் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.எனவே வரும் காலங்களில் ஒரு வசந்த காலத்தை உருவாக்கும் வகையில் பிரதமர் செயல்படுவார்.

அமைதியும், சமாதானமும் இந்தியாவின் இறையாண்மையும் கட்டிக் காக்கப்படும் என்ற நம்பிக்கையை தரும் வகையில் பிரதமரின் பணி இருக்கும் என்று நம்புகிறோம்.மீண்டும் அனைத்து இஸ்லாமியர்களின் சார்பில் ஹஜ் அசோசியேசன் பிரதமருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இப்படிக்கு,
தலைவர்,
பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேஷன்

India Haj Association wishes Prime Minister Modi

காரைக்கால் அம்பகரத்தூரில் பரத்வாஜ்ஜின் இன்னிசை மழை

காரைக்கால் அம்பகரத்தூரில் பரத்வாஜ்ஜின் இன்னிசை மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Bharadwaj Orchestra happened at Karaikal Ambagarathur templeஅம்பகரத்தூர் அருள்மிகு பத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் மகிஷ சம்ஹார நினைவு பெருந்திருவிழா 2019 வை முன்னிட்டு நாளது 28.5.2019 நடந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ் குழுவினர் வழங்கும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன் கோயிலின் மகிமை பற்றிய ஆன்மீக பாடலை அம்பையை சேர்ந்த கனடா வாழ் ஸ்ரீராம் அவர்களின் வரிகளில் கலைமாமணி பரத்வாஜ் அவர்களின் இசையமைப்பில் அபிநயா சரவணன் குரலிசையில் பாடல் தொகுப்பினை இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள் வெளியிட நிர்வாக அதிகாரி சுந்தர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கோயில் அறங்காவலர் வாரிய தலைவர். கே. பாஸ்கரன், இராமலிங்கம் (எ) இளமாறன், துணை தலைவர். செயலாளர். பி. கலியபெருமாள் (எ) ரமேஷ், பொருளாளர். v.p. காமராஜ், உறுப்பினர். கே. ஐயா சாமி அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திரு. ராதாகிருஷ்ணன், கோயில் கட்டடக்கலை நிபுணர் Ar.N.சரவணன், உள்ளூர் நாடக கலைஞர்கள் திரு. ராஜேந்திரன், காளிதாஸ் மற்றும் K.R.M. பள்ளி உரிமையாளர் முருகேசன், கோயில் அதிகாரி திரு. ஆனந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Music composer Bharadwaj Orchestra happened at Karaikal Ambagarathur temple

உலகின் மிகப்பெரிய சூர்யா கட் அவுட்க்கு கெட் அவுட் சொன்ன அதிகாரிகள்

உலகின் மிகப்பெரிய சூர்யா கட் அவுட்க்கு கெட் அவுட் சொன்ன அதிகாரிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK releaseசூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கியுள்ள படம் தான் என்.ஜி.கே.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், திருத்தணியில் உள்ள சூர்யா ரசிகர்கள் வான் உயர்ந்த கட்-அவுட்டை வைத்துள்ளனர்.

இந்த கட் அவுட் உயரம் 215 அடி என்பதால் இதுவே உலகின் மிகப்பெரிய கட் அவுட் என சாதனை படைத்தது.

எனவே இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் முறையாக அனுமதி பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கட்-அவுட்டை அகற்றினர்.

இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Suriyas record breaking NGK cutout removed

இது எங்க இந்திய கலர்..; 2 கோடி விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

இது எங்க இந்திய கலர்..; 2 கோடி விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sai Pallavi rejects fairness advertisement worth Rs 2 croreதமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.

இவர் சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இவர் ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்க வந்த ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

அது பற்றி அவர் கூறியதாவது…

நான் ஒரு டாக்டர் என்பதால் கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படும் அழகு பொருட்களெல்லாம், உடலுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பது நன்றாகவே தெரியும்.

அப்படியிருக்கும்போது, முக அழகு கிரீம் ஒன்றில் நடிக்க கேட்டனர்.

பணத்துக்காக, உடலுக்கு ஆபத்தான ஒரு விஷயத்துக்கு நாமே ஏன் மாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

எனவே விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டேன். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்.

எனக்கு வாழ்க்கையில் பெரிய தேவைகள் இல்லை. அதனால், பணம் ஒரு பொருட்டல்ல.“ என தெரிவித்துள்ளார்.

Sai Pallavi rejects fairness advertisement worth Rs 2 crore

More Articles
Follows